பகுப்பு: Uncategorized
-
நண்பர் முருகபூபதி.
மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரத்தை பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தேயுவின் பின்னே நின்று அவரின் கையை பிடித்து விவிலியத்தை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தேயுவிற்கு எவ்வளவு எழுதத் தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களின் வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதாகமே. 88களில் முருகபூபதி கேட்டதற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. அன்றய இந்தியாவை இணைத்தது மதமோ கலாச்சாரமோ…
-
விமர்சனக்குறிப்பு : பண்ணையில் ஒரு மிருகம்.
பொ கருணாகரமூர்த்தி: பெர்லின் இந்நாவலில் காஞ்சிபுரம் மாவட்டத்திலமைந்த ஒரு கால்நடைப்பண்ணையில் 30 வருடங்களின் முன்பு நடந்த சம்பவங்களையும், அங்கே பணிபுரிய நேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மரபுகள், ஜாதி அபிமானத்தையும், அங்கு இரகசியமாக நடந்தேறிய கொலைகளையும் அவற்றைத் தற்கொலையெனவே நம்பவைத்த மேலாண்மை ஜாதியினரின் தந்திரங்களையும் கண்முன்னே படைத்திருப்பதன்மூலம் அருமையான வாசிப்பு இன்பத்தையும் அள்ளி வழங்கியிருக்கிறார் இப்புதினத்தின் ஆசிரியரும் அப்பண்ணையில் பணிபுரிய நேர்ந்த கால்நடைமருத்துவருமான இலங்கையைச்சேர்ந்த நோயல் நடேசன். இன்றைக்கிருப்பதைப்போல் 3 தசாப்தங்களுக்கு முன்னான வாழ்க்கைமுறை.…
-
யாழ்ப்பாணத் திமிர்.
கற்சுறா. நன்றி அபத்தம். கடுமையானதும் பல்வேறு மன உளைச்சல்களைக் கொண்டதுமாகக் கடந்து போன காலங்களின் “சில பதிவுகள்” கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியன. பலர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினாலும் அதிகமானவர்களுக்கு அதனை எழுதுவதில் தயக்கம் இருக்கிறது. தமது அனுபவங்களைப் பொது வெளியில் பேசுவதிலும் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. பேசுவதனால் எங்காவது ஓரிடத்தில் தாங்கள் இந்தப் பொதுச் சமூகத்தினால் புறக்கணிக்கப் பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் எழுகின்ற தயக்கந்தான் அந்தத் தயக்கம் என்று நினைக்கிறேன். வெறுமனே இவ்வாறான அனுபவப் பகிர்வுகள்…
-
சிறுகதை: உன்னை முகநூலில் தொடர்வேன்
நோயல் நடேசன் நன்றி அபத்தம் அன்று ஞாயிற்றுக்கிழமை. வசந்தனுக்கு விடுமுறை நாள். படுக்கையிலிருந்தபடி தொலைபேசி வழியே முகநூலைப் பார்த்தவனுக்கு, அதிலிருந்த பதிவொன்று நெஞ்சாம் குழியுள் ஒரு பூகம்பமாக அதிர்ந்து சில கணத்தில் ஓய்ந்து, இதயத்தில் சுருக்கென ஏதோ கடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டு, உடலங்கும் பரவிய அந்த உணர்வுடன் மேலும் படுக்க முடியாது எழுந்தவன், கட்டிலில் சாய்ந்து இருந்தபடி நெஞ்சைக் கையால் அழுத்தமாக நீவியபடி பழைய நினைவுகளுடன் போராடினான். சாதாரணமாக உதறித் தள்ளிவிட்டுப் போகமுடியாத பதிவு அது. உறங்கு…
-
ரங்க மார்த்தாண்டா- தெலுங்கு சினிமா
தொலைவான விமானப் பயணத்தில், விமானத்தில் திரைப்படம் பார்க்கும்போது தூக்கம்- விழிப்பு என இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருதுவதால் பெரும்பாலும் படத்தின் நினைவுகள் வீடு வந்தவுடன் மழையில் அழிந்த கோலமாக மனத்தில் கலங்கியிருக்கும். ஆனால் இம்முறை கொழும்பிலிருந்து வந்தபோது, சிறி லங்கா ஏர்லைனில் நான் பார்த்த தெலுங்குப்படம் ‘ரங்க மார்த்தாண்டா ‘ என்னை அப்படியே இறுக்கமாக உடும்புப் பிடியாக வைத்திருந்தது. . நான் இயர் போன் கருவியை தவிர்த்துவிட்டேன். வார்த்தைகள் காதில் விழாது, ஊமைப்படமாக ஆங்கிலத்தில் வாசித்தது…
-
விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை !
வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்குஇம்மாதம் 69 வயது !!முருகபூபதிஇலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்துசமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டுஎண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவுகிராமம்.பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்லஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்குவாழ்வளித்தன.ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம்கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள்இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமதுபிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும்இருந்தன.எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து,…
-
ஏற்புரை: கரிகால் சோழன் விருது -தஞ்சாவூர்.
பண்ணையில் ஒரு மிருகம்” “ எனது ஐந்தாவது நாவல். இலங்கையில் ஏற்பட்ட இனமோதலின் காரணமாக மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது ஆரம்பத்தில் ஒரு வருடமும் சில மாதங்களும் தாம்பரத்திற்கு அருகே மாமல்லபுரம் செல்லும் பாதையில் அமைந்த சிறிய பண்ணையில் மிருக வைத்தியராக வேலைசெய்த காலத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்களையும் அவதானங்களையும் கற்பனையுடன் கலந்து எழுதியதே இந்த நாவல். பேராசிரியர் ராமசாமி தன் விமரசனக்குறிப்பில் எழுதியது “இந்தியச் சாதியத்தை வெளியாரின் பார்வையில் இந்த நாவல் தருகிறது அத்துடன் அக்கால சமூகத்தின் குறுக்கு வெட்டப்…
-
கரையில் மோதும் நினைவலைகள்
முன்னுரை. இதுவரையில் நான் கடந்த பாதையில் நடந்த சம்பவங்களை இரைமீட்டி எழுதும்போது இந்த வரலாற்றையும் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி என் மனதிலே எழுகிறது. அதற்கும் அப்பால் மற்றவர்கள் இதனைப் படிப்பதால் அவர்களுக்கு என்ன பயன் கிட்டும் ? என்ற கேள்வியொன்றும் தொக்கி வருகிறது. இரண்டுக்கும் பதில் கூறாது விடமுடியாது. நான் ஒரு தலைவராகவோ, முக்கிய பிரமுகராகவோ இல்லாதபோது எனது வரலாற்றில் மற்றவர்கள் தெரிந்துகொள்ள என்ன இருக்கப் போகிறது? என்ற வினாவும் மகாபாரதத்தில் வரும் யக்ஷனாக என்னை …