பகுப்பு: Uncategorized
-
கானல் தேசம்: பழைய கள், பழைய மொந்தை ஆனால் தவிர்க்க முடியாதது.
ஹஸீன் நிறைய வேலைகளுக்கிடையில் இந்த நாவலை நான் வாசித்தேன். இந்த கால கட்ட மனிதர்களுக்கு இன்னும் நாவல் வாசிக்க நேரம் இருக்கிறதா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்கும் மீன்டும் எழுந்தது. போழுது போக்குக்காக நாவல் வாசிபபவர்கள் நிச்சயமாக குறைந்துதான் இருக்க வேண்டும்.நாவலை விடபோழுது போக்க கூடிய சாதனைங்கள் எப்போதும் கையில் இருக்கும் படியான காலத்தில் இருக்கிறோம். இப்போது நாவல் படிப்பது தேவை நிமிர்த்தமாக இருக்கிறது. அந்த தேவைகளில் முக்கியமான ஒன்று புரிந்து கொள்ளல் எனும் அடிப்படையில்…
-
நூல் அறிமுகம் -நடேசனின் “எக்ஸைல்
படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் “எக்ஸைல்” குறித்து ஒரு பார்வை சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல் — முருகபூபதி—– ” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான்…
-
மனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா.
இரண்டு தடவைகள் கம்போடியா சென்றபோதும் படிக்காமல் பரீட்சைக்குச் சென்ற மாணவனின் மனதில் எழுவதுபோல் ஒரே கேள்வி விடைதேடி என் மனதில் அங்கலாய்க்கும். உலகத்தில் பல இன அழிப்புகள் நடந்திருக்கின்றன அங்கெல்லாம் வேறு இனம், மதம் என வெறுப்பேற்றப்பட்டு கொலைகள் நடந்தன . ( துருக்கி- முஸ்லீம்கள் – ஆர்மேனியர்கள்- கிறிஸ்தவர்கள், ஜெர்மனி- யூதர்கள், ஹொரு – (hutu)- ருட்சி (tutsi _- என ருவாண்டாவில் இரு இனக் குழுக்கள்) இந்த இன அழிப்புகளின் கருத்தியலை ஏற்காத போதிலும்…
-
மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்
வாசகர் முற்றம் – அங்கம் – 02 “தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்” முருகபூபதி கன்னட இலக்கியம் அறிமுகம் பழங்காலம் (600 – 1200) கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற…
-
டான்” தொலைக்காட்சி குகநாதன்
நீரில் வாழும் மீன்போல் 40 வருடங்கள் ஊடகத்துறையில் தனது சுவாசக்காற்றை எடுத்து வாழும் “டான்” தொலைக்காட்சி குகநாதனை 2009 மார்ச் மாதத்தில் சந்தித்த பின்பு ஒரு சகோதரனாக எனக்கு நெருக்கமானவர். இலங்கை சென்றால் அவருடன் தங்குவது, ஐரோப்பா சென்றால் அவரது குடும்பத்தினருடன் தங்கியது மற்றும் நல்லது கெட்டது எனப் பல விடயங்களில் பங்கு பற்றியபோது எனக்குத் தோன்றிய எண்ணத்தை இங்கே சொல்லவேண்டும். ஊடகம், எழுத்துத்துறை என்பது கொக்கெயின் போன்று போதை தரும் விடயம். அதில் உண்மையாக ஈடுபாடு…
-
தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்
” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்தவர் முருகபூபதி ” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் இணைந்த குகநாதனை 1984 இல்தான் முதல் முதலில் அந்த அலுவலகத்தில் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு அவரை அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது லண்டனில் வதியும் மற்றும் ஒரு பத்திரிகையாளர்…
-
மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers).
மீகொங் நதிவழியே மிதக்கும் சந்தையை பார்த்து விட்டு , நாம் பயணித்த எமது படகு தொடர்ந்து போனபோது , நாங்கள் இறங்கிய சிறியநகரம் ( Cai be). அங்கு அவல் செய்வது , அரிசியில் சாராயம் வடிப்பது போன்ற பல சிறு கைத்தொழில்களைச் செய்யும் மக்களைப்பார்க்க முடிந்தது. நதிக்கரையில் இவற்றைத் தயாரிப்பதனால், இவர்களால் பொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த முடிகிறது . இந்த இடங்கள் தற்பொழுது உல்லாசப்பிரயாணிகள் தரிசிக்கும் பகுதிகளாகிவிட்டது . பாம்பு அடைத்த வடிசாரயங்கள் கொண்ட போத்தல்கள்…
-
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா!
அன்றும் இன்றும் – அங்கம் 01 டீ.பி.-தென்னக்கோன் கலாநிதி-விஜயானந்த-தகநாயக்கா ரஸஞானி உலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்ப்போமேயானால், வனாந்தரமயமாதல், பாலைவனமயமாதல், வறட்சிமயமாதல், வெப்பமயமாதல், கிராமமயமாதல், நகரமயமாதல் முதலான பரிணாம வளர்ச்சியும், இவை தொடர்பான சிந்தனையும் மேலோங்கியிருந்தன. கடந்துவிட்ட சில நூற்றாண்டுகளிலிருந்து பார்த்தால் உலகமயமாதலும் பேசுபொருளாகிவிட்டது. இதற்கு தேசங்கள் பலியாகியிருப்பதை காணமுடிகிறது. சமூகத்தில், மதங்களில், நோய் உபாதைகளில், வெகுஜன அமைப்புகளில், உள்நாட்டு மற்றும் உலக அரசியலில் மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அன்று நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்றில்லை. இன்று நாம்…
-
படித்தோம் சொல்கின்றோம்:
ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் பூவுலகைக்கற்றலும் கேட்டலும் முருகபூபதி பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன. அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில்…
-
எறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்
கருணாகரன் “கஜா புயல்” மிரட்டியதால் எங்கள் வீட்டில் முப்பது வருசமாக நின்று பழம் பழமாகப் பழுத்துக் கொட்டிய பலா மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. துக்கமwar-tree்தான். ஆனால் வேறு வழியில்லை. கிளைகள் வளர்ந்து வானமுகட்டைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன. ஏதேனும் ஒரு கிளை ஒடிந்தாலும் கூரையில் பாதி போய் விடும். ஏற்கனவே ஒவ்வொரு பழச் சீசனிலும் பத்துப் பன்னிரண்டு ஓடுகள் உடையும். விசுவர் வந்து எவ்வளவு கவனமாகப் பழங்களை இறக்கினாலும் சோளகக் காற்றிற்கு விழுகின்ற காய்களைச் சமாளிக்கவே…