பகுப்பு: Uncategorized
-
தமிழ் எழுத்தாளர் விழா 2016 ( கோல்ட்கோஸ்ட் )
குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016 ஆறு கலை , இலக்கிய அரங்குகளில் 27-08-2016 ஆம் திகதி ஒன்றுகூடல் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் வருடந்தோறும் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு கோல்ட்கோஸ்டில் எதிர்வரும் 27-08-2016…
-
டொய் இந்தனன் வனம் Doi Inthanon in Thailand
தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள மலைப்பகுதி அடர்ந்த மரங்கள் வளர்ந்த இயற்கையான வனம். அந்தப்பகுதி கிழக்குத் இமயமலைத் தொடரின் பகுதியாகும். மழைக்காலங்களில் மிகக் குறைந்த சீரோ வெப்பநிலைக்குப் போகக்கூடிய இடம். இந்த இடத்தில்தான் தாய்லாந்தின் உயர்ந்த 2600 மீட்டர் பிரதேசம் உள்ளது. இதைச் சுற்றியுள்ள வனத்திற்கு டொய் இந்தனன் (Doi Inthanon) என்ற பெயரில் தாய்லாந்து அரசால் பாதுகாக்கப்படுகிறது. சங் மாயை ஆண்ட கடைசிக் குறுநில மன்னனது பெயரால் இந்தவனம் அமைந்துள்ளது. இந்த வனத்தில் பிரத்தியேகமான தாவரங்களும், மிருகங்களும்…
-
பன்முக படைப்பாளி சல்மா
தெய்வீகன் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பன்முக படைப்பாளி சல்மா அவர்களுக்கும் மெல்பேர்ன் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சம்மேளனத்தின் (ATLAS) ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரண்டுநாள் வார விடுறையே போதாது என்றளவுக்கு நிகழ்ச்சிகள் பெருகிப்போயுள்ள புலம்பெயர் வாழ்வில் ஞாயிறு மாலை சுமார் 25 பேரளவில் கலந்துகொண்ட இந்த சந்திப்பு பெருமை மிக்கதாக அமைந்தது. நான்கு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சிக்காக மண்டப வாசலில் நின்றுகொண்டிருந்தபோது “முத்துக்குமார் இறந்துவிட்டாராம்” என்று தனது கைத்தொலைபேசிக்கு வந்த தகவலை…
-
தங்க முக்கோணம்-Golden triangle in Thailand.
தாய்லாந்தின் வடபகுதியில் பர்மா, லாவோஸ் என மூன்று நாடுகள் அமைந்த இடம் தங்க முக்கோணம்(Golden triangle) எனப்படும். பர்மாவின் வட பகுதியில் விளைந்த அபின் இங்கிருந்து மீகொங் ஆறு வழியாகக் கொண்டு செல்லப்பட்டு தாய்லாந்து ஊடாக வெளிநாடு செல்லும். தங்கப்பிறை(Golden Crescent) எனப்படும் ஆவ்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகில் பர்மா அதிக அபின் விளையும் நாடு. பர்மாவின் வடபகுதியில் உள்ள வ மாநிலம் ( united WA state) பர்மாவில் அதிக அபினை விளைவிக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது.…
-
ஆறிப்போன காயங்களின் வலி- வெற்றிச்செல்வி.
நடேசன் முப்பது வருட ஆயுதப் போராட்டம், இலங்கைத் தமிழருக்கு என்ன விட்டுச் சென்றது என அடிக்கடி கேள்விகளை எழுப்புவேன்.இந்த போராட்ட்திற்கு தொடர்ச்சியான எதிர்ப்பாளராக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தவன். அந்த மனப்பான்மையையும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்குபவன். போரின் பின் ஹபிள் ( Hobble )தொலைநோக்கியால் பார்க்காமல் தமிழ் பகுதிகளுக்கு 15 தடவைக்குமேல் சென்று சகல மட்டத்தில் உள்ளவர்களையும், மற்றும் போர்நிலங்களையும் பார்த்த அனுபவம் எனக்குண்டு. ஒரு முறை சென்ற போது கிளிநொச்சியில் சில இசைத்தட்டுகளை ஒரு முறை பெற்று…
-
பர்மிய நாட்கள் 11.
<img பர்மிய மலைப்பிரதேசம் மண்டலே இரங்கூன் என்ற பர்மிய நகரங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பமானவை. பர்மாவை காலனியாக அரசாண்ட பிரித்தானியர்களுக்கு கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பி வாழ்வதற்கு குளிர்மையான இடமொன்று தேவைப்பட்டது. கலே (Kalaw) என்ற மலைவாசஸ்தலம் பிரித்தானியர்களால் கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு ஊட்டி நுவரெலியாபோல் உருவாக்கப்பட்டது. மூன்றாவது பர்மியப்போரில் இராசதானியாக இருந்த மண்டலேயை கைப்பற்றிய பின்பு வடபர்மாவில் சான்(Shan)மாநிலத்தில் கிட்டத்தட்ட 1500 அடி உயரமான மலைப்பிரதேசத்தில் தங்களது கோடை வசிப்பிடமாக கலேயை ஆக்கினார்கள்…
-
இலங்கைத் தமிழர்களின் தலைமைகள்
தற்போதைய இலங்கைத் தமிழர்களின் அரசியல் நிலையைப்பற்றி நினைத்தபோது கிரேக்கர்களின் (Greeks) கடவுளால் சபிக்கப்பட்ட மன்னன் சிசிபஸ்னின(Sisyphus ) நினைவு எனக்கு வந்தது. மன்னன் சிசிபஸ் பதவி காரணமாக செய்த கொலைகள் மற்றும் அடாத்தான செயல்களால் கோபமடைந்த ஒலிப்பிக் தெய்வம் சோஸ்(Zeus) மலையின் மீது பெரிய பாறையை உருட்டி மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லவேண்டுமெனப் பணித்தார். பாறையை உருட்டினால் அந்தப் பாறை மீண்டும், பாரத்தால் மலை அடிவாரத்திற்கு வந்து விடும். இப்படியான தொடர்ச்சியான பிரயோனமற்ற முயற்சியை இருத்தலியல்(Existentialism) தத்துவவாதிகள்…
-
ஜெயமோகன்
2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் நான் வெளியிட்ட உதயம் இருமொழி (தமிழ்ஃஆங்கிலம்) பத்திரிகையின் 12 ஆவது நிறைவுவிழாவுக்கு அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருந்தேன். அப்பொழுதும் பலர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு நடேசனது அழைப்பில் போகவேண்டாம் என தடுத்தார்கள். அவர் வந்தால் அவரது வருகைமூலம் தமிழ்த்தேசியத்துக்கு துடக்கு வந்துவிடும் என கனவுகண்டார்கள். இங்கு அவரது நிகழ்வுகளை பகிஷ்கரிக்க ஆர்பாட்டம் செய்யவும் தயாரானார்கள். அந்த நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான the Age இன் இணை ஆசிரியர் ஜேம்ஸ் பட்டன் அவர்களும்…
-
What is wrong with the Tamil leadership in Sri Lanka ?
Noel Nadesan ( Courtesy colombotelegraph) Present political climate in Sri Lanka, especially the Tamil politics, reminds me an ancient Greek mythology. King Sisyphus was condemned by the Olympian God Zeus to spend all the eternity in fruitless labour, rolling a rock up a mountain until it rolled back down its own weight, again and again.…
-
எழுத மறந்த கவிதை
பேராதனையில் படித்த காலத்தில் எழுத நினைத்துவிட்டு அது எனது நண்பர்களுக்கோ எனது காதலிக்கோ புரியாது என நினைத்து மறந்துவிட்ட கவிதை இப்போதய நிலையில் விடலைதனத்தை நினைத்து பார்கிறேன் நேரடியாக பேசும் எனக்கு மறைபொருள் தேவையில்லை என நினைக்கிறேன். பார்வையில் அழிந்து தொடுகையில் கலைந்து உடல் கலந்து உப்புக் கடலாகி அடுத்து முத்தாகினேன்