நாவல் வரலாறு – சுருக்கமானது .

நாவலின் வரலாறு.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் ( ஓகஸ்ட் ) 15 ஆம் திகதி நடத்திய – போர்க்கால இலக்கியம் – தொடர்பான  இணைய வழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட தொடக்கவுரை

நடேசன்

நாவல் இலக்கிய வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.

100000 வருட மனித வரலாறு கதைகளால் நிரம்பியுள்ளது. மொழி தோன்றாத காலங்களில் பாறைகளிலும் குகைகளிலும் எமது முன்னோர்கள் எழுதினார்கள் . எகிப்தியர் பப்பரசு என்ற புல்லிலும், இன்காக்கள் நூல் முடிச்சுகளாகவும் , நாம் ஓலைகளிலும் எழுதினோம் . கனடாவிலும் அலாஸ்காவிலும், அங்குள்ள ஆதிக்குடிகள் தங்கள் கதைகளை மரக்கம்பங்களில் , ஓவியங்களாக வரைந்தும் செதுக்கியுமிருந்தார்கள்.

நம்மைப் பொறுத்தவரை தமிழ் எழுத்தின் தோற்றக்காலத்தைச் சொல்லமுடியாதபோதிலும்,  நம் கதைகள் 20000-30000 வருடங்களிலிருந்து அவை செய்யுள் எனப்படும் வார்த்தைகளாக  இராகத்துடன் பாடல்களாக உச்சரிக்கப்பட்டிருக்கின்றன. காரணம் இராகம் எமது மூளையின் மடிப்புகளில் படிந்திருக்கும். இதனால் பழைய பாடல்களை இன்னமும் குளியலறையில் முணுமுணுக்கிறோம்.

ஒருவரது  மூளையிலிருந்து அடுத்தவரது மூளைக்கு இராக லயத்தோடு மந்திரங்கள் கடத்தப்படுவதை இந்த வருடமும் இந்தியாவில்  கங்கை நதிக்கரையில் பார்த்தேன் . Wi fi காலத்திலும்  இந்தப் பழையமுறை மாறவில்லை.

நாவல் என்றால் என்ன?


நாவல் – தொடர்ச்சியாக வசனத்தில் எழுதப்பட்ட நீண்ட கதை. இந்த வடிவம் அதற்கு முன்பு செய்யுள், நாடகம் என இருந்த இலக்கிய வடிவங்களிலிருந்து மாறுபடுகிறது.

150-200 பக்கங்கள் நீளமானது.

நாவல் என்ற இலக்கிய வடிவம் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகியது. காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமானது – புத்தகங்கள் பதிக்கக் கூடிய அச்சுத்தொழில் ஐரோப்பாவில் உருவாகியதுதான். அதற்கு அப்பால் தொழில் வளர்ச்சியால் உருவாகிய பணத்தால் , கல்வியறிவு பெற்ற மத்திய வகுப்பு உருவாகியது. அதிலும் பெண்கள் கல்வியறிவைப் பெற்றாலும்,  அவர்கள் அக்காலத்தில் வெளிவேலைகளில் ஈடுபடவில்லை. வீட்டில் குடும்பம் என்ற வட்டத்தில் சுழன்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மலிவான பொழுதுபோக்கு சாதனம் தேவைப்படுகிறது. இதனால் பல நாவல்கள் பெண்களைக் கவர்வதற்காக எழுதப்படுகிறது. பல பெண்களாலும் எழுதப்பட்டன.

ஐரோப்பாவில் கைத்தொழிற் புரட்சி நடந்த முதல் நாடு பிரித்தானியா என்பதால்,  நாவலின் தோற்றம் அங்கே இருந்து தொடங்குகிறது

18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் ஆரம்பித்த நாவல் வரலாறு- ஆங்கில நாவல் வரலாறு என்றே சொல்லமுடியும்.

ஆங்கிலேயத் தாக்கம் உலகெங்கும் பரவும்போது மற்றைய மொழிகளில் நாவல்கள் வருகிறது.


ஆரம்பத்தில் கற்பனையாக சக்திவாய்ந்த வீரர்களாகவும் வல்லவர்களாகவும் ஆண்கள் வரும் அரச வம்ச கதைகளாகப் பேசப்பட்டவையே ரோமன்ரிக் காலமென்கிறார்கள்

(Romance- Remote, Exotic and fairy tale)

பின்பு அமரோரி கதைகள் (Amatory tale)என்னும் கடல் மாலுமிகளது காம நடவடிக்கைகள் கதைகளாகின்றன.

Eliza Haywood நாவல் என எழுதியவை பிற்காலத்தில் அமரோரி கதைகள் என்கிறார்கள்.

தமிழில் எப்படி ஆரம்ப நாவல்களில்  (1879 இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய- பிரதாப முதலியார் சரிதம்). சரித்திரம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்றால், அதுவும் பிரித்தானியாவிலிருந்தே வந்தது.

ஆங்கிலத்தில் இன்னமும் 100 சிறந்த நாவலில்  ஒன்றாகப் பேசப்பட்டு வரும் The History of Tom Jones  நாவல் 1749 Henry Fielding என்பவரால்  எழுதப்பட்டது

யதார்த்தமான நாவல் வடிவம் வரும்போது,  மேற்கூறிய கதைகள் முழுமையான பாத்திரங்களைக் கொண்ட கதைகளாக மாறுகின்றன.

ஆங்கிலத்தில்( specificity, particularity, and concreteness ) பாத்திரப்படைப்புகளாகின்றன. முக்கிய பாத்திரங்கள் வித்தியாசமான குணநலன்களுடன் வருகின்றன.  சமூகவியலையும் மனிதர்களது மனவெளிப்பாட்டையும் பேசுகின்றன.  காலம் , இடத்திற்கு ஏற்ப அமைகின்றபோது கதைகள் யதார்த்தமான பாணியாக அமைந்துவிடுகிறது .


கிட்டத்தட்ட 150 வருடங்கள் கடந்த பின்பு,  குறிப்பாக முதலாம் உலகப்போரின் பின்பு நவீன நாவல்களாக மாறும்போது மனித சிந்தனைகளை( Stream of Consciousness) உள்ளடக்கி வருகின்றன. அத்துடன் கடவுள் என்ற பாத்திரம் இல்லாது போகிறது. இவை இலக்கியத்தில் மட்டுமல்ல,  ஓவியம் கட்டிடக்கலையிலும் ஏற்படுகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு,  பின் நவீனத்துவம், யதார்த்தத்தை மறுத்து,  மாயா யதார்த்தம் விஞ்ஞான கற்பனை எனப் பல திசைகளில் செல்கிறது. கலந்தும் செல்கிறது (Pastiche, Intertextuality, Metafiction, Temporal Distortion, Minimalism Maximalism, Magical Realism, Faction, Reader Involvement)

நாவல்கள் யதார்த்தம், நவீனம் மற்றும் பின் நவீனம் கலந்தும் படைக்கப்படுகிறது.

—0—


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: