பகுப்பு: Uncategorized
-
“இவர் நல்லவரா..? கெட்டவரா..?”
நடந்தாய் வாழி களனிகங்கை அங்கம் – 03 ” ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடிவளர்த்து, ஜோராக குடியிருப்போம்” என்ற திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1964 இல் வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்றதிரைப்படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் வாயசைக்கும் இந்தப்பாடலை கவியரசு கண்ணதாசன் இயற்றியிருந்தார். இக்காலத்தில் இத்தகைய பாடல்கள் வெளியாவது அபூர்வம். இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் அழகியலோடு சித்திரித்தன அக்காலத் திரைப்படப்பாடல்கள். இன்று பெண்ணின் உடலை ஆணும், …
-
பிரதமர் பண்டாரநாயக்காவை கொலை.
அங்கம் 02 நடந்தாய் வாழி களனிகங்கை மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த சந்திரோதயம் படத்தில் “புத்தன், யேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா, ஏழை நமக்காக! கங்கை, யமுனை, காவிரி , வைகை ஓடுவதெதற்காக? நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக! “ என்ற பாடல் வருகிறது. இந்தப்பாடலை கவிஞர் வாலி இயற்றியிருப்பார். டி.எம். சௌந்தரராஜன் பின்னணிக்குரல் கொடுத்திருப்பார். இலங்கைக்கு முதலில் புத்தரும் பின்னர் காந்தியும் வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். இலங்கையில் கண்டியில் பிறந்தவர். இலங்கையில் ஓடும்…
-
நடந்தாய் வாழி களனிகங்கை
முருகபூபதி அங்கம் 01 “நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..?” என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும் நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப்…
-
தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள்…
-
சுந்தரமூர்த்தியின் நினைவுகள் – Dare to Differ-A memoir.
ஒரு தாய் தனது குழந்தையின் அந்தகக் கண்ணில் விழுந்த தூசியை சேலைத் தலைப்பின் நுனியால் எடுத்தபின்னர், தனது வாயால் கண்ணில் ஊதி பின்பு கன்னத்தில் முத்தமிடுவதுபோல் விடுதலைப்புலிகளை விமர்சிக்காது, அதே நேரத்தில் மெல்பன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரது பல அட்டகாசமான நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது Dare to Differ -A memoir என்ற புத்தகம் . சமீபத்தில் வெளிவந்துள்ள Dare to Differ என்ற நூல் மெல்பனில் வாழும் சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின் கடந்த கால நினைவுகளைப் பேசுகிறது. பொதுவான…
-
25 . கரையில் மோதும் நினைவலைகள்.
விலகுதல். நடேசன் இலங்கை, 1977 ஆண்டு பல தரப்பட்ட வன்செயல்களை சந்தித்தது. அதைப்பற்றிய விபரங்களையும், அவை எவ்வாறு நாட்டினது வரலாற்றையும் மக்களின் வாழ்க்கை முறையையும் மாற்றிப்போட்டன என்பதை பின்னர் பார்ப்போம். அந்த ஆண்டுதான் எனது காதலியும் வருங்கால மனைவியாக அமைந்தவருமான சியாமளா பேராதனை பலகலைக்கழகத்தில் பிரவேசித்தார். நான் பல்கலைக்கழகம் செல்வதைவிட, சியாமளா அங்கு பிரவேசித்து படித்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் எனது பேரவா. என்னைப்பொறுத்தவரை, பல்கலைக்கழகம் செல்வது தடைப்பட்டிருந்தாலும், ஏதாவது ஒரு வியாபாரத்துறையில் ஈடுபட்டு செல்வந்தனாகியிருப்பேன். சியாமளா…
-
கொரோனோ தொற்றிய நாய்.
நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற செய்தியை இரு வருடங்களுக்கு முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை. பெரும்பாலானவை தனியான வீடுகளென்பதால் இங்கு நாய்களில் தொற்று ஏற்பட சாத்தியமில்லை என்பது எனது எண்ணமாக இருந்தது. மெல்பனில், கிழமையில் ஒரு நாள் வேலை செய்தபோதிலும் இரு வருடங்களாகத் தொடர்ந்து வேலை செய்து வந்தேன். எல்லோரும் மாஸ்க்குடன் வருவார்கள் . நானும்…
-
விரைவில் 4 வது பதிப்பு: கானல்தேசம்
கானல் தேசம் நாவல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளிவந்து முடிந்து விட்டதாகக் காலச்சுவடு பதிப்பகம் அறிவித்திருந்தார்கள் . 4வது பதிப்பு விரைவில் வெளிவரும். ருவிட்டர்ஸ் பேசிலும் கிளப் கவுசிலும் எனது புத்தகத்தை பிரபலமாக்கிய சகோதரிகள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தாமரைச்செல்வி மற்றும் பிரிஸ்பேன் பார்த்திபன், நந்தா, கவிஞர் கருணாகரன் , தோழர் சுகுவுக்கு நன்றி. நம் தமிழில் பேசிய நண்பர் சத்தார், முருகபூபதி மற்றும் Haseen Atham நண்பருக்கு நன்றிகள். அடுத்த மாதத்தில் எழுத்தாளர் சிவகாமி(IAS) முன்னுரையுடன் “பண்ணையில் ஒரு மிருகம்” என்ற நாவல் தமிழகத்தைக் களமாக- சாதி ,…
-
மாகாண சபைகளைப் பாதுகாப்பதற்கான புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள்.
13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேலும் பாதுகாக்க இணையுங்கள்..! – இலங்கையில் மாகாணசபை முறைமையின் அவசியப்பாடு குறித்த விடயமானது தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பேசுபொருளாக ஆக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் இம் மாகாணசபை எதற்கும் பயனற்றது, இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபக்கம், இம் மாகாண சபைக்குள் எதுவும் இல்லை என்று கூறிக்கொண்டே இதனை அமுலாக்க இந்தியா அழுத்தம் செலுத்த வேண்டும் என்னும் கருத்தை மறு தரப்பினர் முன்வைக்கிறார்கள். இதற்குள் எதுவுமே இல்லை என்ற கண்மூடித்தனமான நிராகரிப்பு வாதத்தைப் புறந்தள்ளி, கிடைத்துள்ள சட்டபூர்வமான தீர்வைக் கையேற்று, இலங்கையின் அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபையைப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடுகளினூடாக முன்நோக்கி நகர்த்துகின்ற சாதகமான கண்ணோட்டத்துடன் நோக்கும்படி இலங்கை அரசாங்கத்தையும் எதிர்க் கட்சிகளையும் கோருகின்ற நேர்மையான குரல்களும் அழுத்தங்களுமே இன்றைய தேவையாக உள்ளது. குழப்புவது மக்களை மேலும் அநாதரவாக்குகின்றது…. இலங்கையின் இனக்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகளுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளில் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வாக இலங்கை அரசியல் யாப்பினுள் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே வழிமுறையாக தற்போது இம் மாகாணசபைத் தீர்வே எம் கைகளில் உள்ளது. அத்துடன், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் சட்ட வலுவுள்ள ஆட்சியமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைநாட்டப்பட்ட அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான சட்பூர்வ கட்டமைப்பாக அமைந்த ஒரேயொரு நடைமுறையிலுள்ள அரசியல் தீர்வும் இம் மாகாண சபைத் தீர்வு மட்டுமேயாகும். இதைவிட வேறு அரசியல் தீர்வுகளைத் தற்போது பேசுவதும், அத்தகைய ஒன்றுக்காக இப்போது கையில் இருக்கின்ற மாகாணசபைத் தீர்வினையும் கைவிடச் சொல்லிக் குரல் எழுப்புவதும், அதற்குள் ஒன்றுமே இல்லை என்று நம்பிக்கையீனத்தை மட்டுமே ஊட்டுவதும், அவ்வதிகாரத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு வகைசெய்வதும், அதனை இல்லாமல் செய்ய…
-
வாசகர் கருத்து பிரேமலதா (சிறுகதை)
முதலில் உங்களுக்கு ஒரு பலத்த கைத்தட்டல் சார் அருமையான கதை அதுவும் இறுதி வரிகள் அதிர வைக்கிறது. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய ‘காவல் கோட்டம்’ புத்தகத்திலும் ஏறத்தாழ இதே மாதிரி ஒரு அழகான மங்கை தன்னை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்ட மன்னனை பழி வாங்க நினைத்து வேறொருவனுடன் கூடி அது அந்ந மன்னனுக்கு தெரிந்து அவளையும் அவனையும் கொன்று பழியை வேறொருவர் மீது போட்டு… அது ‘அரவான்’ என்ற படமாக வந்தது. அது ஒரு பக்கம்…