பகுப்பு: Uncategorized
-
சில்கா ஏரியில் ஐராவதி டொல்ஃபின்!
சீனாவில் சுதந்திரத்தின் பின்னர் சீன கம்மியூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ சேதுங் (Mao Zedong) நான்கு உயிரினங்களான எலி, இலையான். நுளம்பு, குருவி என்பவை, தானியங்களை உண்பதால் அவற்றை அழிக்கவேண்டும் என்று தீவிரமான நடவடிக்கை எடுத்தார். அதன் பயனாக சீனாவில் மேற்கூறிய நான்கு இனங்களும் அழிந்தன. அதனால், இலையான், எலி, நுளம்பு என்பவற்றால் மனிதர்களுக்கு உண்டாகக்கூடிய சில நோய்கள் குறைவடைந்தது உண்மைதான். ஆனால் குருவிகள் அழிந்ததால், வெட்டுக்கிளிகள் பெருகி, தானியங்கள் உருவாகும் முன்பே உணவுப் பயிர்கள் அழியும்…
-
Farewell to a Lankan Warrior.
L. Murugapoopathy H. L. D. Mahindapala, former editor-in-chief of Sri Lanka’s Sunday Observer and a renowned writer, passed away on January 30 in Colombo. I was introduced to Mahindapala by Noel Nadesan, a literary friend of mine who lives in Melbourne. Nadesan was publishing a bilingual (Tamil-English) newspaper called Uthayam at the time. Mahindapala also…
-
எல். டி. மகிந்தபால நினைவுகள்
மூத்த பத்திரிகையாளர் எச். எல். டி. மகிந்தபால நினைவுகள் முருகபூபதி இலங்கை Sunday Observer பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான எச். எல். டி. மகிந்தபால கடந்த 30 ஆம் திகதி கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற செய்தியை மெல்பனில் வதியும் இலக்கிய நண்பர் எழுத்தாளர் நொயல் நடேசன் தெரிவித்தார். எனக்கு மகிந்தபாலவை 1995 களில் அறிமுகப்படுத்தியவரும் நொயல் நடேசன்தான். அக்காலப்பகுதியில் நடேசன் உதயம் என்ற இருமொழி ( தமிழ் – ஆங்கிலம் ) பத்திரிகையை…
-
அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் !
ஜனவரி 30 – மகாத்மா காந்தி நினைவு தினம் முருகபூபதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்…? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ….? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து – வாழ்ந்து – மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக …
-
Odyssey of war’
Caught between love, loyalty, and a web of secrets, Asokan, a young Sri Lankan Tamil refugee in Melbourne, navigates a treacherous path. Orphaned by the Sri Lankan civil war and brought to Australia by LTTE sympathizers, Asokan finds himself drawn into their clandestine world of fundraising and money laundering. His life takes an unexpected turn…
-
பழயன மறந்து புதிதாக சிந்திப்போம்
நோயல் நடேசன் அவுஸ்திரேலியாநல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கடந்த 30-11-2010 திகதி கொழும்பில் கொடுத்த வாக்குமூலம கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்க கூடிய வாய்பு எனக்கு கிடைத்தது எனது…
-
எழுத்தாளர். அ.முத்துலிங்கம் ஜனவரி 19 பிறந்த தினம் !
தாயகத்தில் விடுபட்ட படைப்பிலக்கியத்தை புலம்பெயர் வாழ்வில் மீண்டும் தொடங்கிய அ. முத்துலிங்கம் ! ஜனவரி 19 பிறந்த தினம் முருகபூபதி “ ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. “ இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப் பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல! ஒரு…
-
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க விருதுகள்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஐம்பதினாயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை, 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2022 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது.…
-
கானல் தேசம் 20துணுக்காய் வதைமுகாம்
சில வாரங்களாக அந்தத் தடுப்பு முகாமில் இருந்தேன். எனக்கு வேறு விசாரணை எதுவும் நடக்கவில்லை. மேலிடத்தில் இருந்து வரும் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள்;. இருவருக்கு ஒன்றாகவோ காலுக்கு அல்லது கைக்கு தனியாகவோ விலங்கிடப்பட்டே எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் விலங்கற்ற நிலையில் உள்ள அதிர்ஸ்டசாலிகளில் ஒருவனாக இருந்தேன். நானும் தாடி வளர்த்த பெரியவரும் எந்த நேரத்திலும் மலசலம் கழிக்கவும், விரும்பிய நேரத்தில் குளிக்கவும் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஐந்துவேளை தொழுவதற்கும் மத சுதந்திரம் அங்கீகரித்திருந்தார்கள். இரண்டு வாரங்கள்…