ஓக்ரோபர் 2008 இல் உதயத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை இங்கு
மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.
இரண்டு பெயர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன
விக்ரோரிய இந்து சங்க பொதுக்கூட்டம்
அண்மையில் ஜெங்கிஸ்கானின் இளமை வரலாற்றை பிரதிபலிக்கும் ரஷ்யா-
கசாக்கிஸ்த்தான் கூட்டுத்தயாரிப்பில் உருவான மொங்கோல் (Mongol) என்ற
திரைப்படத்தைப் பார்த்தேன் சமீபகாலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில்
இதுவும் ஒன்று.
போர்க்களக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக படமாக்கப்பட்டிருந்தது.
குதிரைகளில் செல்லும் வீரர்கள் வாளை நீட்டுப் போக்கில் வைத்தபடி பாய்ந்து
செல்வார்கள். இருபக்கமும் எதிரே வருபவர்கள் தொடர்ச்சியாக அந்த வாள்களால்
வெட்டப்படுவார்கள்.
.குதிரையில் செல்பவர்களின் வேகத்தையும் வெட்டப்படும்
எதிரிகளையும் பார்த்தபோது போரின் கோரமும் கொடூரமும் பலநாட்களுக்கு மனதை
விட்டு அகலாது.
இப்படியான போரின் வெளிப்பாட்டை அண்மையில் விக்ரோரியா இந்து சங்கத்தின்
வருடாந்த ஆண்டுக் கூட்டத்தில் கண்டேன். ஒரேஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கு வாள்களின் ஓசை இருக்கவில்லை.
அதற்குப் பதிலாக வார்த்தைகள்தான் வியூகங்களாக வெளிப்பட்டன.
மொங்கோல் திரைப்படத்தைப்பார்த்தபோது இருந்த அதே உளக்கிளர்ச்சியை அந்தக்கூட்டத்தில் உணர்ந்தேன்.
கடவுள் மதம் என்பதற்கு அப்பால் ஒரு கலாசார குறியீடாக இந்து சங்கத்தை
பார்க்கும் எனக்கு, சங்கத்தின் ஆயுட்கால உறுப்புரிமை ஒருவிதத்தில்
திணிக்கப்பட்டது. எனது தெருவில் அயலில் வசிக்கும் ஒருவரின் வேண்டுகோளைத் தட்ட
முடியாமல் நானும் எனது மனைவியும் அங்கத்தினரானோம். எனது மனைவியை பிரதான
அங்கத்தவராக்கி நான் ஒரு கொசுறு உறுப்பினரானேன்.
பதினைந்து வருடங்களாக இந்து சங்கத்தின் வருடாந்த கூட்டத்திற்குப் போகவில்லை.
கடந்த வருடம் தற்செயலாகச் சென்ற போது எங்கள் இருவரதும் வாக்குகள் தபாலில்
போடப்பட்டிருந்தன்.
இதைச் சுட்டிக்காட்டியதால் பத்துவருடங்களாக உதயம்
பத்திரிகைக்கு தரப்படும் விளம்பரம் இரத்துச் செய்யப்பட்டது
( ஆனால் இது காரணமில்லை என கோயில் தரப்பில் கூறப்;பட்டது.)
இது எப்படி இருந்தாலும் இம்முறை இதுபோல் நடப்பதை
தடுக்க சரியான நேரத்துக்கு கூட்டத்துக்கு போய்விட்டேன். இதைவிட சில
கோரிக்கைகளை எழுதி துண்டுபிரசுரமாக கொண்டு போயிருந்தேன்
அதில் உள்ள கோரிக்கைகள்
1)கோயில் மயில்களுக்கு இப்போது உள்ள கூட்டை பெரிதாக்குதல்.
2) இந்து சமயத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு கடைசி காலத்தில் அவர்கள்
இறைவழிபாட்டையோ தேவாரத்தையோ கேட்பதற்கு ஆவன செய்தல்.
வுpக்ரோரியா இந்து சங்கம் இளய தலைமுறைக்கு சமய அறிவை ஊட்டுவதற்கு ஆவன செய்தல்
சங்கத்தில் பதவி பெறுவதற்காக தபால் வாக்குகளை வீடுவீடாகச் சென்று சேகரித்து தாங்கள்
விரும்பியவரை வெற்றி பெறவைத்தலை ஒழித்தல்.
(இது சட்டத்திற்கு அமைவாக இருந்தாலும் தெய்வ சேவை செய்வதாக சொல்பவர்களுக்கு
ஏற்புடையது அல்ல எம்மில் எத்தனை பேர் வீட்டுக்கு வந்து தபால படிவம் கேட்பவரிடம்
மறுத்து உங்களுக்கு போடமாட்டேன். இந்தப்பதவிக்கு நீங்கள் தகுதியற்றவர்
எனச்சொல்லத் துணிவு உள்ளது?)
இப்படியான சில்லறை கோரிக்கைகளை கொண்டு போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது
கடந்த இரண்டு வருடங்களாக கோயிலை நிர்வகித்தவர்கள் புதிதாக றஸ்டி ஒன்றை
உருவாக்கி அதன்மூலம் புதிதாக கட்டப்பட இருக்கும் கலாச்சார நிலையத்தை
நிர்வாகிக்க எண்ணி அதற்கான சட்டத்தை சங்க அங்கத்தவர்களிடம் காண்பித்து அங்கீகாரம்
பெற முயன்றார்கள்.
இந்தச் சட்டத்தைப் பற்றி அறிய பலர் காலஅவகாசம்
கேட்டார்கள். இந்தக் கால அவகாசம் ஒரு நியாயமான கோரிக்கையாகத் தெரிந்தது.
நிர்வாகம் இதை ஏற்கவில்லை இதேவேளையில் அவசரமாக இதை நிறைவேற்றுவதற்கான
எந்தக்காரணமும் வைக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை பின்பு வாக்கெடுப்புக்கு
விட்டபோது அந்த கால அவகாசக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதன்பின்பு இந்த றஸ்டி சபைக்கு ஐந்து பெயர்களை, தனது பெயரையும் உட்படுத்தி தலைவர்
பிரேரித்தார்.
இவர்களை சங்க அங்கத்தவர்கள் அந்த பொதுக் கூட்டத்தில் தெரிவு
செய்யவேண்டும். இந்த இடத்தில் கடும் வாக்குவாதம் நடந்தது. பலர்கூட்டத்தை விட்டு
வெளியேறினார்கள். .இந்த நேரத்தில் முக்கியதீர்மானம் எடுக்க போதியவர்கள்
கூட்டத்தில் இருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இதனால்கூட்டம் மீண்டும்
ஒருதினம் கூட்டப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தலைவர் தானே அந்தக் கமிட்டியில் இடம்பெறவேண்டும் என நினைத்திருந்தால் அதனை வேறு ஒருவர் மூலம் சொல்ல வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என மனத்தில் ஒரு பட்சி
சொன்னது.
இந்தக்கூட்டத்தில் பலர் கடந்தவருடத்தின் நிர்வாகத்தில் குறை, குற்றம் கண்டு
பிடிப்பதற்காக பல கேள்விகளை கேட்டார்கள். முக்கியமாக கடந்த வருட அறிக்கைகளில்
பல குற்றம் கண்டார்கள். கூட்ட குறிப்பில் எழுத்துப்பிழை கூட திருத்தினார்கள்.
தங்களது பூசையில் பூ இல்லை என தலைவரிடம் குறை கண்டார்கள். துப்பாக்கி
சுடப்பழகுபவர்கள் காட்போட்டில் ஒருமனிதனின் உருவம் செய்து சுடப்பழகுவார்கள்.
இதுபோலவே குண்டு குண்டாக வார்த்தைகளை சரமாரியாக தலைவரை( தணிகாசலம்) நோக்கி சிலர் வார்த்தைகளை பாய்ச்சினார்கள்.
.இந்து சங்கத்தினரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல என்னிடம்
இருந்தன. .கடவுளில் நம்பிக்கை இல்லாத நீ எப்படி கேள்வி கேட்பாய் என்றால் நான்
என்ன பதில்சொல்வேன்?
அதனால் அந்தக் கேள்விகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்து கலாச்சார மண்டபம் ஐந்து மில்லியனுக்கு மேல் செலவாகும்
எனக்கூறப்படுகிறது.
நிர்வாக சபையில் அங்கம்வகிக்கும் ஒருவரோடு பேசியபோது ஏழு மில்லியன்
ஆகலாம் என்றார். இதை விட கட்டிடம் கட்டும் காலத்தில் உள்ள வட்டியும் சேர்ந்தால்
மொத்த கடன்தொகை மேலும் அதிகரிக்கும். சகல அங்கத்தினரும் இந்தக்கடனுக்கு பொறுப்பாகிறார்கள்.
1 தற்காலத்தில் ஏற்பட்டுள்ள முதல் தட்டுப்பாடு அதிக வட்டி வீதம் (9.1) என்பன
பெரிய கம்பனிகளையே பாதிக்கும் இக்காலத்தில் இப்படியான திட்டத்தின் அவசியம்
தர்க்க ரீதியில் எல்லா அங்கத்தினருக்கும் விளங்க வைக்கப்பட்டிருக்கிறதா?
2 இந்து கலாச்சார மண்டபம் அருள் சம்பந்தப்படாத பொருள் சம்பாதிக்கும்
நோக்கத்துடன் கட்டுப்படுவதால் கட்டியபின் இதன் மூலம் வரும் வருடாந்த வருமானம்
எவ்வளவு இருக்கும?
3 இப்படியான பல மில்லியன் திட்டத்தை எடுத்து செய்பவர்களின் தகைமைகள் முன் அனுபவம் என்ன ?
இப்படி கேட்காத கேள்விகளை எழுதி கொண்டுபோன கோரிக்கைகளை என்ன செய்தேன் என
நீங்கள் கேட்கலாம்?
எனது கோரிக்கைகளின் பிரதிகள் தலைவர் தனாதிகாரி மற்றும் அங்கத்தினரிடம்
சேர்க்கப்பட்டன. புதிய தலைவர்( ராம பிரகாஸ்) உடனே ஆவன செய்வதாக உறுதி
அளித்தார் . மயில்களின் வதிவிடம் சம்பந்தமாக இரண்டு வருடத்திற்கு முன்பு
எழுதிய கடிதத்தின் பிரதியையும் கொடுத்தேன்.
இந்தக் கூட்டத்தில் எனக்கு பிடித்த விடயம் தலைவர் (தணிகாசலம்;) கூலாக
கடைசிவரையும் பொறுமை இழக்காமல் கூட்டம் நடத்திய விதம்தான். இது மிகவும்
பாராட்டத்தக்கது.

Hemasiri Kuruppu -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி