பகுப்பு: Uncategorized
-
பிறந்தநாளில் பாலித்தீவு
இம்முறை எனது பிறந்ததினம் பாலித் தீவில் கழிந்தது. அந்த நாளில் நடந்த சம்பவத்துடன் தொடங்குவது நல்லது என நினைக்கிறேன். அழகான கடற்கரையோரத்திலுள்ள பாறையில் செதுக்கப்பட்ட பாலியின் பிரசித்தி பெற்ற, ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த உலுவத்து கோவிலின் (Uluwatu Temple) படிகள் மீது அந்தி சாயும் நேரத்தில், மெதுவாகச் சுற்று வட்டாரத்தையும் அங்குவரும் மக்களையும் பார்த்து ரசித்தபடி என்னை மறந்து ஏறிக்கொண்டிருந்தேன். எதிர்பாராமல் எனது தோளில் எனது ஆறு வயதுப் பேரன் பாய்ந்தது போன்ற உணர்வோடு குனிந்து…
-
பச்சை குத்திய பாசக்காரத் தந்தை
நோயல் நடேசன் உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பார்த்ததும் எனக்கு பல வருடகாலத்தின் முன்பு படித்த மருத்துவ புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வரும். ஹெப்பரைற்றிஸ் நோய், பச்சை குத்தியபோது அவர்களிடத்தில் ஊசி மூலம் தொற்றி இருக்கலாம் என எழுதியிருந்தார்கள் . அந்தக் காலத்தில் பச்சை குத்தும் ஒரே ஊசிகள் சுத்தமாக்கப்படாது பலர் மீது மீண்டும் மீண்டும் பாவிக்கப்படுவதே இதற்குக் காரணம். பலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லும்போது இப்படி பச்சை குத்திக்கொள்வது மரபாக இருந்தது. ஒரு காலத்தில் கடலோடிகளும் மற்றும்…
-
சிறுகதைத் தொகுப்பு ஒப்பாரிக்கோச்சி.
எழுத்தாளர் மு.சிவலிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஒப்பாரிக்கோச்சி சிறுகதைத் தொகுப்பினை எனக்குத் தந்திருந்தார். ஏதோ காரணத்தால் இந்தப் புத்தகம், சிறுவயதில் தொலைத்த சில்லறைக் காசாக நழுவிவிட்டது . புதிய வீடு மாறியபோது மீண்டும் கையில் கிடைத்தது, இம்முறை வெளிநாட்டுப் பயணத்தின்போது எடுத்துச் சென்றேன். முழுக்கதைகளைப் படித்ததும், இதுவரையில் ஏற்கனவே படித்த பல கதைகளில் நான் காணாத, அல்லது காணத் தவறிய மலையக மக்களின் வாழ்வின் குறுக்கு வெட்டு முகத்தை எழுத்தாளர் சிவலிங்கத்தின் கதைகளில் என்னால் காணமுடிந்தது.…
-
மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம்
சிறையிலிருந்த காந்தி சுத்திகரித்த கழிவறையும் சுத்தப்படுத்த முனைந்த தேசமும் முருகபூபதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்…? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவானார் ….? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக்குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவில் பிறந்து – வாழ்ந்து – மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன்…
-
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த போட்டி முடிவுகள்
சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில்…
-
கொமடோ டிரகன் – இந்தோனேசியாவின் ஆதி விலங்கு
நோயல் நடேசன் இதுவரையில் பெத்தலகேம் யூதப் பெண்ணான மேரியால் மட்டுமே கன்னி நிலையில் தாயாக முடியும் என நினைத்திருந்தேன். உங்களில் பலரும் என்னைப்போல் அந்தத்தன்மைக்கு இறையருள் தேவை என நினைத்திருந்திருப்பீர்கள். ஆனால், மிருக வைத்தியரான எனக்கே அதிர்ச்சியாக இருந்த விடயம் ஒன்று உள்ளது. ஆதிகால விலங்காகிய கொமடோ டிரகனின் ( ஒரு வகையில் உடும்பு போன்றது ) முக்கிய விடயமாக நான் தெரிந்து கொண்டது இதுதான். அதற்கு ஆண் உயிரிகளின் தேவையில்லை . புணர்ச்சியற்று பெண் முட்டை…
-
புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான் என்னைக் கவர்ந்தன. அதற்கான காரணத்தை யோசித்தேன். அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் ( interior design) நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை. அதேபோல் லண்டனில் உள்ள கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள…
-
சாதனைகள் படைத்த திலகவதி ஐ. பி. எஸ்.
முதல் சந்திப்பு : சவால்களினூடே சாதனைகள் படைத்த திலகவதி ஐ. பி. எஸ். முருகபூபதி சென்னைக்கு 1990 ஆம் ஆண்டு சென்றிருந்தபோது, அச்சமயம் தாம்பரத்திலிருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை சந்தித்தேன். அன்றைய தினம் மாலை சென்னையில் எழுத்தாளர் சிவகாமியின் பழையன கழிதல் நாவல் வெளியீடு நடந்தது.அந்த நிகழ்வில் தானும் பேசவிருப்பதாகச் சொன்ன ராஜம் கிருஷ்ணன், என்னையும் அங்கே வரச்சொன்னார். அவரது இல்லத்தில் மதியவிருந்தை முடித்துக்கொண்டு அவர் குறிப்பிட்ட மண்டபத்திற்கு அன்று மாலை சென்றேன். எழுத்தாளர் சிவகாமி அப்போது…
-
நாவல்: காஃகாவின் உருமாற்றம். (Metamorphosis by Franz Kafka).
நடேசன் அக்காலத்தில் தீப்சில் வாழ்ந்த (ancient city of Thebes) புராண காலத்து மிருகம் ஸ்பிங்ஸ் (Sphinx). அதனது அனுமதியில்லாது நகரத்துள் எவரும் செல்லமுடியாது . அந்த வழியால் வரும் வழிப்போக்கர்களிடம் விடுகதை சொல்லி அதை அவிழ்க்கச் செய்யும். அவிழ்க்காதபோது அவர்களைக் கொன்றுவிடும். அந்த ஸ்பிங்ஸ், ஒரு விடுகதையை அந்த வழியால் வந்த எடிப்பஸ் (Oedipus) என்ற இளவரசனிடம் முன்வைக்கிறது. “காலையில் நான்கு கால்களிலும், நண்பகலில் இரு கால்களிலும் , மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்…
-
பஞ்சகல்யாணியின் அழகிய உலகம்.
நூல் அறிமுகம்: குழந்தைகளுக்கான எளிய நடையில் முருகபூபதி இலக்கியப்படைப்புகளில், குழந்தைகளுக்கான பிரதிகளை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது எனச்சொல்வார்கள். அதற்கு குழந்தைகளின் உளவியல் தெரிந்திருக்கவேண்டும். பெரும்பாலும் குழந்தை இலக்கியம் படைப்பவர்கள் பெரியவர்களாகத்தான் இருக்கிறார்கள். பாரதி முதல் அழ. வள்ளியப்பா வரையில் மாத்திரமின்றி, அதன் பிறகும் குழந்தை இலக்கியங்களை , குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் பெரியவர்கள்தான். இவர்கள் தமது வயதையொத்தவர்களுக்கு ஏதேனும் எழுதினாலும், குழந்தைகளுக்காக எழுத முன்வரும்போது, குழந்தைகளாகவே மாறிவிடவேண்டும். அவ்வாறுதான் ஒரு குழந்தை இலக்கியம்படைத்திருக்கும் பஞ்சகல்யாணி என்ற மருத்துவரை…