தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி

DramaMasks
நடேசன்

இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை.

வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம் பிள்ளைகள் பார்த்து விடக்கூடாது என்பது பற்றித்தான் ஜெனிவா நகரத்தினர் கவலைப்பட்டிருப்பார்கள். ஆனால் அந்தச்சம்பவத்திற்குவிளம்பரம் கொடுப்பதற்கே பல வெம்பல் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு இயங்கின.

எந்தவொரு இனத்திலும் இப்படியான கொடுமைகளை இவ்வளவு அதிகமாக காணமுடியாது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை புரிந்துகொள்வதும் கடினமானது.
2009 இல் வன்னியில் போர் நடந்துகொண்டிருந்தபொழுதுதமிழகத்தில் சில இளம்கொழுந்துகள் தீக்குளித்தபொழுது, தமிழ் உணர்வூட்டும் காகிதத் தலைவர்கள் சிலர்,விடுத்தவேண்டு கோளும் நகைப்பிற்கிடமானது. தீக்குளிக்க விரும்பும் இளைஞர்,யுவதிகள் அந்த எண்ணத்தைக் கைவிட்டு தமதுபெயரை பதிவு செய்துதந்தால் அவர்களைப் போருக்கு அனுப்பி புலிகளுடன் போராடவைக்கலாம். என்றுகோரிக்கை விடுத்தார்கள். அதாவது வீணே தீக்குளித்து மாண்டுவிடவேண்டாம். போருக்குச் சென்று மாண்டு வித்தாகிவிடுங்கள் என்பதுதான் அந்தக் காகிதத் தலைவர்களின் தூண்டுதல்.

அர்த்தங்களில்லாத கோஷங்களை சவர்க்காரகுமிழிபோல் உருவாக்கி அதை ஊதிப் பெரிதாக்கிய அரசியல்வாதிகள் பாமர மக்களின் சிந்தனையையும் பகுத்தறிவையும் மழுங்க வைத்துவிடுகிறார்கள். சாதாரணஅப்பாவிமக்கள் இப்படியான குமிழிகளில் பிரதிபலிக்கும் காட்சிகளை சிலுவையாக சுமந்து உயிர் விடுகிறார்கள். தங்கள் சுகபோகம், அதிகாரம், பிரபலம் என்பவற்றிற்காக இந்தத் தலைவர்கள் அணிந்துள்ள முகமூடிகளை பிரித்தறியாது உண்மையான முகங்களாக தரிசித்து செல்வநாயகம் பொன்னம்பலம் அமிர்தலிங்கம் முதலானோரின் பாவங்களை சுமந்தபடி உயிர் இழந்த இளைஞர்கள் ஏராளம். அதேபோன்று பிரபாகரன்,பொட்டுஅம்மான் போன்றோரின் பாவங்களுக்காக முள்ளிவாய்க்காலில் நடந்தவேள்வியில் உயிர்ப்பலி கொடுக்கும் அப்பாவி ஆடுகளாக தமிழ் மக்கள் கொத்துகொத்தாகஉயிர்களை இழந்தார்கள். பலரது பாவங்களுக்காக யேசுநாதர் சிலுவையில் ஏறினார்.ஆனால் ஒரு சிலருக்காக ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மடிந்ததுதான் நமது புதிய சுவிசேசம்.

காரணம் தமிழ்த்தேசியம் என்றமுகமூடிமக்களைஏமாற்றியது.

இந்த ஏமாற்று விளையாட்டு இலங்கையில் மட்டுமல்ல தமிழர் வாழும் தேசமெல்லாம் சிறிதும் பெரிதுமாக நடைபெறுகிறது. அதாவதுதமிழ் அல்லது தமிழ்த் தேசியம் என்ற முகமூடி மூலம் ஏமாற்றும் கைங்கரியம் தமிழர்கள் செறிந்து வாழும் தமிழ்நாடு ,இலங்கைக்குஅப்பால்,குறைவாகதமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக கனடா,அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் பாரக்க முடிகிறது.

ஒருசிலஉதாரணங்கள்

மெல்பனில் சிவாவிஷ்ணு ஆலயத்தில் நீடித்த நிர்வாகக் குறைபாட்டைசிலர் எடுத்துக் கூறியபோது, நிர்வாகக் குறைபாட்டிலும் குளறுபடிகளிலும் ஈடுபட்டவர்கள்,தம்மை பாதுகாக்க ஏந்திய ஆயுதம் இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் ஆலய நிர்வாகத்தை இந்தியர்களுக்கு விட்டுக் கொடுக்கமுடியுமா? என்பதாகத்தான் இருந்தது.

இது எப்படி இருக்கு?

இங்கு முகமூடி இலங்கையர்.

கடந்தகால் நூற்றாண்டுகளில் அவுஸ்திரேலியாவில் சிட்னியிலும் மெல்பனிலும் வரிக்கு வரி தமிழ்த்தேசியத்திற்குவானொலிகளில் முழங்கியவர்கள் இருவர். அவர்களது தற்போதையசெய்கைகளில் தமிழ் தேசியத்தின் மீதுஅவர்கள் கொண்டிருந்தவிசுவாசம் எவ்வளவுபோலித்தனமானது என்பதுதெரிந்தது. அவர்களின் தனிப்பட்டசெய்கைகள் பலவீனங்களைப் பார்த்து தமிழ்த்தேசியம்தான் வெட்கித்தலைகுனிகிறது, எனது நண்பர் ஒருவர் சொன்னார்:-

‘தொண்டைக்குகீழ் சுவையில்லை. அதேபோல் தொப்புளுக்கு கீழே இன மதசாதி இல்லை’என்றுஒருமுதுமொழி இருக்கிறது. இப்படித்தான் அவர்களின் தமிழ்த்தேசியமும்.

இந்தியாவில் ஓரிடத்தில் ஒருபண்ணையில் முகாமையாளராக பணியிலிருந்தபோது இதைஅனுபவரீதியாகஉணர்ந்தேன்.
நான் வேலைபார்த்த அந்தப்பண்ணையில் மேற்பார்வையாளராக வேலைசெய்தவர் தேவர் குலத்தவர். ஐம்பதுவயது. அடிக்கடி தனது நரைத்த பெரியமீசையை முறுக்கியபடி தமது மறக்குலப்பெருமைபேசுவார். இராமநாதபுரத்துக்காரர். ஒருதடவை அந்தப் பண்ணையில் அவரால் பாதிக்கப்பட்ட பதினைந்துவயது தலித் சிறுவன் ஒருவன் தனது காற்சட்டையை கழற்றி தனது மலவாசலில் அவர் செய்த கொடுமையை எனக்கு காட்டினான்.அதன் பின்புநான் அந்தமனிதருடன் முரண்பட்டு பண்ணையை விட்டு வெளியேறியது ஒருபெரிய
கதை. அவரும் அவ்வப்போது தனது சாதி முகமூடியை போட்டுக் கொள்வார்.

இதே போன்று மதவிடயங்களை பேசியபடிதாம் சார்ந்த மதக்கோட்பாடுகளை மீறியவர்கள் பலரை இப்பொழுதும்சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

தனிமனிதர் தவறுவிடுவது இயற்கைதானே? எனகேட்கலாம்.அந்தத் தவறுகளை சொந்த முகத்தோடுதான்செய்ய வேண்டும். இன,மத,சாதி முகமூடிஎதற்கு? எனக்குத்தெரிய பலர் தமிழ்த்தேசியம் பேசியவாறே பின்கதவால் தங்களது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். இவை தனிமனிதபிரச்சினைஎன்றாலும் மதம்,சாதி, இனம் முதலானமுக மூடிகளைஅணிந்துவிடுகிறார்கள்.

நடைபெறவிருக்கும் வடமாகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து ஈழ மக்கள் ஜனநாயகமுன்னணியினரும் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வென்றால் தங்களுக்கு நிம்மதி என்ற நிலைப்பாட்டிற்கு சில அரசாங்கதரப்பினர் வந்துவிட்டதாகஅறிகிறேன். இதனால் பலநன்மைகள் அரசாங்கத்துக்கு உண்டு.தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பதவிக்கு வந்தால் தமிழ்த்தேசியம் சுயாட்சி முதலான கோசங்களை மட்டுமே வைப்பார்கள். அதைப் பொறுத்துக் கொள்ளும் நிலைக்குஇலங்கைஅரசாங்கம் வந்துவிட்டது.

அதாவது நித்தம் குடிக்கும் குடிகாரகணவனை மனைவியும்தொடர்ந்து வாயடிக்கும் மனைவியை கணவனும் பரஸ்பரம் சகித்துக் கொள்வது போலத்தான்.

வடமாகாணத்தில் ஒரு ஜனநாயகமான மாகாணசபை உருவாகியதற்குதாமே பொறுப்பு என்று அரசாங்கம் உலகம் முழுக்க சொல்லிக் கொள்ளமுடியும். இரண்டாவதாக தற்போது வடக்கில் நடைபெறும் நிர்மாண அபிவிருத்திகளுக்கு அரசாங்கமே பொறுப்பு. அதற்காக அரசு பல கோடி ரூபாய்களை அங்கு செலவளித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்குப்பின்னர், இனிமேல் அந்தப் பணம் தென்னிலங்கையில் தனதுஅரசைஆதரித்தஏனைய மாகாணசபைகளுக்கு வாக்களித்தவர்களை திருப்திப்படுத்த அரசு செலவிடலாம். அப்படி செலவு செய்வது அடுத்தபொதுத் தேர்தல்அரசின் வெற்றியை நிச்சயமாக்கும். வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எக்காலத்திலும் அபிவிருத்தி விடயங்களில் அறிவோ முன்னனுபவமோ பெற்றவர்கள் அல்ல. எதிர்ப்பதிலும் அழிப்பதிலும் இவர்கள் பெற்ற அனுபவத்தில் ஒருசதவீதம் கூட உருவாக்குவதில்பெறவில்லை என்பது தமினத்துக்கு நேர்ந்தசாபக்கேடு.

நான் சொல்லும் உண்மையை அறிவதற்கு, ஏற்கனவே பல தமிழ்ப்பிரதேசங்களில் உள்ளுராட்சிமன்றங்களை பார்த்தால்தெரியும். இதைவிடதேர்ச்சியடைந்ததொழிலாளர்களும் வடக்கிலங்கையில் குறைவு.இவ்வாறு மந்தகதியிலும் ஸ்தம்பிதநிலையிலும் வேலைகள் நடக்காதுவிடின் பலகோடி ரூபா பணம் அரசாங்கத்தின் திறைசேரிக்கே மிச்சமாகும்.

தற்போதையமுன்னணிவேட்பாளராக இருக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், சம்பந்தனால் மாவைசேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்தின் மற்றும் சிலுவை யுத்தத்திற்கு ஆசீர்வதித்த பத்தாம் நூற்றாண்டு போப்பாண்டவர் போலவும் அழிந்த புலிகளின் நீண்டவாலாக தொழிற்படும் மன்னார் ஆயர் போன்றவர்களை ஓரம்கட்டுவதற்காகவும் ஒரு வீம்புக்குகொண்டு வரப்பட்டவர். மேலும் இவரது பேச்சுகளை பார்க்கும்போது இவர் பேசுவதற்கு வந்தவர் போல் மட்டுமே தெரிகிறார். எனது கணிப்பு இவரைப் பற்றிய விடயத்தில் பிழையாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இப்பொழுது போடும் முகமூடி தனிநாடுஅல்ல. உள்ளக சுயநிர்ணயம்.அது கமல்ஹாசன் அவ்வைசண்முகியில் அணிந்துகொண்டமுகமூடிபோல் இனம் கண்டுகொள்வது இலகுவானதல்ல. இப்படியான முகமூடிகள்தான் தற்பொழுது மீண்டும் மக்களை ஏமாற்றி தேர்தலில் நிற்கிறார்கள். கடந்தகாலத்தில் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் குறைந்தபட்ச அரசியல் நேர்மை கொண்டவர்கள். பலதமிழரசுக் கட்சி உறுப்பினர்களோடு பழகிய அனுபவம் எனக்கு உள்ளது. உடுப்பிட்டிசிவசிதம்பரம் உடுவில் தருமலிங்கம் போன்றவர்களைஎவரும் குறை சொல்லமாட்டார்கள். அப்பாத்துரை அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிழையான அரசியல்தத்துவத்தை எடுத்தபோதும் அவர்களின் தனிப்பட்ட நேர்மையை குறை சொல்ல முடியாது.அதன்பின்னர் தமிழ்த் தேசியம் பேசிய வேலுப்பிள்ளை பிரபாகரன்,பலகுறைகளும் பாசிஸ கொலைவெறி இயல்பு கொண்டஒருவராக இருந்தாலும்,தனது இலட்சியத்தில் விசுவாசமாக இருந்து உயிர் கொடுத்தவர் என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் தற்பொழுது அதே முகமூடியை போடும் பலர் எவருக்குமே விசுவாசமானவர்கள் அல்ல.

அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தலில் நிற்பவர்கள் சிறந்தவர்களா என எவரும் கேட்கலாம்.அவர்கள் தமிழ் ஈழம் பெற்றுத்தருவதாகக் கூறவில்லை. இராணுவத்தைக் குறைத்து வேலை வாய்ப்பைத்தந்து மக்களது பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்றுதான் சொல்கிறார்கள்.

தற்போதையநிலையில் தமிழ் மக்கள் வெளிநாடுகள் செல்வதுமிகக் கடினமாகிவிட்டது. தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து வருபவர்களை தூரத்தில் உள்ளதீவுகளுக்குஅனுப்புவோம்,வரும் படகுகளை மீண்டும் திருப்பிஅனுப்புவோம் எனச்சொல்லித்தான் தேர்தலில் வெற்றிபெற்றது. கனடா மற்றும் ஐரோப்பியநாடுகளும் மிகவும் கடுமையாகநடந்து கொள்கின்றன. மொத்தத்தில் இலங்கையருக்கு வெளிநாட்டு கனவுகள் முன்பு போன்று நனவாகுவது மிகவும் கடினமாகிவிட்டது.

தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் வடமாகாணம் அபிவிருத்தி அடைந்தால்தான் அங்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
அறுபதுவருடங்கள் தமிழ்த் தேசியத்திற்கு வாக்குப் போட்டு கிடைத்த நன்மையென்ன?
உயிர்இழந்துசொத்துகள் அழிந்துஅகதிவாழ்வில் வந்துமுடிந்ததுதான்.
இந்த முறையாது மாற்றுச்சிந்தனைவடமாகாணதமிழ்மக்களிடம் உருவாகட்டும்.

“தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி” மீது ஒரு மறுமொழி

  1. Very well compiled. It’s really sad to see all these things are happening in our community.

AJ -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.