பகுப்பு: Uncategorized
-
கட்டுரை-“தெணியான்
”- லெ முருகபூபதி வடபுலத்தின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த படைப்பாளி தெணியானின் வாழ்வும் பணிகளும் கதைக்கும் கதைசொல்லிகளுக்கும் பாத்திரங்கள் தேவை. பாத்திரங்கள் (Characters ) இல்லாமல் ஒரு கதையை சொல்லமுடியாது. காவியமும் படைக்கமுடியாது. கதைகளுக்கும் காவியங்களுக்கும் மனிதர்கள், தெய்வங்கள், உயிரினங்கள், தாவரங்கள், பருவகாலங்களும் பாத்திரமாகலாம். வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பாத்திரங்களே, கதைக்கு பாத்திரமாக முடியுமா? முடியும் என்கிறார் எங்கள் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான். வீட்டில் பயன்படுத்தப்படும் பாத்திரத்திற்கு ஏதனம் என்றும் பெயர், ஏனம் என்றும் அழைப்பர். “இந்த சமூகத்தில் வாழ்ந்த – வாழ்ந்துகொண்டிருக்கும்…
-
தெணியான் மறைந்தார்
ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார் முருகபூபதி கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார். 06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது.…
-
கானல்தேசம்
16 காட்டிக்கொடுப்பு சுனில் எக்கநாயக்க சுனாமி நிவாரணத்திற்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இராணுவத்தில் நியமிக்கப்பட்டான். ஆரம்பத்தில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் கண்டி பெரஹராவில் தனியாக விடப்பட்ட சிறுவன் போல் அரசியல்வாதிகளுடன் முட்டி மோதவேண்டியிருந்தது. இராணுவ கட்டளைகளை நிறைவேற்றுவது இலகுவானது. ஆனால், அவனைத் திணற வைத்தது அரசியல்வாதிகளின் தேவைகள், விருப்பங்கள், வேண்டுகோள்கள்! அதற்கப்பால் புனர்வாழ்வுக்கான உதவிகளுடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வந்திருந்தன. அவைகளது உள்நோக்கமென்ன? அநுராதபுரத்தின் புறநகரில் பிறந்து, அநுராதபுர மகா வித்தியாலயத்தில் படித்திருந்தாலும், ஆரம்பத்தில்…
-
இந்திரன் — வ. ஐ . ச. ஜெயபாலன்-கவிதை அனுபவம்
நடேசன். சமீபத்தில் சென்னையில் கவிஞர் இந்திரனைச் சந்தித்தபோது அவர் இந்திரன் – வ .ஐ . ச. ஜெயபாலன் – இருவரதும் கவிதை அனுபவம் என்ற உரையாடல் புத்தகத்தைத் தந்தார். ஏற்கனவே இருவரும் நண்பர்களானதால் எனக்கு கவிதை அனுபவம் பெரிதும் அற்றதாகினும் வாசித்தேன். ஒருவிதத்தில் எனக்குக் கவிதை பற்றிய பாடப் புத்தகமாக இருந்தது. இலங்கை கவிதைகள் பற்றிய விளக்கங்கள் ஜெயபாலனூடக வந்தது. இந்திரனின் விளக்கம் விரிவாகவும் அகலமாகவும் இருந்தது. அதன் பின்பாக இருவரதும் சில கவிதைகளை வாசிக்க…
-
தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்.
எழுத்தாளர் ஜெயமோகனை நெருங்கவைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான். அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன் அவரைக் கேள்விப்பட்டதும் இல்லை. திண்ணை இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய இரண்டு கட்டுரைகள் எனக்கு முக்கியமாயிருந்தது.அதில் ஒன்று, இஸ்லாமிய எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்த சேவை பற்றியது. மற்றது பாசிசம் பற்றிய கட்டுரை.முதல் கட்டுரை வெளிவந்த காலத்தில் இலங்கை வடக்கில் இஸ்லாமியரை விடுதலைப்புலிகள் வெளியேற்றிய காலம். அப்பொழுது இஸ்லாமியத் தமிழர்களின் தமிழ்ச் சேவையை இவரது கட்டுரை எனக்குப் புரியவைத்தது.அதேபோல்…
-
இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்
ப. சிவகாமி. ( நொயல் நடேசன் அவர்களின் ‘ பண்ணையில் ஒரு மிருகம் ‘ என்ற புதினத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை ) கே. டானியல், செ. கணேசலிங்கன், இளங்கீரன், நீர்வை பொன்னையன் , காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா , செ. யோகநாதன், எஸ். பொ , தெணியான், பெனடிக்ற்பாலன், என். கே. ரகுநாதன் போன்றோரின் சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான இலக்கிய வரிசையில் சிறந்த இடத்தைகொண்டிருப்பவர், இலங்கையைத் தாயகமாகக்கொண்டு தமிழ்நாட்டில் சிலகாலம் வாழ்ந்து , பலவருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து…
-
அசோகனின் வைத்தியசாலை
-Dr Mathan kumar புலம்பெயர்ந்த ஒரு கால்நடை மருத்துவன் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள், நோயாளிகள் (விலங்குகள் மற்றும் மனித மனநோயாளிகள்) அதனால் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் எல்லாம் கொண்டு பார்த்து பார்த்து ஒவ்வொரு செங்கலாக கட்டப்பட்ட ஒரு அற்புத கட்டிடம் தான் இந்த அசோகனின் வைத்தியசாலை. இந்நாவலை ஒரு கால்நடை மருத்துவராகவும், ஒரு சாதாரண வாசகனாகவும் இருவேறு தளங்கள் நின்று அனுபவித்தேன். இந்நாவலின் மையக்கரு இதுதான் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டாலும் அதன் ஆழம் என்பது நெடிது.…
-
கொழும்பு மாநகரத்தின் தலைவர்கள்
அங்கம் – 17 களனி கங்கைக்கும் காலிமுகத்தை தழுவும் இந்து சமுத்திரத்தாய்க்கும் மத்தியில் இலங்கையின் தலைநகரமாக மிளிரும் கொழும்பில் மூவின மக்களும் செறிந்துவாழ்கின்றமையால் இங்கு 1865 ஆம் ஆண்டு முதல் தெரிவாகும் நகரபிதாக்களை நினைத்துப்பார்க்கும்போது, சுதந்திரத்திற்கு முன்னர் இங்கு பிரித்தானிய பிரஜைகள் தலைவர்களாகவும் அதன் பின்னர் இலங்கைப்பிரஜைகளான மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் மேயர்களாகவும் தெரிவாகியிருக்கும் தகவலை அறிந்துகொள்ள முடிகிறது. 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது பிறந்த தின கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாகவும் நடந்திருக்கிறது.…
-
பண்ணையில் ஒரு மிருகம் – என்னுரை.
தமிழகத்தில் உள்ள பண்ணையில் எனக்குவேலை கிடைத்ததால் அங்குள்ள மக்களுடன் பழகி நான் பெற்ற அனுபவங்கள் எனக்கு நிறைவானவை . இதற்குக் காரணமாக இருந்து மறைந்த தலைவர் வி. பொன்னம்பலம்அவர்களுக்கு இந்தநூல் சமர்ப்பணம். என்னுரை:- மதவாச்சியில் 1980ம் ஆண்டில் எனக்கு மிகச் சாதாரணமான சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்யக் கிடைத்த அனுபவங்கள் வண்ணாத்திக்குளத்தில் மட்டுமல்ல பிற்காலத்தில் எழுதிய கானல்தேசத்திற்கும் உதவியது. தமிழகத்தில் எண்பத்தி நாலாம் ஆண்டு இறுதிப்பகுதியில் பண்ணையொன்றில் கிடைத்தவேலை இந்த நாவலுக்குக் கருப்பொருளாகியுள்ளது. வாழ்ந்த இடங்கள்…
-
தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள்
அங்கம் 16 தென்னிலங்கையில் தோன்றிய அரசியல் கட்சிகள் பற்றி புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதும் தொடங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் நிறம் பச்சை. அதன் தேர்தல் சின்னம் யானை. அதிலிருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா பிரிந்துவந்து தொடக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறம் நீலம். அதன் தேர்தல் சின்னம் கை. இவை இரண்டினதும் தலைமைக்காரியாலயங்கள் கொழும்பில் மருதானை டார்லி ரோட்டிலும் (ஶ்ரீல.சு.கட்சி) கொள்ளுப்பிட்டியில் காலி வீதியிலும் (ஐ.தே.க. ஶ்ரீகோத்தா) அமைந்துள்ளன.…