
உங்களின் பண்ணையில் ஒரு மிருகம் நாவல்Murugesu Natkunathayalan இப்போது படித்து முடித்தேன்.
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன்.
சலிப்பில்லா நகர்வு.
நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம்.
படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன்.
ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள்.
நெருடியவை:
இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது.
கதை முடிவுக்கு வந்தமை ஒரு ஆவியின் வாக்கு மூலத்தால் உள்ளமை.
ஆவிப் பிரசன்னம் மறுக்கப்படாமல் மாக்சின் சிந்தனைபற்றி ஆங்காங்கு கூறப்பட்டமை முற்றிலும் முரண்பாடாக உள்ளது.
மேஸ்திரி பாத்திரம் தண்டனை பெறாது கற்பகம் சிவப்பியின் குட்டியாகித் தண்டனை கொடுத்தமை ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தம்.
விறுவிறுப்பான ஒரு நாவல். நாவல் என்பது களத்தோடு ஒன்றி களமாகவே மாறிவிடவேண்டும். இந்த வகையில் இந்த நாவல் உதாரணமாகிறது. பண்ணையை மறக்க முடியாதளவுக்கு நாவல் அமைந்துள்ளது. இது நாவலாசிரியனின் வெற்றியாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்