பகுப்பு: Uncategorized
-
ஒரு புலியின் கதை
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட தினம் ( 19-05-2009 ) இன்றாகும் ! ( இக்கட்டுரையை டி . பி.எஸ் .ஜெயராஜ் பைனான்சியல் டைம்ஸ் இல் எழுதியுள்ளார் ) விடுதலைப்புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் கரையில் புலிகள் இராணுவரீதியாக தோல்விகண்டதையடுத்து தெற்காசியாவின் மிக நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்தது. பிரபாகரன் இல்லை…
-
“ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன்
இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருக்கும் “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் நேசிக்கும் பண்பாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்.அந்த வரிசையில் தீவிரமான வாசிப்பு பயிற்சியிலிருப்பவர்கள் தொடர்பாக வாசகர் முற்றம் என்ற தலைப்பிலும் சிலரது வாசிப்பு அனுபவங்களை கேட்டு எழுதி பதிவுசெய்துவந்துள்ளேன்.அந்த வரிசையில் மெல்பனில் நீண்டகாலமாக என்னுடன்…
-
வண்ணாத்திக்குளம்
முன்னுரை எனது எழுத்துலகத்தின் அரிச்சுவடியே இந் நூலில் பதிவாகியுள்ளது. எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேச முடியாத சிறுவனைப் போன்று நானும், எனது வாழ்வில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தேன். அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த காலத்தில் எனது கல்விசார் பட்டம் அங்கீகரிக்கப்படாதமையால் வேலையும் கிடைக்க வில்லை. புலம் பெயர்ந்த அங்கலாய்ப்பு அவலம் ஒருபுறம், பல வருடங்களாக பழகிய பல நண்பர்களை வன்முறைக்கு இழந்து விட்ட துயரம் ஒருபுறமாக மனஅமைதியற்றவாறு…
-
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் அத்தியாயம் 1
அக்கினி ஞானஸ்ஞானம் ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை ‘எங்களுக்குத் தெரியும் சனத்துக்கு என்ன தேவையெண்டு. நீங்கள் சனத்தோட கதைக்கத்தேவையில்லை. அதுகளோட கதைச்சிட்டு, வெள்ளைக்காரனுக்கு தேவையில்லாததைச் சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவியள். அதாலதான் சொல்லுறம், நாங்கள் சொல்லுறதை நீங்கள் செய்யுங்கோ.’ முக்கால் மணித்தியாலமாக TRO ரவி தனக்கேயுரிய உரத்த குரலில் எங்களை நோக்கி ‘அன்புடன்’ வேண்டிக்கொண்டிருந்தார். அவரது உதவியாளர் ரெஜி மௌனமாக எங்களை ஒருவிதமாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். எனக்கோ சலிப்புத்தட்டத் தொடங்கியது. கூட்டம் நடந்த அறையின் பின்சுவரை அண்ணாந்து பார்தேன். ஒருவித…
-
விசிலர் , மேற்குக் கனடாவில் சில நாட்கள்
பஸ்ஸில் முப்பதிற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்களுடன் எங்கள் பயணம் ரொக்கி மலையின்மீது தொடங்கியது. பிஜியைச் சேர்ந்த இந்திய இளைஞனே எங்கள் வழிகாட்டி. கேர்ணல் ரம்புக்கா, எண்பதின் இறுதியில் செய்த ஆயுதப் புரட்சி பிஜி இந்தியர்களை வெளித்தள்ளியது. பலர் அவுஸ்திரேலியா, கனடா , இங்கிலாந்து என இலங்கைத் தமிழர்கள்போன்று தப்பியோடினார்கள். கடந்தமுறை இரவில் சென்று பார்க்க முடியாத மலை சார்ந்த இடமான விசிலர் 11 ஆயிரம் நகரம் மக்கள் வசிக்கும் நகரம். ஆனால், குளிர்காலத்தில் இங்கு பத்துமடங்காக மக்கள் பெருகுவார்கள்.…
-
நடேசனின் கானல் தேசம்
வாசிப்பு அனுபவம் . வடகோவை வரதராஜன் பாலைவனத்தில் மனோரத்திய உணர்வுகளுடன் சிறப்பாக தொடங்கும் கதை, திகில் நிறைந்த துப்பறியும் நாவல் போல் தொடர்கிறது. போர் நடந்தபோது இலங்கையில் இல்லாத ஒருவர் மிகுந்த உழைப்பைக் கொடுத்தே இப்படியான நாவலை எழுத முடியும் . வன்னியில் நடந்த , மற்றவர் காட்டாத இன்னோர் பக்கத்தை இரத்தமும் சதையுமாக காட்டுகிறது இந்நாவல் . இலங்கைத் தமிழர்கள் உணர்வுகளை பேச்சு மொழியூடாக காட்டுவதில்லை உடல் மொழியூடாகவே காட்டுவார்கள் எனக் குறிப்பிடும் ஆசிரியர், அசோகன்…
-
விக்டோரியா, மேற்குக் கனடாவில் சில நாட்கள்
நடேசன் கனடாவில் வதியும் எனது சகோதரங்களைப் பார்ப்பதற்காக இதுவரையில் மூன்று தடவைகள் குளிர் காலத்தில் சென்று திரும்பியிருக்கின்றேன். விமானம் முதலில் தரிக்கும் நகரமான வன்கூவரில் இறங்காது, மீண்டும் விமானத்திலேயே ரொண்ரோவிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் அதேவழியால் ஆஸ்திரேலியா திரும்பிவிடுவேன். கனடா என்ற பரந்த தேசத்தின் அழகான பகுதி மேற்கில் இருப்பதை அறிவேன். விமானத்திலிருந்து கீழே பார்க்கும்போது நீலக்கடலில் திட்டி திட்டியாக பல தீவுகளை தன்னகத்தே கொண்ட பிரதேசங்களை தரிசிக்க முடியும். இறங்கி பார்த்துவிட்டுபோவோமா என்ற ஆவலை அடக்கிக்…
-
அசோகனின் வைத்தியசாலை- கலந்துரையாடல்
மே – 10 – ஞாயிறு மாலை இந்திய நேரம் 7 மணிக்குநறுநிழல் ZOOM MEETING ID : 4775896897 –மே – 10 – ஞாயிறு மாலை 7 மணிக்குஇந்திரன் உரை – நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை” + புலம்பெயர் எழுத்து பற்றி. கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே.நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை எழுவைத் தீவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர். இவர் நான்கு நாவல்களையும் பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.இவர் எழுதிய நாவலை முன்…
-
நூதனம் அடங்கிய தொனி
வாழும் சுவடுகள் – நொயல் நடேசன்——————————–>நடேசன் இலங்கை – நபீல் யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத் தீவில் பிறந்தவர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் படித்த பின் சில காலம் இலங்கையில் பணியாற்றினார். இப்போது இருப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். <நடேசனுடைய நான்கு நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. கூடவே பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.அங்கு உதயம் என்ற பத்திரிகையை மிக்க துணிச்சலோடு வெளியிட்டிருக்கிறார். உண்மையில் ஒய்வு நேரத்தில் படிப்பதற்கான மிக மிகப்…