பகுப்பு: Uncategorized
-
லண்டனில் ஊன்றுகோலுடன் இலக்கியம் பேசிவரும் ராஜேஸ்வரி.
முருகபூபதி கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி லண்டன் விம்பம் அமைப்பினால் நடத்தப்பட்ட பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கிற்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் , “ தம்பி, நாம் வேளைக்கே புறப்படுவோம். ரயில், பஸ் ஏறித்தான் எனது வீட்டுக்குச்செல்லவேண்டும். “ என்றார். எனது தொடர் பயணத்தில் அன்றை மாலைப்பொழுது அவருடன்தான் ஆரம்பித்தது. எனது பொதிகளையும் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்தேன். அவரது கையில் ஒரு ஊன்றுகோல். அதன் துணையோடுதான் அவர் லண்டன்…
-
ஆண்கள் பெண்கள்.
நன்றி – அபத்தம், கனடா. சமீபத்தில் நான் முதுகு வலியால் அவஸ்தைப்பட்டபோது அக்குபஞ்சர் எனும் குத்தூசி மருத்துவமே கைகொடுத்தது. இது ஊசிகளை உடலின் முக்கிய அக்கு புள்ளிகளில் சொருகி சிகிச்சை செய்யும் சீன வைத்திய முறை ஆகும். ஏற்கனவே நான் மிருகங்களுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதுபற்றி படித்திருந்தேன் என்பதால் வலி நிவாரண மருந்துகளை விட அக்குபஞ்சர் ஊசிகளை நம்புகிறேன். எனக்கு வைத்தியம் செய்த மியா என்ற அந்த சீன இளம்பெண் (30 வயதின் மேல்) பல ஊசிகளை…
-
ஜோர்டான்:பெட்ரோ
Courtesy -Wowtamil.com ஜோர்டானில் இரண்டாவது நாள் இரவு… ஒரு கிறித்துவர் வீட்டில் எங்களது உணவு பரிமாறப்பட்டது. அங்கு ஒரு தாயும் மூன்று பெண்களுமாக ஜோர்டானிய உணவு தந்தார்கள். அவர்கள் அம்மான் நகரில் பிரபலமான ஒரு உணவுக்கடை நடத்துகிறார்கள். ஜோர்டானிய உணவுகள் அதிகம் வாசனைத் திரவியங்கள் கொண்டது. உணவில் ஆட்டிறச்சி முக்கியம். அத்துடன் இனிப்பு வகை அதிகமானது. முதல் இரண்டும் பிடித்தபோதிலும் கடைசியிடமிருந்து விலகியிருந்தேன். இந்த பெண்கள் அமரிக்காவின் உதவி நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள். வெளிப்படையான…
-
ஜோர்டான்: நபட்டியன்ஸ்
மனிதர்களால் உருவாக்கிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ரா நகரம் ஜோர்டானில் அமைந்துள்ளது. இவற்றில் உலக அதிசயங்களாக நாம் பார்க்கும் தாஜ்மகால் , பிரமிட் என்பன இறந்தவர்களது சமாதிகள் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் பெட்ரா எனப்படும் சிவந்த கோயில் (Treasury) 40 மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு கல்லில் 2000 வருடங்கள் முன்பாக செதுக்கப்பட்ட கட்டிடம், அதை பல நூற்றாண்டுகளாக ஒரு புராதன கோயில் எனப் பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அதுவும் சமாதிகளின் …
-
கல்பரா – முதுமையை திரையிடல்
நன்றி அம்ருதா. ———————————— இப்பொழுது எனக்கு அறுபத்தெட்டு வயது. ஆனாலும் எனது முதுமை எப்படி இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்ப்பதில்லை. முதுமை என்பதை “கல்பரா” என்ற திரைப்படத்தை பார்க்கும்போது நான் புரிந்துகொண்டேன். திரையில் படம் ஓடும்போது நான் எனக்கான திரைக்கதையை மனத்திரையில் எழுதியபடியிருந்தேன். பன்மொழிப் படங்களைப் பார்க்கும் எனக்கு இப்படியான அனுபவம் இதுவரை எந்த படத்திலும் கிடைக்கவில்லை என்பது உண்மை. வழக்கமான திரைப்படம்போல் இதில் பெரிய நடிகர்கள் கிடையாது, விளம்பரம் கிடையாது, பின்னணி இசைக்கலைஞர், பாடகர்…
-
கடிதம்: பண்ணையில் ஒரு மிருகம்.
“திருமதி கார்த்திகா கணேசர். ” பண்ணையில் ஒரு மிருகம்” நாவலை எடுத்தபின் வைக்க முடியவில்லை .அற்புதமாக எழுதி உள்ளீர்கள் . முதல் அத்தியாயம் அவள் உங்களை இழுத்துச் செல்ல உண்மையில் நடப்பதாக உணர வைத்து விட்டீர்கள் . துடித்துப் போய்விட்டேன் . அந்த பாத்திர படைப்பு சமுதாய கொடுமைகளைச் சொல்லவும் , அதே நேரம் கதைக்கும் மெருகு கொடுக்கிறது . ஒரு மிருக வைத்தியர் மாடு சினை படச் செய்யும் உத்தி , வேலையாள் எருதை விட்டு றெஸ்லிங்…
-
நாவல்: நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்.
வாசிப்பு அனுபவம் : நடேசன். கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது , “ அவன் ஒரு சகுனி “ என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை. இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என ஆராய்வது…
-
கொன்றால் பாவம் – திரைப்படம்.
மனிதர்களது அகவயக்காரணிகளான காதல், காமம், துயரம், நகைச்சுவை, பேராசை என்பனவற்றை வைத்து இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்கள் உருவாக்கும்போது அப்படைப்புகள் காலம் கடந்து நிலைக்கும். நாம் அவற்றை கலாச்சாரம், பண்பாடு, நிலம் கடந்து புரிந்துகொள்ள முடியும். இலியட் ஓடிசி போன்ற கிரேக்கக் காவியங்களோ அல்லது நமது இந்திய காவியங்களான மகாபாரதம் இராமாயணம் போன்றவையோ மதமயபபடுத்தாது விட்டிருந்தாலும் நிச்சயம் நிலைத்திருக்கும். அவை அடிப்படை மனித இயல்புகளின் சாரத்தை எழுத்தில் வைக்கின்றன என்பதே அதற்கான காரணம். இந்த காவியங்களுக்கு நிகராக பண்டைய…
-
Corruption in South Asia.
இது பிரித்தானியாவில் வாழும் டாக்டர் சாம் ஜெயக்குமார் ( my classmate Ranjth sing) பாடி இசை அமைத்தது. லஞ்சத்தை வெறுப்பவர்கள் இதை பகிரவும். சில நிமிடங்கள் அமைதியாக இருக்கும்.
-
வடிவேலுவின் மற்றும் ஒரு பரிமாணம் மாமன்னன் !
பயணத்தின் வழியே ஒரு பார்வை முருகபூபதி தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன். கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா…