கர்ப்பம் : கடிதம்

அகழ் தளத்தில் உங்கள் சிறுகதை படித்தேன்.

“நான் ஒரு மிருக வைத்தியர் ”  என அடக்கமாக தொடங்கும் கதை நேர்கோட்டில் செல்லாமல் பல பரிமாணங்களை தொட்டுச் செல்கிறது. 

சோபியா கற்பனைப் பாத்திரமா அல்லது கடந்து சென்ற கனவுக்கன்னியா என ஒரு குறும்பு மின்னல் என் மனதிலும் தோன்றி மறைந்தது என்பது உண்மையே. மனைவியையும் கதைக்குள் உட்காரவைத்து தப்பித்துக் கொண்டீர்கள்!

சோபியாவின் சீண்டல்கள் கதைக்கு ஒரு கிளுகிளுப்பைத் தந்தாலும் அவற்றிற்கு பின்னால் ஒரு சோகக்கதை உண்டு என்பதை கதை விரிந்து போகும் போது வாசகன் உணர்கிறான்.

சினிமாத்தனம் இல்லாத சம்பவக்கோர்வைகள் கதைக்கு வலு சேர்க்கின்றன. 

ஒரு நாயின் போலிக் கருக்கட்டல் தட்டி வைத்த ஒரு சிறு பொறியில் பற்றிய நினைவுத் தீ ஒரு உணர்ச்சி பிரளயத்தை கதை சொல்லியில் ஏற்படுத்தியது நியாயமானதே.

ரசித்தது :

“பிற்காலத்தில் அம்பறாத்தூணியில் வேறு அஸ்திரங்கள் இல்லாத போது இது கர்ணனின் நாகாஸ்திரமாக உபயோகிக்கப்படும் என்பது எனக்கு தெரியும் “

“நினைவுகள் முட்டையிட்டன”

” கற்பனைகள் நிலத்தில் விழுந்த முட்டையாகின” 

மொத்தத்தில் ஒரு நல்ல புனை கதையை படித்த திருப்தி.

அன்புடன்

கிறிஸ்டி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.