பகுப்பு: Uncategorized
-
நடேசனின், உனையே மயல் கொண்டு.
உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது. எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது. அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும்…
-
இம்மாதம் சுந்தரின் Dare to Differ நூல் வெளியீடு
மெல்பன் ‘சுந்தர்’ சுந்தரமூர்த்தியின் வாழ்வும் பணிகளும் முருகபூபதி சமூகப்பணிகளில் ஈடுபடுவதற்கு மூலதனமாக இருப்பது: பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை, நெகிழ்ச்சியான இயல்புகள், அர்ப்பணிப்பு, இரக்க சிந்தனை. அவ்வாறு சமூகப்பணிகளில் ஈடுபடும் ஒருவர் தனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று சொல்லி ஒதுங்கிச் செல்லவும் முடியாது. அவ்வாறு எதிலிருந்தும் ஒதுங்காமல் தனக்குச்சரியெனப்பட்டதை, அந்தந்த காலங்களுக்கு ஏற்ப துணிந்து சொல்லிச்செயல்பட்டவர்தான் ஆஸ்திரேலியா மெல்பனில் நான்கு தசாப்த காலமாக ( 48 வருடங்கள் ) வதியும் சபாரத்தினம் சுந்தரமூர்த்தி. இவரை…
-
கர்ப்பம் : கடிதம்
அகழ் தளத்தில் உங்கள் சிறுகதை படித்தேன். “நான் ஒரு மிருக வைத்தியர் ” என அடக்கமாக தொடங்கும் கதை நேர்கோட்டில் செல்லாமல் பல பரிமாணங்களை தொட்டுச் செல்கிறது. சோபியா கற்பனைப் பாத்திரமா அல்லது கடந்து சென்ற கனவுக்கன்னியா என ஒரு குறும்பு மின்னல் என் மனதிலும் தோன்றி மறைந்தது என்பது உண்மையே. மனைவியையும் கதைக்குள் உட்காரவைத்து தப்பித்துக் கொண்டீர்கள்! சோபியாவின் சீண்டல்கள் கதைக்கு ஒரு கிளுகிளுப்பைத் தந்தாலும் அவற்றிற்கு பின்னால் ஒரு சோகக்கதை உண்டு என்பதை கதை…
-
சாஸ்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸன்ஸ் (Great Expectations)
சில வருடங்களுக்கு முன்னர் நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது, கென்ட் ( Kent) பகுதியில் வாழும் என் நண்பன் ஒருவனிடம் சென்றேன். அவன் என்னை, அங்கு இடங்கள் காண்பிக்க வெளியே அழைத்துச் சென்றான். முதலில் ஒரு கோட்டையைப் பார்த்தபோது பின்னர் மாலையாகிவிட்டது. இறுதியில் ஆங்கில எழுத்தாளர் சார்ள்ஸ் டிக்கின்ஸ் வாழ்ந்த வீட்டிற்கு அவன் அழைத்துச் சென்றபோது, இரவாகிவிட்டது. பொம்மையாகச் செய்யப்பட்டு, அவரது நாற்காலியில் மேசையின் முன்பாக அமர்ந்திருந்த சார்ள்ஸ் டிக்கின்ஸ்ஸின் முழு உருவத்தையும் யன்னலுடாக பார்க்க முடிந்தது. அதன்பின்னர்,…
-
கானல்தேசம்: காதல்..
———————————————————— “என்னிடம் பட்டாணிக் கடலையிருக்கிறது. செல்விக்கு எப்பொழுதும் கொறித்தபடியே இருக்க வேண்டும். அதனால் இரண்டு பையில்போட்டு வந்தவள் என்னிடம் ஒரு பையைத் தந்தாள்.” “அப்ப சமாளிக்க முடியும். என்னிடம் தண்ணியிருக்கு. படுக்கை வசதியில்லை. நான் மரங்கள் மீது படுத்து நாள் கணக்கில் தூங்கியிருக்கிறேன்” மோட்டார் சைக்கிளின் பையில் இருந்து எடுத்து வந்த துணியை அந்த ஹோலின் ஒரு கரையில் போட்டான். கடலையை பகிர்ந்து கொடுத்தாள். தண்ணீரை அருத்தி விட்டு தரையில் விரித்த துணியின் மீது கார்த்திகாவை படுக்கச்…
-
24 . கரையில் மோதும் நினைவலைகள்: சித்திரா உருவாகிய கதை
நடேசன் நான் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற பின்னரே யாழ். மேயர் துரையப்பா கொலை செய்யப்பட்டார். பல தமிழ் பொலிஸ்காரர்கள் மற்றும் அரச ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வடபகுதியில் கொலை செய்யப்பட்ட விடயம் பத்திரிகை மூலமாகக் கேள்விப்படுவேன். விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்தால் கொலைகளுக்கான காரணங்கள் நண்பர்களால் விளக்கப்படும். காட்டிக்கொடுத்தவர் அல்லது துரோகி என்று அவர்களுக்குப் பெயர் வைத்து மேலே அனுப்பியிருந்தனர். துரோகிகள் களையெடுக்கப்பட்டதாக சமூகம் மகிழ்ந்திருக்கும். வட – கிழக்குப் பகுதிகளில் நடந்துகொண்டிருந்த வன்முறைகளைக் கேள்விப்பட்டு வந்த எனக்கு,…
-
இந்திரன் சிறப்புரை :
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் இந்திரன் சிறப்புரை: திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும் தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் இந்திரன், 2011 ஆம் ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர். 19-02-2022 சனிக்கிழமை அவுஸ்திரேலியா – இரவு 8-00 மணி பிரித்தானியா– காலை 9-00 மணி இலங்கை – இந்தியா மதியம் 2-30 மணி மெய்நிகர் ( Zoom ) இணைப்பு: https://us02web.zoom.us/j/83429584996?pwd=bVF2TG9CVXRkeHY5cVhvUEVERkQ3QT09 Meeting ID: 834 2958 4996 Passcode: 493623
-
மனிதரில் எத்தனை நிறங்கள் : சிறுகதை
நடேசன் சில வருடங்கள் முன்பாக இருக்கும். மெல்பனின் குளிர்காலம். எப்படி என்றால் மழையோடு தென் சமுத்திரத்திலிருந்துவரும் குளிர்காற்றும், ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இடி முழக்கத்தோடு மழையாகத் தேனிலவு கொண்டாடும், அந்த நாளில் எவரும் நாய் பூனைகளுடன் என்னைத்தேடி வரப்போவதில்லை. அவர்கள், தங்கள் வீடுகளைக் கூடாக்கியபடி, வீட்டின் கணகணப்பில் மகிழ்வாக இருப்பார்களென்ற நினைப்போடு அறையிலிருந்தேன். மதியமாகிவிட்டது எனக்கடிகாரம் காட்டியது. ஆனால் வெளியே சீதோஸ்ண நிலைமை அதற்கான அறிகுறியற்று மாறாது இருந்தது. எனது மிருகவைத்திய வேலையிடத்திலிருந்து எனது வீட்டுக்கு ஐந்து…
-
மலையாள சினிமா.
நடேசன், நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும் திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின் தொழில்பாடு போன்றவை. வர்க்கம் ,சாதி, மதம் போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல் அல்லது அதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே தமிழ்த்திரைப்படங்கள். இவற்றில் பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் அவர்களது அகச்சூழலைப்…
-
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம்-.விருதுகள்
சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் ! மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை…