பகுப்பு: Uncategorized
-
நடுக்காட்டில் பிரதேப் பரிசோதனை
‘யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ எனச் சொல்வார்கள். தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலும், கண்டி எஸல பெரஹராவிலும்தான் யானைகளைப் பார்த்திருக்கிறேன். மிருகமருத்துவம் பயிலும் பொழுது, என்றாவது ஒருநாள், ஒரு யானையைப் பிரேதப் பரிசோதனை செய்வேன் எனக் கனவிலும் நினைத்ததில்லை. பயிற்சி முடிந்து மிருகமருத்துவர் பட்டத்துடன் தொழில் தொடங்கி இரண்டாவது நாளே ஒரு யானையின் மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனைக்குச் சென்றமை என் மிருக மருத்துவத்துறை வாழ்வில் வித்தியாசமான அனுபவம்தான். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மதவாச்சியில்…
-
கட்டிடக்கலையின் காட்சியகம்: கத்தார்!
நோயல் நடேசன் வளைகுடா நாடுகளுக்கு, ரமலான் நோன்பு காலத்தில் போன அனுபவம் உங்களுக்கு உண்டா? மதிய உணவுக்காக அலைந்த அனுபவம் ஏதாவது? குடி நீரை, சிறுவயதில் கள்ளுக் குடித்தது போல், மறைத்து கடதாசிப் பையில் ஒழித்து வைத்துக் குடித்த அனுபவம் உள்ளதா? முதல் அனுபவங்கள் பள்ளிப்பருவத்தில்தான் வரவேண்டுமா என்ன? வயதாகிய பின்பும் வரலாம். இதை இந்த முறை அனுபவித்தேன். முந்திப்பிந்தி உணவுண்டாலும் மூன்று நேர உணவு என்பது இதுவரை காலமும் என் வாழ்வின் ஒரு அம்சமாய் இருந்தது.…
-
கொலைக்கு சாட்சி!
லூர்து மாதாவைத் தரிசிக்க பாரிசில் நாங்கள் ஏறிய ரயில், பிரான்சின் தென் மேற்கிலுள்ள லூர்து மாதாவின் தேவாலயம் அமைந்த லூர்து என்ற சிறிய நகரை நோக்கி வேகமாக சென்றது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு மேலான பயணம் அது. மாலை நான்கு மணியளவில் ஏறிய ரயில் லூர்து நகரத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. விரைவு ரயில் என்பதால் பெரிய நகரங்களில் மட்டுமே நிற்கும். மாலை நேரத்து சூரிய வெளிச்சம் கண்ணுக்கு இதமாக இருந்தது. ரயில் கண்ணாடி வழியே வெளியே…
-
Shiamala’s birthday.
Shyamala’s birthday speech. My grandson 7 years old Kiyaan a few weeks ago brought his write-up on his holiday in Phillip Island for me to read. After reading I told him that you did not write why you went there He replied Yes, yes, I know 5 W Tell me, ‘’ I said’’ “What, who,…
-
கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் அம்பாறை மாவட்ட தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் அண்மையில் பாண்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில், கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபவிருத்தி நிறுவகத்தின் தலைவர், முன்னாள் அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு, எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், விரிவுரையாளர் திரு. அற்புதன், பாண்டிருப்பு மகா வித்தியாலய…
-
எகிப்தின் கற்சாசனம்
—————————– பாரிஸ் , மட்ரிட், நியுயோரக் எனப் பல இடங்களில் அருங்காட்சியகங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனாலும் அங்கெல்லாம் ஏற்படாத ஒரு அதீத உணர்வு லண்டன் அருங்காட்சியகத்தில் ஏற்பட்டது. அதே நேரத்தில் தனிமரியாதையும் தவிர்க்க முடியவில்லை முதல் ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லிவிடுகிறேன் ஆஸ்திரேலியாவில் பல நாடுகளிலிருந்து பயணிகள் நாட்டினுள் கொண்டு வரும் சட்டப் படி அனுமதியல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும் சுங்க இலாகா, போதைவஸ்துக்கள் மற்றும் உணவு, பாவனை பொருட்களை எரித்துவிட்டு, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை…
-
வட இந்தியப் பயணம்:3
தர்மசாலாவிலிருந்து எங்களது பயணம் அமிர்தசரஸ் நோக்கி திரும்பியது. பொற்கோவில் எனக்கு மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய பிரதேசமாக இருந்தது. மாலையில் பொற்கோவிலை அடைந்தபோது, மிகவும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் தங்க கோபுரம் தகதகவென மின்னியதுடன் சுற்றியிருந்த வாவியில் அந்தக்காட்சி பிரதிபலித்து கண்களைக் கவர்ந்து செல்லும் காட்சியாய் எம் முன்னே விரிந்தது. அங்கு மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே பூசாரி, முல்லா அல்லது பாதிரி எனத் தரகர்கள் எவருமில்லை என்பது முக்கிய விடயமாகும்.அத்துடன் அங்குள்ளவர்கள் எல்லோரும் வேதனமற்று வேலை செய்தார்கள்.…
-
வட இந்தியப் பயணம்:2
டெல்லியில் இருந்து சிம்லாவிற்குச் சென்ற இந்திய ரயில் பயணம் சுகமாக இருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் உணவு மற்றும் பத்திரிகைகளும் தரப்பட்டது. சிம்லா வட இந்தியாவில் மிகவும் சுத்தமான இடமாக எனக்குத்தெரிந்தது. எங்களுடன் பயணித்த ஆங்கிலப்பெண் சிம்லா ஸ்கொட்லாந்து நகரம்போல இருக்கிறதென்றாள். பெரும்பாலான வட இந்தியர்கள் தேன்நிலவிற்கு வரும் இடமாக இது தெரிந்தது . கடைத்தெருக்கள் மிக சுத்தமாகக் காட்சியளித்தன. சிம்லாவில் எனக்கு ஜுடியின் இருமல் தொற்றிக்கொண்டது. ஒரு நாள் அறையிலே தங்கியிருந்தேன். ஆக இரண்டு இரவுகள்…
-
தாத்தாவின் வீடு-நாவல் :வாசக அனுபவம்
புத்தகம்: தாத்தாவின் வீடு ஆசிரியர்: நோயல் நடேசன் Canute Aravintharaj Denicius ஆசிரியரின் சொந்த ஊரான எழுவைதீவை களமாக கொண்டு புனையப்பட்ட நாவல் தாத்தாவின் வீடு. அவருடைய இளவயது அனுபவங்களிலிருந்து முகிழ்கிறது கதையின் கரு. ஊரைப்பார்க்கவரும் பேரனான நட்சத்திரனுக்கும் அவனது தாத்தாவான சிவசாமிக்கும் இடையிலான உறவை வைத்து அவனுடைய ஞாபகங்களிலும் கனவுகளிலுமாக கதை நகர்கிறது. நாவல் 1960- 1970 களில் இருந்த எழுவைதீவைப் பற்றி பேசுகிறது. அந்தக்கால சமூக பொருளாதார கட்டமைப்புகள், வசதிக் குறைபாடுகள், குடும்ப அமைப்பு,…
-
வட இந்தியப் பயணம்:1
இந்த (2023) வருடம் மார்ச்சில் புது டில்கி போயிருந்தபோது முன்னைய வாலிப காலத்துப் பயணம் நினைவுகள் சிறகடித்தது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு( 1985) முன்பாக போயிருந்தேன். அப்பொழுது சித்திரை மாதம். கோடை வெயில் காலம். அக்காலத்தில் மெட்ரோ ரயில் இல்லை. ஓட்டோவும் நடராசாவுமே. சூரியன் தலைக்கு நேரே வந்து எங்கள் மேல் தரையிலும் தலையிலும் எரிதணலைக் கொட்டியதுபோல் இருந்தது. நடக்கும்போது சிறுவயதில் எங்களது ஊரில் கோவிலின் முன்பாக பார்த்த தீ மிதிப்பு நினைவுக்கு வரும். டெல்லித் தெருவில்…