பகுப்பு: Uncategorized
-
நாவல்: ஆண்பால் உலகு
நன்றி: அபத்தம். நாவல் அல்லது சிறுகதைக்கு எது முக்கியமானது ? எனக் கேட்டால், தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் தன்மையே என நான் சொல்வேன். அதாவது எடுத்த புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற அவாவை வாசிப்பவர்களுக்கு அது மனதில் உருவாக்கவேண்டும். அறிவு, பொழுதுபோக்கு , மற்றும் ரசனை என பல காரணங்களோடு ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, நான் கூறிய இக்கருத்து எக்காலத்திலும் பொருந்தும் . ஆனால், திரைப்படம் தொலைக்காட்சியெனக் கவர்ச்சியான ஊடகங்களை பார்த்து ரசிக்கும் நம் காலத்தில்…
-
தாத்தாவின் வீடு – நாவல்.
ஒரு பயணியின் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுத்த சில பக்கங்களின் தொகுப்பு- எஸ். ரஞ்சகுமார். நன்றி : காலச் சுவடு. – நோயல் நடேசன் அவர்கள் எழுதிய தாத்தாவின் வீடு என்ற நூலைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை இந்தச் சபையிலே பகிர்ந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய தமிழிலக்கிய கலைச்சங்கத்தினால் கேட்கப்பட்டிருக்கிறேன். வாசிப்பு அனுபவப்பகிர்வு என்பது பொருள்மயக்கம் தருகின்ற ஒரு பதம். அது நூல் நயமாகவோ, மதிப்பீடாகவோ, திறனாய்வாகவோ, பூரணமானதொரு விமர்சனமாகவோ அல்லது கண்டனமாவோகூட இருக்கலாம். இன்று நடைபெறுவதைப் போன்ற சினேகபூர்வமான இலக்கியச்…
-
கரிகாற்சோழன் விருதுகள்
இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05ஆம் திகதி நடைபெற்றது.இம்முறை இந்த விருதுகள் இலங்கையரான , தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம்நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கை எழுத்தாளர்…
-
இக்காலப் போர்.
நன்றி – அபத்தம். கார்த்திகை. மாவிலாற்றின் நீரை 2006ல் ஜூலையில் விடுதலைப்புலிகள் விவசாயிகளுக்கு கிடைக்காது அணையை மறித்தபோது, இலங்கை அரசு இலங்கையின் கிழக்கே போர் தொடங்கியது. அந்தப் போர் தமிழர்களுக்குப் பேரழிவாக மே 2009யில் முள்ளிவாய்க்காலில் முடிந்தது. விடுதலைப்புலிகள் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய வரலாறு பலர் மறந்துவிட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்காலை பேசியபடி விடுதலைப்புலிகள் மேய்ந்த அதே மேச்சல்த் தரையில் மேய்ந்தபடி ஜெனிவாவுக்கு எண்ணற்ற தரம் துலாக்காவடி எடுத்துள்ளார்கள். ஆனால் இது அதைபற்றிய…
-
கருணையினால்.
பாவண்ணன். மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன்.…
-
அருந்ததியின் ஆண்பால் உலகு
ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! முருகபூபதி கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன். மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு…
-
ஒக்ரோபர் 30 -1990 .வெளியேற்றம்: கானல் தேசம்.
நான் மட்டுமல்ல, வடபகுதியில் காலம் காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் எவரும் மறக்கமுடியாத அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. நெருக்கமாக அமைந்த வீடுகளானதால் பக்கத்து வீட்டு குழந்தைகளின் அழுகை, பெரியவர்களின் படுக்கையறை முனகல்கள், முதியவர்களின் குறட்டையொலி எல்லாவற்றையும் இரவில் கேட்கலாம். சிறுவர்களின் கூக்குரலுடன் அவர்களை நோக்கிய உம்மாக்களின் அழைப்புகள், வாப்பாமாரின் பயமுறுத்தல்கள் என்பன காலையில் காதை அடைக்கும். அன்றும் வழமைபோல் எதிர்வீட்டு இஸ்மாயிலின் சேவல் கூவியது. மசூதியின் பாங்கொலி முழங்கியது. பாண்காரன், மரக்கறிக்காரன் எல்லோரும் அன்று தாமதமின்றி…
-
Cut and Past Journalism.
கல்லிலிருந்து கணினிக்கு வந்த தமிழின் அதிசயங்கள் ! Download Journalism – Cut and Past Journalism பெருகும் காலத்தில் வாழ்கின்றோம் ! ! முருகபூபதி பாரிஸ் மாநகரில் வென்மேரி அறக்கட்டளை நடத்திய வாழ்நாள் சாதனையாளர்கள் விருது விழாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் நான் சென்றிருந்தபோது, சில நாட்கள் அந்த நகரில் தங்கியிருந்தேன். எனக்கு சிறிய வயதில் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் புதல்வி உமாவின் குடும்பத்தினர் என்னை ஒரு …
-
தமிழ் அகதிகள் விரட்டப்பட்டனரா?
நன்றி எதிரொலி விக்டோரியா தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாமனிதர் பேராசிரியர் சி.ஜே.எலியேஸர் ஞாபகர்த்த விரிவுரை 24 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்தநிகழ்வில், understanding the voice referendum என்ற தலைப்பில் இந்தநிகழ்வு இடம்பெற்றது. மொனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெலிஸா கஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கான விக்டோரியா மாநில செனட்டர் ஜனா ஸ்ரீவாட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு டன்டிநொங் பிரதேசத்திலிருக்கும் விக்டோரிய தமிழ்க் கலாசார மண்டபத்தில்…
-
ஜோர்டானின் வினோதங்கள்: 3 வாடி ராம், சாக்கடல்
பெட்ரோவில் (Treasury) உயரமான பாறையில் செதுக்கப்பட்ட அழகிய சிற்பவேலைகள், இரண்டாயிரம் வருடங்கள் தாண்டி, தற்போழுது உலகில் அதிக அளவில் படமெடுக்கப்படும் இடமாக கணிக்கப்படுகிறது. ஏறுவதற்கோ உள்ளே பார்ப்பதற்கோ தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியே இருந்து மட்டும் பார்க்க முடியும். பல மணி நேரம் நின்று ரசிக்கக்கூடிய இடம். பெட்ரோவைக் கடந்து தொடர்ச்சியாக சில கிலோமீட்டர் நடந்தபோது அங்கும் சமாதிகள், கோவில்கள், ரோமர்களின் தியேட்டர் எனப் பார்க்க முடிந்தது. இங்கு பாதையில் நடப்பது இலகுவானதல்ல. கல்லுகள், குழிகள் கொண்ட பிரதேசம்.…