மச்சுபிச்சு

img_7088img_7078
என் வாழ்க்கையில் இவ்வளவு அழகானது மட்டுமல்ல, வரவேற்று உபசரிப்பும் கொண்ட இரயிலைக் கண்டதில்லை. வர்ணிக்க விரும்பினால் வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும்.

காலை நேரத்தில் இன்கா தலைநகரானன குஸ்காவில்இருந்து மச்சுப்பிச்சு செல்வதற்காக நாங்கள் ஏறிய சொகுசு இரயில் மச்சுபிசுவைக் கண்டறிந்த ஹரன் பிங்கம் என்ற ஜேல் பல்கலைக்கழகப் சரித்திரப் பேராசிரியரின் பெயரில் பெரு அரசால் நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் சேவைகளும்நேர்த்தியாக நடத்த முடியும் என்பதற்கு இந்த இரயில் உதாரணமாக இருந்தது. மிகவும் வசதியான நாற்காலிகள் மேசைகள்அதன் மேல் மேசை விரிப்புகள் மற்றும் உணவுக் கரண்டிகள் கத்திகள் என ஐந்து நட்சத்திர ஹோட்டேல் ஒன்றின்உணவுச்சாலையாகக் காட்சியளித்தது. பரிமாறுமவர்கள் தொழில்முறையாகவும் கனிவாகவும் நடந்தார்கள். இந்த இரயில்அந்தீஸ் மலைகளை ஊடுறுத்து கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்தில் மச்சுப்பிச்சு செல்லும்.

இரயில் புறப்படுவதற்கு முன்பாக பாடி ஆடி வரவேற்று பிரயாணிகளை இரயிலில் ஏற்றிய பின்பு ஆசனங்களில்அமர்ந்தவுடன் உணவுகள் பரிமாறினார்கள்.இரயிலும் பாட்டு நடனம் தொடர்ந்து நடந்தது. தென்னமரிக்காவில் பாட்டுகள்,நடனங்கள் எனக்கொண்டாட்டங்கள் நடப்பதற்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. அவர்கள் இரத்தத்தில் ஊறியது.ஸ்பானியார்கள் காலத்தில் மட்டுமல்ல இன்காக்களின் காலத்திலும் கிராமங்கள் தோறும் பண்டிகைகளை நடத்திஅவர்களுக்கே உரிய பியரை இலவசமாக வழங்கி பண்டிகையையும் அரச செலவில் நடத்துவார்கள்.

ஒருவித இராஜகாரியமாக உடல் உழைப்பை மக்கள் வரியாக அரசனுக்குக் கொடுப்பார்கள். நாணயமற்றபொருளாதாரத்தில் உற்பத்தியான உணவு, உடை மற்றும் கைவினைப் பொருட்களில் ஒருபகுதி அரசனுக்கு வரியாகக்கொடுக்கப்படுவதால் அரசர்கள் அதற்கு நன்றிசெலுத்தும் முகமாக இந்தப் பண்டிகைகளை ஒவ்வொரு ஊரிலும் அரசசெலவில் நடத்தித் தங்கள் நன்றியை மக்களுக்குத் தெரிவிப்பார்கள்.

அந்தீஸ் மலைப்பிரதேசம் உடை உணவுப்பற்றாக் குறையற்ற பிரதேசமாகக் காலம் காலமாக இருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இவர்களிடம் நிலையானஇராணுவம் இருக்கவில்லை. விவசாயமற்ற காலத்தில் விவசாயிகளே இராணுவ காரியங்களில் ஈடுபட்டார்கள்.

இந்த நேரத்தில் எகிப்தியர்கள் தங்களது உபரி உணவைப் பாவித்து வரலாற்றில் முதன்முறையாகத் தனியானஇராணுவத்தை வைத்திருந்தனர். 3000 வருடங்கள் ரோமரின் படையெடுப்பு நடக்கும்வரை எகித்திய அரசுகளும்கலாச்சாரமும் தொடர்ச்சியாக நிலைத்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இரயிலில் தேவைக்கு அதிகமான உணவும், வைனும் கிடைத்தது ஆனால் பெருவில் இருக்கும் வரையும் மதுபானம்அருந்துவதில்லை என உறுதி கொண்டிருந்தேன். ஏற்கனவே தலை இறுக்கமாக இருந்தபோது ஹோட்டலில் இருந்தஒட்சிகன் சிலிண்டரில் இருந்து சுவாசித்தேன். பிஸ்கோ சவர் எனப்படும் பிரத்தியேகமான பெருவின் மதுபானத்தை நாக்கால் மட்டும் நனைத்தேன். நமது ஊர் தென்னங்கள்ளின் சுவை தெரிந்தாலும் தொண்டைக்குள் இறங்கஅனுமதிக்கவில்லை.

அந்த இரயிலின் கடைசிப் பெட்டியில் நடந்த நடனங்களையும் பாட்டையும் இரசிக்க மற்றவர்கள் சென்றபோது நான்யன்னலோரமாக இருந்து ஊர் பார்த்தேன். நடனங்கள் எங்கும் பார்க்க முடியும்தானே?

உயரத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் கீழே நோக்கிச் செல்வதால் ஆரம்பம் அதிகம் பசுமையற்ற இடமாக இருந்தது. ஆனாலும் அழகான பனி படர்ந்த மலைச் சிகரங்கள், அதனிடையே பாம்பாக நெளியும் ஆறுகள், அதன் புருவங்களாகஅவுஸ்திரேலிய யூகலிகப்ரஸ் மரங்கள் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்தன.

மச்சுபிச்சுபகுதியை நெருங்கும்போது காடு மிகவும் பசுமையாக, அடர்த்தியாக இருந்தது. இந்தக் காடுகளே 500 வருடங்களாக மச்சுபிச்சுவின் இரகசியத்தை ஸ்பானியர்களிடமிருந்து பாதுகாத்தது. அந்தக் காடுகளுக்கு மனத்தால் நன்றி சொன்னேன்.

ஆறுகளை அண்டிய பள்ளத்தாக்குகளில் தற்பொழுது மாடுகளை வைத்து உழுகிறார்கள். ஸ்பானியர்கள் மாடுகள், குதிரைகளை அமரிக்காவிற்கு எடுத்துச் சென்றார்கள்.

மச்சுபிசுவுக்கு, குஸ்கொவில் இருந்து நடந்து போவதற்கு நான்கு நாட்கள் எடுக்கும் இதை இன்கா பாதை எனச்சொல்வார்கள் சமீபத்தில் இந்தத் தூரத்தை மரதன் ஓடிய ஒருவர் மூன்றரை மணி நேரத்தில் கடந்தார். இன்காக்கள் காலத்தில் செய்திகள் இப்படி ஓடுபவர்களாலே (Chaskis)கடத்தப்படும். ஒருவர் 10 இருந்து இருபது கிலோமீட்டர் ஓடி கீப்புமுறையில் செய்தியை மற்றவரிடம் கொடுப்பார் அவர் அதை பெற்றுக் கொண்டு ஓடுவார். இவர்களே இன்காக்களின் தபால்ச் சேவையாளர்கள்

ஒவ்வொரு நாளும் மச்சுபிச்சுவைப் பார்ப்பதற்கு குறிப்பிட்ட அளவே அனுமதிப்பார்கள்.அதனால் முன்பே அனுமதிச் சீட்டுகள் பெற்றிருக்கவேண்டும்.

ஹரன் பிங்கம் ஜேல் பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர். பல முறை தென்னமரிக்க வந்த போது இன்காகளின்தொலைந்த நகரைப் பார்ப்பதற்கு ஆவலாக குஸ்கோவில் இருந்து ஒரு பொலிசை தனது வழிகாட்டியாகக் கொண்டு இன்காபாதை வழியாக வந்தார் அப்பொழுது சிறு ஹோட்டலில் தங்கி உணவுண்டு இரவைக் கழித்தார். அடுத்த நாள் காலை ஒருஅந்திஸ் ஆதிவாசிக் குடும்பத்தினரிடம் இப்படி அழிந்த நகரத்தைக் காட்டுவதற்காக கேட்டபோது அந்தக் குடும்பத்தில்உள்ள சிறுவனை வழிகாட்டுவதற்காக விட்டுவிட்டு அந்தக் குடும்பம் தங்களது விவசாய வேலைகளைக் கவனிக்கச்சென்றது.

அதிக தூரம் அவர்கள் செல்லவேண்டி இருக்கவில்லை. அவர்கள் குடிசையின் சிறிது தூரத்திலே அழகாகக் கட்டப்பட்டிருந்த மச்சுபிச்சு இருந்தது ஆனால் எல்லா இடத்தில் மரங்கள் வளர்ந்து முற்றாக வெளியுலகத்தில் இருந்து மறைந்திருந்தது. அந்தப் பகுதி மக்கள் அருகே சில இடங்களில் மரங்களை வெட்டிக்குடிசைகள் போட்டிருந்தார்கள்.

உலக அதிசங்களில் ஒன்றாகக் கருதப்படும் மச்சுப்பிச்சு அங்கு இருந்தது அங்கு வாழ்ந்த அந்திஸ் மக்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதைப் பொருட்டாக மதிக்கவில்லை. மேற்கு நாட்டவர்கள் அதைக் கண்டுபிடித்தாகச் சொல்வதில் உண்மை அமரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடித்தது போன்ற ஒன்றாகும். இந்த இடத்தைக் கண்டு பிடித்த 20 நூற்றாண்டின் மிகப்பெரும் சாதனையாகவும் பேராசிரியர் ஹரன் பிங்கம் முக்கியமானவராகவும் கருதப்பட்டுகவுரவிக்கப்பட்டுள்ளார்.

1952 இங்கு வந்த சேகுவாரா ‘தென்னமரிகாவின் கடைசிச் சுதந்திர மனிதர்கள் வசித்த இடம்’ என்றார்

கவிஞர் நேருடா மச்சுபிசுவிற்காக பாட்டெழுதினார்

1983ல் யுனஸ்கோவால் வரலாற்று முக்கியமான பிரதேசமாக பிரகடனபடுத்தப்பட்டு தற்பொழுது அந்திஸ் மக்களின்பிரதான கலாச்சார மையமாகப் பல உல்லாசப் பிரயாணிகளை கவர்கிறது

நாங்கள் சென்ற அன்று மாலையில் சுற்றிவர இருந்த மலைக்குன்றுகளின் இடையே சூரிய ஒளியில் அந்த இடத்தைப்பார்த்தபோது மச்சுப்பிச்சு ஏன் முக்கியத்துவம் வாய்ந்து எனப் புரிந்தது.

பச்சையாடையணிந்த மலைகளின் நடுவே பள்ளத்தாக்கில் பறக்கும் கொண்டோர் என்ற தென் அமரிக்க கழுகின் வடிவில்அந்த முழுக் கட்டிடமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரைப்பகுதி கட்டிடங்கள் மறு அரைப்பகுதி விவசாயத்திற்காகஅமைக்கப்பட்ட படிமுறை அமைப்புகள். இந்த முழுக்கட்டிடம் ஒரு கருங்கல்லுக் குன்றை உடைத்துக் கட்டியிருப்பதற்குஅடையாளமாக அந்த இடத்தில் ஏற்கனவே கருங்கற்கள் குவறி உள்ளது. இன்னமும் அரைபகுதி வெட்டிய கற்கள் இருந்தன. கற்களின் சிறிய ஓட்டைகளில் மரத்தைச் செருகிவிட்டு தண்ணீரை ஊற்றினால் அந்த மரம் ஊதி கல்லுகளை வெடிக்கப்பண்ணும் முறையைக் இன்காக்கள் கையாண்டிருந்தார்கள். இதே முறையை எகிப்தில் கையாண்டிருந்ததையும் அறிந்தேன்.

மச்சுப்பிச்சு சாம்பல் நிற கருங்கல்லால் கட்டப்பட்ட முற்றாக பூரத்தியாகாத கட்டிடம் என்பது தெரிந்து. ஆனாலும் இங்கு சூரியனின் கன்னிகையர் எனப்படும் தெரிந்தெடுக்கப்பட்ட இன்காப் பெண்களும் குருமாராக விரும்பும் இளைஞர்களுமாக தேர்தெடுக்கப்பட்ட இன்காக்கள் வாழுமிடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வாழும் பகுதியாக இருந்தபோது தொடர்ச்சியாக கட்டிட வேலைகள் நடந்தபடி இருக்கின்றன.

600 வருடங்கள் முன்பாக பச்சைக்குட்டி அரசனால் கட்டப்பட்டது. அரசன் ஆரம்பத்தில் தங்கி போவதற்காககட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கருங்கல்லால் அமைக்கப்பட்ட வாசல் அதுவும் புவியதிர்வில் இருந்து பாதுகாக்க சாய்வாக கட்டப்பட்டுள்ளது வாசலால் உள்ளே சென்றால் இரு பக்கத்திலும் அறைகள் உள்ளன வேறுபகுதிகள் பல விதமான கல்லுகளால் அமைக்கப்பட்ட சுவராக இருந்தது. சாந்து பூசப்பட்ட , பூசப்படாத சுவர்கள் மற்றும் வெளிப் பக்கத்திலும் உள்பக்கத்திலும் களிமண்ணும் வர்ணங்களும் கலந்த கலவையால் பூசப்பட்ட சுவர்கள் என இருந்து. முக்கியஅமைப்பாக ஆலயம் இங்கு சூரியக்கடவுளுக்கு அமைக்கபட்டள்ளது. இது இரண்டு யன்னலகள் உடையது நேர் எதிரே இன்காப்பாதை முடியும் இடத்தில் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்ட ஜுன் 21ம் திகதி சூரியன் வரும்போது இந்த ஒரு யன்னல் ஊடக ஒளிவரும் என்கிறார்கள் . மொத்தமான மச்சுபிசி கட்டிடமே வானசாஸ்திரத்தை தழுவிகட்டப்பட்டிருக்கிறதாக சொல்கிறார்கள் களஞ்சிய அறை அப்பால் 3 யன்னல்கள் கொண்ட ஆலயம் சந்திரனுக்கானதாகஇருக்கலாம் என்கிறார்கள் . இன்காக்கள் பிதாவாக சூரியனையும் மாதாவாகச் சந்திரனையும் வழிபடுகிறார்கள்.

பலி பீடம் ஒன்று உள்ளது(Intiwantana) அதில் நான்கு திசைகளிலில மூலைகள் உள்ளது. அது சூரியனைக் கட்டும் கல் என்கிறார்கள்(Hitching post). சூரியன் வானத்தை விட்டுச் செல்லாமல் கட்டுவதாகச் சொல்லப்படுகிறது. விவசாய மக்களான இவர்கள் சூரியனது நகர்வை மிகவும் அவதானமாகக் கணித்துள்ளார்கள் என்பதுஅறிப்பட்டுளளது.

உல்லாசப் பிரயாணிகள் அந்தக் கல்லில் தொட்டு அதில் இருந்து சக்தியைப் பெறுகிறார்

கட்டிடங்களுக்குக் கீழே உள்ள பகுதிகளில் படிமுறை விவசாயத்திற்கு ஏற்பட்டவை. இடையிடையே தண்ணீர்க் கால்வாய்கள் உள்ளது.இதன் மூலம் இங்கு வாழ்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் உணவில் தன்னிறைவாக வாழமுடியும். 1500 மேற்பட்டவர்கள் இந்தப் பகுதியில் இருந்து உணவு பெறமுடியும் என மதித்துள்ளார்கள்

அடுத்த நாள் சூரியக்கதவு அல்லது சன்கேற் எனப்படும் எதிரே உள்ள மலைக்கு இரண்டு மணிநேரம் ஏறினோம். மிகவும் குறுகியபாதை ஆனால் இன்காக்களால் அமைக்கப்பட்டது. உறுதியாக உள்ளது. இந்த சன்கேற்வழியாக சூரியன்உதிப்பதுடன் இன்கா அரசர்களும் இதன் வழியாகவே குஸ்காவில் இருந்து வருவார்கள். மிகவும் பாதுகாப்பான பிரதேசமாக இருந்திருக்கவேண்டும். இந்த மலையில் ஏறும் பாதை அக்காலத்தில் இன்காக்களால் அமைக்கப்பட்டது இன்னமும் நல்லநிலையில் உள்ளது.
img_7136img_7090
(L)ஓக்கிட்வகை (R) கொக்கோ செடி

இந்தப்பாதையில் செல்லும்போதே உண்மையான மச்சுப்பிச்சுவின் அழகை இரசிக்கமுடியும். பாதை எங்கும் பல தரப்பான மரங்கள் வளரந்திருந்ததுடன், ஏராளமான ஓக்கிட்வகை செடிகள் மரங்களில் முளைத்திருந்தது என்னைக்கவர்ந்தது.அங்குதான் இயற்கையாக வளர்த்திருந்த கொக்கையின் போதை மருந்தெடுக்கும் கொக்கோ செடியைக்கண்டேன்.

இந்த மச்சுபிசுவை 1911 பேராசிரியர் ஹரன் பிங்கம் கண்டபோது அங்கு பலரது புதைகுழிகள் இருந்தன.. 164 புதைகுழிகளில் 102 பெண்களாக இருப்பதால் இது அதிகமாக இன்கா கன்னிகளும் அவர்கள் சார்ந்தவர்கள் வதியும் இடம் என்பதாக நினைக்கப்படுகிறது. ஒரு பெண் குந்தியிருந்தபடி அவளது நாயும் அவளது சில பாத்திரங்களும் புதைக்கப்பட்ட புதைகுழியிருந்தது.

இந்த மச்சுப்பிச்சி கட்டிடத்தில் எங்கும் மலசல கூடம் இருக்கவில்லை இன்காக்கள் மலசலகூடம் பாவிக்கவில்லை. நிலத்தில் இருந்து அதை மூடிவிடுவார்கள்.

இந்த இடம் ஸ்பானியர்களால் கைப்பற்றப்படவில்லை என்றால் இங்கிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்வழிகாட்டியான பெண்ணிடம் கேட்டேன்.

ஸ்பானியரகளிடமிருந்து தப்பிவந்தவர்கள் பலர் அவர்களிடமிருந்து பெரியம்மை மற்றும் பால்வினை நோய்களைக் காவிவந்தார்கள். அதனால் மற்றவர்களும் அழிந்தார்கள்.

இந்த விளக்கம் சரியாக இருக்கலாம் என நினைக்க விடயங்கள் இருந்தது.

புதைகுழியில் இருந்த பெண் ஒருவரது எலும்பை ஆராய்ந்தபோது சிபிலிஸ் என்ற நோய் இருந்ததாகத் தகவல் உண்டு.

கடைசியாக சுதந்திரகாற்றை சுவாசித்தவர்கள் இருந்த இடம் என சேகுவாரா குறிப்பிட்டபோதும் அவர்கள் நோயாளிகளாகத் தங்கள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.

“மச்சுபிச்சு” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: