உதயனின் U P 83,

UP 83 (உத்தரப்பிதேசம்)
up-1

நான் சமிபத்தில் வாசித்த தமிழ் புத்கங்களில் தொடர்ச்சியாக பக்கங்களை சுவாரசியத்தோடு திருப்ப வைத்தது. ஒவ்வொரு பக்கமும் சுவையானது. அரைத்தமாவைஅரையாமல் புதிதான ஒரு பகுதியை சொல்லுகிறது. வித்தியாசமான மொழி (remarkable genre)

நான் சென்னையில் இருந்த காலத்தில் உத்தரப் பிரதேசத்ததில் பயிற்சி எடுத்து முடித்த பல இயக்க இளைஞர்கள் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தார்கள். 84 ஆண்டின் ஒரு நாள்சூழைமேட்டில் உள்ள தமிழர் மருத்துவமனைகட்டிடத்தின் மேல் நின்றபோது எனக்குஅறிமுகமான சில ஈ பி ஆர் எல் எவ் இயக்கத்தைத் சேரந்தவர்கள், பூனையொன்றைதுரத்தியபடி ஓடினானார்கள். அதைப்பற்றி விசாரித்தபோது காடுகளில் கரந்துறையும்போது எந்த மிருகத்தையும் சாப்பிட சொல்லி இந்தியர்கள் பழக்கினார்கள் அதைப் பரீட்சிக்க எனவேறு ஒருவர் எனக்கு விளக்கம் கொடுத்தார்.

நல்லவேளை அந்தப் பூனை பிடிபடாமல் தப்பிவிட்டது.

இந்திய ஆயுதப் பயிற்சிக்காக யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளில் இருந்து சில வகுப்புகள் 83 கலவரத்தின் பின்பாக காணமல் போனதை அறிந்தவன். இரகசியமாக இருந்த இந்திய இராணுவப் பயிற்சி இந்தியப் பத்திரிகையில் பரகசியமாகியது.இந்திய அரசாங்கத்தினர்,இலங்கையிடம் தங்களது நட்பற்ற செயலை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்தள்ளப்பட்டனர்.

அப்படியான இராணுவப்பயிற்சி நடந்த இடம் டெகராடூன் என்ற மலைப்பிரதேசம்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. மலைப்பிரதேசத்தில் இராணுவப்பயிற்சியில்நடந்தவைகளை விபரமாக எழுதியவர்கள் எவருமில்லை. உதயனின் புத்தகம் அந்த மூன்றுமாத பயிற்சியை மிகவும் தெளிவாகத் தருகிறது. நாவல் என எழுதியிருந்தாலும் இதைஅபுனைவில் (Creative non fiction) என்ற விதத்தில் சேர்க்கமுடியும். 1940 ஆண்டிலிருந்து இந்தவகையான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இதை எழுதியவர்களில்முதன்மையானவர் ஏர்ணஸ்ட் ஹெமின்வே (Ernest Hemingway)

சம்பவங்களும் சம்பாசணைகளும் உண்மையாக இருக்கவேண்டும். ஆனால் எழுதுபவரதுமன ஓட்டங்கள் விபரமாகவும் சுயசிந்தனையாகவும் புனைவு மொழியில் இருக்கும்.தமிழில் அ. முத்துலிங்கம் எழுதும் விடயங்கள் இவையே ஆனால் தமிழ்நாட்டு சஞ்சிகைகள்இவற்றை சிறுகதை என்றும் பல நேரத்தில் கட்டுரை எனவும் வகைப்படுத்தும். தற்போதுமேற்கு நாட்டு பல்கலைகழகங்களில் இந்த எழுத்துமுறையை கற்பித்தல்நடைபெறுகிறது.புத்தகச் சந்தையில் இப்படியான எழுத்துகள் கொண்ட புத்தங்களுக்கே மவுசுஅதிகம்.

உதயனின் எழுத்துகளில் உண்மையான சம்பங்களை வைத்து புனைவு மொழியில்திரைப்படவசனம்போல் காட்சிச் சித்திரமாக காட்டப்பட்டிருக்கிறது.. சம்பவங்கள்நேர்கோடில்லாது முன்னும் பின்னுமாகி வருகிறது. பழய நினைவுகள் எமக்கு நேர்கோட்டில்வருவதில்லை என்பது உண்மைதானே. எழுதும் நான் பொறாமைப்படும் எழுத்துநடைஎன்று சுருக்கமாக சொல்ல முடியும்.

மற்ற இயக்கங்களளைப்பற்றி எழுதப்பட்ட அளவு ஈரோஸ்இயக்கம் பற்றி எழுதப்பட்டதில்லை . இந்தியாவில் இருந்த போது நிழலாகவோ கருப்புக்குதிரையாக ஈரோஸ் இருந்தது . அதற்கு காரணம் அதனது கூட்டுத்தலைமை.பாலகுமாரன் அதனது முகமாக இருந்தார் ஆனால் இராணுவப் பிரிவின் வேலைகளுக்குப்பொறுப்பாக இருந்ததுடன் இந்தியாவினது தொடர்புகளைப்பேணியதும் இங்கிலாந்தில் வசித்த சங்கர் ராஜி . நான் சந்தித்த பல ஈரோசினர்பாலகுமாரனைப் புகழ்ந்தும் சங்கர் ராஜியைக் குறையும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். 87பின்பு விடுதலைப்புலிகளோடு சங்கமித்த பிறகு, அதிகமாக பேசப்படாத இயக்கமாகவும் ஈரோஸ் மாறியது .

பாலகுமாரன் விடுதலைப்புலிகளை உள்ளாக விமர்சித்திருந்தார் என கேள்விப்பட்டாலும்கடைசிவரையும் அவர்களுடன் இருந்திருக்கிறார். கடைசி நாட்களில் அரசபடைகளிடம்மகனுடன் சரணடைந்தவர்.ஈரோசின் மூன்றவது தலைவராக இருந்தவர் நேசன். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.

இந்திய இராணுவ பயிற்சியாளர்களுக்கும் ஈரோசின் ஒரு பகுதியினருக்கும் நடந்தவிடயங்கள் இதில் தரப்பட்டுள்ளன. இந்திய அரசியலில் ஈழத்தவர் எப்படியானவிளையாட்டுப் பொருளாக இருந்தார்கள் என்பதுடன் எமது இயக்கத்லைவர்கள் எந்தத் தூரநோக்குமற்றதுடன் சாகசக்கார்களாக இருந்தர்கள் என்பதையும் புரியமுடிகிறது.மனைவியையும் சகோதரர்களையும் வைத்து சூதாடும் மகாபாரதத் தருமனின் ஒற்றுமையை ஈழத்தலைவர்களிடத்தில் காணலாம்.;

விடுதலைப்புலிகளைப்போல் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பாவித்த அல்லது பாவிக்க முனைந்த இரண்டாவது இயக்கம் ஈரோஸ். விடுதலைப் புலிகள்போல் சிங்களமக்களைவெட்டியோ சுட்டோ கொலை செய்யாமல் தென்பகுதியில் குண்டு வைப்பதன்மூலம் அரசயந்திரத்தை நிலைகுலைய செய்யமுடியும் என்ற அவர்களது நிலைப்பாடு இது. ஆனால்இதை ஏற்றுக்கொளளமுடியாது. காரணம் இப்படியான திட்டங்களில் இறப்பது அப்பாவிமக்களே. சரி பிழைக்கப்பால் ஈபி ஆர் எல் எவ், புளட் இயக்கத்தினர் இந்த விடயத்தில்தெளிவாக இருந்தார்கள் என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. ஆரம்பகாலத்தில்இராணுவத்தில் இருந்து தப்பியோடுவதற்கு சிங்கள சிப்பாய்கள் ஈபி ஆர் எல் எவ அல்லது புளட் என்ற இரு இயக்கத்தினரையே தேடுவார்கள் என்பது எனக்கு சொல்லப்பட்டது.சோசலிசம், மலையகத் தொழிலாளர் விடுதலை என உயர்வான விடயங்களை பேசியஇயக்கத்தின் இராணுவத்தன்மையான போக்கிற்கு காரணம் சங்கர் ராஜி. இவரே இராணுவப்பொறுப்பை ஏற்று நடத்தினார்.

உதயனின் இந்த புத்தகம் எமது முக்கியமான காலத்தின் போஸ்மோட்டம் மட்டுமல்ல இலங்கை விடயத்தில் இந்தியாவின் அணுகு முறையை தமிழர்கள் மடடுமல்ல இலங்கை அரசு மற்றும் சிங்களவர்கள் புரிந்துகொள்ளவும் உதவும். தொப்பிள்கொடி உறவு, தமிழ்இனஉணர்வுகள் என்பது அமரிக்கா ஜனநாயக்தை நிலை நிறுத்த அரபிய நாடுகளில்தலையிடுவதாக சொல்வது போன்ற பம்மாத்து வார்த்தைகள். ஆனால் எம்மைப்பொறுத்தவரை நாம் யானைக்கு அருகே இருந்தால் விழித்திருப்பது மட்டுமல்ல அதற்கு ஜலதோசம் வாய்வுக்கோளாறு வந்தால் நாமும் அவதிப்படுவோம் என்பதை உணர்ந்துகவனமாக இருக்கவேண்டும். இதை ஜே ஆர் ஜெயவர்த்தனா உணராததால் உருவாகியது டெகராடூன் இராணுவ பயிற்சி. வேலுப்பிள்ளை பிரபாகரனின் தவறு நமக்கு முள்ளிவாய்க்காலில் முடிந்தது. இலங்கையில் நடந்த அழிவுக்கு நான் இந்தியாவை பொறுப்பாக்கவில்லை. மேற்கூறிய இருவருமே பொறுப்பு. எமக்குப்புரிய வேண்டிய ஆங்கில வார்த்தை (Handle with care) என்பதாகும்.
நன்றி வீரகேசரி

“உதயனின் U P 83,” மீது ஒரு மறுமொழி

  1. GOOD VIEW & REVIEW! MOST OF THE MILITANT ORGNS DID DAMAGE TO TAMIL CAUSE! ALL SHD BE DISSOLVED NOW! ALL SHD APOLOGISED TO TAMIL PEOPLE BEFORE DISSOLVED!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: