1977 ஆம் ஆண்டுநடந்தபொதுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியானமட்டக்களப்பில் தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த இராஜதுரையைதமிழரசுக்கட்சி நிறுத்தியது. அவரை தோற்கடிப்பதற்காக அமிர்தலிங்கம் காசி. ஆனந்தனைஅங்குநிறுத்தினார்.
அப்பொழுது நடந்த பிரசாரக்கூட்டத்தில் பொன்னுத்துரை என்ற ஒரு எழுத்தாளர் இரஜதுரைக்குஆதரவாகபிரசாரம் செய்தார். ஒரு கூட்டத்தில் இராஜதுரை போக்கிலிதான். ஆனால் அவரைவிட கடைகெட்ட போக்கிலி காசிஆனந்தன்தான் என்றார். அதனால் இராஜதுரைக் கேவாக்களியுங்கள் என்று பேசினார்.
நான் எனது இரண்டுவாக்குகளையும் தமிழரசுக்கட்சிவேட்பாளர்கள் இருவருக்கும் பகிர்ந்துபோடுவதற்குத்தான் விரும்பியிருந்தேன். இருவருமே போக்கிலிகள் என்றுஅந்தப்பேச்சாளரின் பேச்சைக்கேட்டபிறகு,எனது இரண்டுவாக்குகளையும் ராஜன் செல்வநாயகத்திற்கும் பதியூதீன் முகம்மதுவுக்கும் போட்டேன்.
இராஜதுரை வென்ற பின்னர் யூ.என்.பி.யில் சேர்ந்து இந்து அமைச்சராகி அஸ்வமேதயாகம் நடத்திச் சுருட்டினார். காசிஆனந்தன் அமிர்தலிங்கத்திற்கும் துரோகம் செய்ததுவிட்டு புலிகள் கொடுத்த தமிழ்நாடு பிராசாரத்திற்கான பணத்தைசுருட்டினார். .
புலிகள் கொழும்பில் அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் கொலைசெய்தபொழுது தமிழ்நாட்டிலிருந்த காசிஆனந்தன் அதற்காககண்டனம் சொல்லவில்லை. தன்னைவளர்த்தஅமிர்தலிங்கத்திற்காகஅனுதாபமும் சொல்லவில்லை.
இராஜதுரையும் காசிஆனந்தனும் தேர்தலுக்குப் பிறகு மட்டக்களப்பு தமிழ்மக்களை மறந்து பரதேசிகளாக மறைந்தவர்கள். அவர்களுக்கு வாக்களித்த மக்கள் இன்றும் மட்டக்களப்பில்தான் இருக்கிறார்கள்.
இவர்கள் இரண்டுபேருமேபோக்கிரிகள்தான் என்று தீர்க்கதரிசனமாக அன்றே சொன்ன பொன்னுத்துரை என்பவருக்கு எனது வாழ்த்துக்கள்.
மாமாங்கேஸ்வரன்
அமிர்தகழி,மட்டக்களப்பு. இலங்கை
காசி ஆனந்தன் போன்றவர்கள் சிங்கள சாதாரண மக்களால் போற்றப்பட வேண்டியவர்கள். காரணம் இனத்துவேஷம் என்றால் என்ன என்பதை சிங்கள அரசியல் வாதிகளிடமிருந்து ஆரம்ப அறிவை மட்டுமே பெற்றவர்களைத் தமிழர்களை அறவே வெறுப்பவர்களாக மாற்றியுள்ளது.