பகுப்பு: Uncategorized
-
புஸ்பராணி :நினைவஞ்சலி
Mrs Rajeswary Balasubramanian தமிழ் இன விடுதலையின் ஆரம்ப பெண் போராளி எழுத்தாளர் சகோதரி புஸ்பராணி சிதம்பரி அவர்களின் நினைவஞ்சலிக்கான எனது சிறு குறிப்பு. 5.7.25 எங்களை விட்டு மறைந்து விட்ட சகோதரி புஸ்பராணி சிதம்பரி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்பான புஸ்பராணி அவர்களுக்காக இன்று நடத்தும் ஞாபகார்த்த அமைவுக்கு என்னை அழைத்த சகோதரர் கிருஷணரராஜா அவர்களுக்கு எனது மனமார்;ந்த நன்றி. புஷ்பராணியைப்; பற்றி நினைவஞ்சலி உரையாற்ற இங்கு வந்திருக்கும் தகமைகளுக்கும்,அதைக்…
-
யப்பானில் சில நாட்கள்: 9ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) கொயாட்டா.
கொயாட்டா நகரமே அதிக காலம் யப்பானிய அரசின் தலைநகராக இருந்தது. இதில் (Heian period (794–1185) இக்காலத்தில் மன்னருக்கு பலமற்று போகப் பிரபுக்கள் உருவாகினார்கள். அவர்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள். கிட்டத்தட்ட ஆங்கிலேயப் பிரபுக்கள் போன்றவர்கள் . இக்காலத்தில் அதிக போர் நடக்கவில்லை என்பதால் மேலும் சீனாவின் அரசு பலமற்று போனதால் அக்காலத்தில் அமைதி நிலவியது: இலக்கியம் வளர்ந்தது என்கிறார்கள். இக்காலத்தில் யப்பானில் கவிதை மற்றும் இலக்கிய நூல்கள் பல உருவாகின.அதில் பெண்கள் முதன்மையானவர்கள். உலகம் இலக்கியங்கள்…
-
எழுத்தாளர் மெல்பன் மணி:அஞ்சலிக்குறிப்பு:
முருகபூபதி அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பன் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன். நான் உடல் நலம் குன்றியிருக்கும் சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர்,…
-
யப்பானில் சில நாட்கள்: 8 யப்பானிய நிஞ்ஜாசா, சமுராய் வீரர்கள்.
நாங்கள் சென்ற அடுத்த சிறிய நகரம் ஒன்றில்(Town of Iga) அங்கு நிஞ்ஜா வீடும், நிஞ்ஜா உடைகளும், போர்க் கருவிகளும் வைக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளது . அத்துடன் ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் நிஞ்ஜா ஆயுதங்களையும் போர் புரிவதையும் எங்களுக்குக் காட்டினார்கள். பெரும்பாலான விடயங்கள் சீனாவிலிருந்து வந்து கும்ஃபு போர்க்கலையைச் சார்ந்தது இருந்த போதிலும் அதிரடியான தாக்குதல் , தாக்கிவிட்டு மறைவது , கரந்துறைதல் என்பன முக்கிய அம்சங்களாகும் . யப்பானிய நிலவுடைமை சமூகத்திலிருந்த போட்டிகளால் …
-
யப்பானில் சில நாட்கள்:7 யப்பானியதேயிலை.
ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. …
-
Speech Honouring Jude Perera.
Noel Nadesan We are gathered here today to celebrate not only a former Victorian Parliamentarian of 16 years, but also our beloved friend, Jude Perera. As the President of the South Asian Society, I stand before you with a few questions. Are we here to celebrate him because he was from Sri Lanka? Because he…
-
யப்பானில் சில நாட்கள்:6காமகுரா அமிதா புத்தர்.
டோக்கியோவிலிருந்து கிழக்கே காமகுரா போகும் வழி கடற்கரைச்சாலை ஒரு பக்கம் கடற்கரை மறுபகுதியில் மலைத்தொடர்களைப் பார்க்க முடிந்தது. இந்த மலைத்தொடரின் மத்தியில் யப்பானின் முக்கிய ஃபூஜி மலை உள்ளது. இந்தியாவில் இமயமலைபோல், யப்பானிய மதச் சடங்குளிலும் இலக்கியத்திலும் ஃபூஜி மலை கருப்பொருளாக உள்ளது. தற்காலத்தில் வெளிநாட்டினரும் இங்கு செல்வதும் மலையேறுவதும் முக்கிய ஒரு விடயமாக உள்ளது. நாங்கள் சென்ற இலையுதிர்காலத்தில் காலத்தில் பஸ்ஸில் போகும்போது பனிபடர்ந்த சிகரங்கள் மத்தியில் ஃபூஜி மலையை எங்களால் பார்க்க முடிந்தது .…
-
யப்பானில் சில நாட்கள் 5: இரவில் டோக்கியோ
டோக்கியோவில் தங்கிய மூன்றாவது நாள் காலையில் எங்களுக்கு ஓய்வு தரப்பட்டு, உங்களுக்கு விரும்பிய இடங்களுக்கு நீங்கள் செல்லலாம் எனச் சொல்லப்பட்டது. காலையில் எழுந்தபின் எங்கள் குழுவில் பலர் புலட் ரெயின் ஏறி டோக்கியோவின் மத்திய நகரத்திற்குச் சென்றார்கள். நாங்கள் ஏற்கனவே இரவில் டோக்கியோ பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என பிரத்தியேகமான பயணம் ஒழுங்கு பண்ணி இருந்ததால், நாங்கள் பகலில் போவதைத் தவிர்த்துக் கொண்டோம். டோக்கியோ உலகத்தில் பெரிய நகரம் அத்துடன் மொழி தெரியாது என்பதும் சிறிது பயத்தையும்…
-
யப்பானில் சில நாட்கள்:4மீஜி ஷின்டோஆலயம்
மீஜி சின்ரோ ஆலயம் ( Meiji Shrine ) யப்பான் செல்பவர்கள் தவிர்க்க முடியாத இடம். அதாவது இந்தியாவில் புது டெல்கியில் பிர்லா மந்தீர் என பிர்லாவின் பெயரால் கோவில் இருப்பது போல் இங்கு மீஜி என்ற யப்பானிய மன்னரின் பெயரால் இந்த ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் மன்னரால் கி.பி. 1800 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்ட 175…
-
யப்பானில் சில நாட்கள்:3 சென்சோஜிபுத்தஆலயம் (Sensoji temple in Asakusa)
———————————– நாங்கள் சென்ற அசகுசா என்ற இடத்தில் உள்ள புத்த கோயில் யப்பான் வருபவர்கள் எவரும் தவறவிடாது செல்லும் இடமாகும் இது டோக்கியோவில் உள்ளது . 30 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போவார்கள். முக்கியமான மட்டுமல்ல எல்லா நாட்களுமே உல்லாசப்பிரயாணிகளால் நிறைந்திருக்கும். அசகுசா என்பது புல்தரை என்ற கருத்தாகும் அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அருகில் ஆறு ஓடுகிறது தற்போது முழு இடமும் கடைவீதிகள், உணவகங்கள் நிரம்பி உள்ள இடமாகிறது. நமது நாடுகளில் உள்ளது போல்…