பகுப்பு: Uncategorized
-
நம்மிடமிருந்து விடைபெறும் நண்பர் சபேசன்
நடேசன். 1954 ஜூலை 7ஆம் திகதி பிறந்த சண்முகம் சபேசன், 2020 மே மாதம் 29 ஆம் திகதி காலமானார் என்ற போதிலும், 2009 மே மாதத்தில் முடித்த ஈழத்துக்கான போரினால் மனக்காயமடைந்தவர். அந்த மனக்காயங்கள் , முள்ளிவாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வெளிநாட்டில் வாழ்ந்த அவருடன் கடந்த பதினொரு வருடங்களாக வலிதந்துகொண்டே இருந்ததை நன்கு அறிவேன். சபேசனது அந்தத் தீராத வலி அவர் மறையும் வரை ஆறவேயில்லை. அந்தக்காயங்களுடன்தான் அவர் எம்மை விட்டு விடைபெற்றுள்ளார்.…
-
வண்ணாத்திக்குளம்.; வட்டப்பாறை.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததும் என்னுடைய அப்பா அம்மா திருமணத்துக்கு சம்மதித்த செய்தியைச் சித்ராவிடம் சொல்ல வேண்டும் என துடித்தேன். தொடர்ந்து கந்தோரில் வேலை இருந்தது. மதவாச்சி பிரதேசத்து மாடுகளுக்கு மழைகாலம் வரும் முன்பு தடுப்பூசி போட வேண்டுமென்பதால் இரவு பகலாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மனதுக்குள் திட்டியபடியே வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை பதவியா சென்றேன். நான் போகும் போது வாசலில் என்னை எதிர்பார்த்து அவள் காத்து நின்றாள். பூப்போட்ட சட்டையும் அதன் கீழ் பூப்போட்ட துணியும் அணிந்திருந்ததால்…
-
முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்;அத்தியாயம் 10
மீண்டும் ஓர் கூட்டம். ஆனால் இது சற்றுவித்தியாசமானது. ஜக்கியநாடுகள் சபையின் ‘ஆயுதப் போரட்டத்தில் சிறுவர்கள்’என்றபிரிவின் உலகளாவியதலைவர் திரு. ஓலரா ஒட்டுண்ணு 3 நாள் வன்னிவிஜயத்தின் இறுதியில் வன்னியில் பணிபுரியும் சகல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களினுடனானஒன்றுகூடல். வன்னியில் புலிகளால் அவருக்கு அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பங்குபற்றிய சகல கூட்டங்களிலும் புலிகள் கலந்துகொண்டார்கள். ஆனால் நான் குறிப்பிடும் இந்தக்கூட்டத்திற்குபுலிகள் அழைக்கப்படவில்லை. இந்தக்கூட்டத்தில் நான் ஒருவனே இலங்கைப்பிரசை. (வெள்ளாட்டுமந்தையில் கறுப்பாடு!) ஆரம்பத்தில் சிறுவர் பாதுகாப்புநிதிய இங்கிலாந்துப் பிரதிநிதிவன்னியில் சிறுவர்களின் அப்போதைய நிலைமைகளை…
-
வண்ணாத்திக்குளம்.; வியாபாரிமூலை
விடுதியில் சமையல் என் பொறுப்பானதால் குசினிக்குச் சென்று அரிசியை அளந்தபோது குணதாச எதிரில் வந்தார். ‘இன்றைக்கு எத்தனை பேர் சாப்பாட்டுக்கு’? என்றேன். ‘ஜே.வி.பி காரர் வராவிட்டால் ஆறு பேர் எதற்கும் இரண்டு பேருக்குச் சேர்த்து போடுங்கள்’ என கூறியபடி குணதாச சிகரெட்டை பற்ற வைத்தார். எங்கள் விடுதியில் சுப்பையாவுக்கு அடுத்ததாக வயதில் மூத்தவர். இவரது குடும்பம் கம்பளையில் வசிக்கிறார்கள். இவர் மேல் எல்லோருக்கும் மரியாதை உண்டு. ‘அதுசரி ஏன் சுப்பையா மாத்தையா வேலைக்கு வரவில்லை? இன்றைக்கு புதன்கிழமை…
-
முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்;அத்தியாயம் 9
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை பழையபுலிகளின் அனுபவப்பகிர்வு எனது நினைவுகளை இரண்டுவருடம் பின் நோக்கி இழுத்துச் சென்றது. வன்னியில் அப்பொழுது மாத்தையா கொடிகட்டிபறந்தகாலம். TRO அப்பொழுதுதான் அங்கே காலூன்ற ஆரம்பித்தது. ஒருநாள் காலைஅப்போதைய TRO பொறுப்பாளன் என்னைசந்திப்பதற்காகஅவசரஅவசரமாக வந்தான். ‘சேர் இண்டைக்குமத்தியானம் ஒரு கூட்டம் இருக்கு நீங்கள் கட்டாயம் வரவேணும,; மாத்தையாஅண்ணையும் வாறார்’என்றான் கதையோடுகதையாக. ‘என்னடாப்பா என்ன கூட்டம் என்றுகொஞ்சம் விபரமாகச் சொலலுமன்’என்றேன் சற்றே சந்தேகத்துடன்.‘ஒண்டும் பெரிசாய் இல்லை சேர்….சில நிறுவனங்களைஅவர் சந்திக்கவேணுமென்றார.; நான் உடனே உங்கட நிறுவனத்தைத்தான் நினைச்சனான்’என்றான்.…
-
வண்ணாத்திக்குளம்.; கால்வாய்க்கரையில்
நான் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடிதம் வந்திருந்தது. அது சித்திராவின் கடிதம். அந்தக்கடிதத்தை மட்டும் சட்டைப்பையில் வைத்து விட்டு மற்றைய கடிதங்களை விரைவாக வாசித்து முடித்தேன். சின்னவயதில் ‘மஞ்சி’ பிஸ்கட் பெட்டியில் முக்கோண வடிவமான பிஸ்கட் எனக்கு பிடிக்கும். ஆகவே அதைத் தனியாக எடுத்து வைத்து விட்டு வட்டமான, நீளமான பிஸ்கட்டுகளை முதலில் சாப்பிடுவேன். சுpன்ன வயது நினைவுக்கு வந்தது. என் பிடித்தமான கடிதத்தை வாசிப்பதற்கு முன் கதவை மூடி விட்டு வந்தேன். முன்னறையில் யாருமில்லை எனினும்…
-
முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் ;அத்தியாயம் 8
அக்கினிஞானஸ்நானம் பழையபுலிகள் மனம் திறந்துகதைப்பதுஅரிது. தங்களின் இயக்கநடவடிக்கைகள் குறித்துவாயேதிறக்கமாட்டார்கள். எமது நிறுவனத்தில் இரண்டு வருடங்களாகப் பணிபுரியும் முன்னாள் ‘பளைப்பொறுப்பாளரும்,மல்லாவிப் பொறுப்பாளரும்’ இதற்குவிதிவிலக்கல்ல. நான் சிலசமயங்களில்,அவர்கள் பங்குபற்றிய தாக்குதல்கள்,மறக்கமுடியாததாக்குதல்கள் மற்றும் ஏன் அவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறினார்கள் என்றுபவ்வியமாகக் கேட்பேன். ‘பெரிசாய் சொல்வதற்க்குஒன்றும் இல்லை தம்பி இயக்கத்திலசேர்ந்திட்டன். அம்மா தனிச்சுப்போனா.குடும்பத்தைப் பார்க்க ஒருதரும் இல்லை…’போன்ற சாட்டுக்களைக் பட்டும்பாடாமலும் கூறுவார்கள். நானும் ஒன்றையும் விடுத்துவிடுத்துக்கேட்கமாட்டேன். அவர்கள் இயக்கத்தைவிட்டுவெளியேறுகையில் இயக்கநடவடிக்கைகளைப்பற்றி வெளியில் வாய் திறக்கக்கூடாது என்ற கடும் நிபந்தனை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்பது…
-
ஆனந்தவிகடனின் மூன்றாம் தர ஜனரஞ்சக வியாபாரம் .
எழுதியவர் யாரோ ஆனந்தவிகடன் பற்றி மேலும் எனக்குத் தெரிந்த தகவல்கள் சில: ஒரு காலகட்டத்தில் அதன் நிறுவனர் ஜெமினிவாசன் ஆசிரியராகவிருந்தபோது பல தரமான சிறுகதைகள் அதில் வெளிவந்தன. ஜெயகாந்தனின் சில சிறந்த சிறுகதைகளும் “ முத்திரைக்கதை “ அந்தஸ்துடன் வெளிவந்தது. அவ்வேளையில் அச்சிறுகதைகளுக்கு ஆனந்தவிகடன் 500/ = இந்திய ரூபாவும் சன்மானமாக வழங்கியது. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் அதில் ஒன்று.பின்னாளில் ஆனந்தவிகடனின் போக்குப்பிடியாமல், ஜெயகாந்தன் அதில் எழுதுவதை நிறுத்தினார். அதற்காக தனக்கு ஆனந்தவிகடன் வழங்கிய சன்மானங்களை அவர் திருப்பிக்கொடுக்கவில்லை…
-
வண்ணாத்திக்குளம் ;பன்றி வேட்டை
காமினியும் நானும் வெள்ளி இரவு வேட்டைக்குச் செல்ல தீர்மானித்தோம். காமினி நண்பனின் காரையும் இரண்டு துப்பாக்கிகளையும் இரவலாகப் பெற்று வந்தான். செட்டிகுளத்துக்கு அருகில் உள்ள ராமன் குளம் என்னும் இடத்தில் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். அந்த கிராமத்தினை சுற்றி அடர்ந்த காடு உண்டு. இந்த காடுகளும் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தின் எல்லை வரை செல்வதால் பல மிருகங்கள் அதிக அளவில் வரும். காட்டுப் பன்றிகள் கிராமத்தில் பயிர்களை அழித்து விடும். முஸ்லிம் விவசாயிகள் காட்டுப்பன்றிகளைச்சுட விரும்பாததால்…
-
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 7
ரெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் களிப்பு அடங்குவதற்க்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒரு சில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர். சேர சோழ பாண்டியர்கள் ( புலிகளின் வியாபார நிலையங்கள்)…