பகுப்பு: Uncategorized
-
பண்ணையில் ஒரு மிருகம் நாவல்: ஒரு பார்வை.
கரவை மு. தயாளன் நோயல் நடேசனின்பண்ணையில் ஒரு மிருகம் நாவல் இப்போது படித்து முடித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சில விடயங்களை நாசூக்காகச் சொல்லும் விந்தையைக் கற்றுக்கொண்டேன். சலிப்பில்லா நகர்வு. நிஜ மிருகங்கள்பற்றிய அறிவூட்டல் அற்புதம். படிக்கும்போது லண்டனைவிட்டு அந்தப் பண்ணைக்குப் போய்விட்டேன். பண்ணைத் தொழிலாளர்களுடன் நீங்கள் மட்டுமல்ல நானும் தோழமை கொண்டுவிட்டேன். ராமசாமிக்கு நான் மிக நெருக்கமாகிவிட்டேன். கற்பகம் மனதில் வாழத் தொடங்கிவிட்டாள். நெருடியவை: இராமசாமி சிலவேளை ராமசாமி என வந்துள்ளது. கதை முடிவுக்கு…
-
தாத்தாவின் வீடு – நோயல் நடேசன்
சரவணன் மாணிக்கவாசகம் யாழ்பாணத்திற்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத்தீவில் பிறந்தவர். கால்நடை மருத்துவர். பலகாலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இந்தியாவிலும் சிலகாலம் வசித்திருக்கிறார். ஏற்கனவே ஐந்து நாவல்களை எழுதியுள்ள இவரது ஆறாவது நாவலிது. எல்லோருக்கும் பிறந்து வளர்ந்த ஊர் குறித்துச் சொல்வதற்குக் கதைகள் இருக்கின்றன. சிலரது கதைகளைத் தபால்தலையின் பின்னால் கொஞ்சம் நெருக்கி எழுதி விடலாம். வெகுசிலரது கதைகளே நாவலாக உருமாறுகின்றன. அவர்களது அவதானிப்பும், நினைவுச் சேகரத்தில் அள்ளஅள்ளக் குறையாது வருவதும் முக்கிய காரணிகள். நடேசன் தான் பிறந்த ஊருக்கு…
-
வாழும் சுவடுகள்:இரண்டாம் பதிப்பு.
பெருமாள் முருகன். டாக்டர் நோயல் நடேசன் கால்நடை மருத்துவர். இலங்கையைச் சேர்ந்த இவர் அங்கும் தமிழ்நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தவர். இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். நாவல், சிறுகதை முதலியவற்றை எழுதும் புனைகதை ஆசிரியர். அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு ‘வாழும் சுவடுகள்.’ மார்ச் 2024இல் ஆஸ்திரேலியா சென்ற போது அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். கடந்த சில ஆண்டுகளாக வளர்ப்பு விலங்குகளை மையப்படுத்திக் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதால் அவற்றைப் பற்றிய நூல்களை…
-
அவளா இவள்?
சிறுகதை ஏதாவது வண்டியில் அவள் மோதிவிடுவாளோ என்ற கவலை என்னை உச்சிக்கிளையில் குந்திய குரங்காக ஆட்டியது. என் தலையை, மீனை நோக்கிய கொக்காக, பஸ்சுக்கு வெளியே நீட்டியபோது, ‘என்ன சின்னப்பிள்ளைபோல்…. தலைய உள்ளுக்குள் எடுங்க’ என என் கையை மனைவி சியாமளா கிள்ளிய போதும், நீட்டிய தலை உள்ளே வரவில்லை. எனக்கோ அந்தப் பெண் வீதியைக் கடந்து அடுத்த கரையை சேர்ந்த பின்பே இதயத்துடிப்பு வழமைக்கு திரும்பியது. ‘அப்பாடா’ என்று தலையை உள்ளிழுத்தேன். ‘அந்த பெண்ணை எனக்குத்…
-
காவிய ராமனைவிட நாங்கள் மேல்!
இருவாச்சிப் பறவைகள். காலையில் நதியில் செல்லும்போது பறவைகள் உலகம் தெரிந்தது. அதில் மலேசியாவின் தேசியப் பறவை என்னைக் கவர்ந்தது. போர்னியோவில் இங்கு எட்டு வைகையான ஹோன்பில் எனப்படும் இருவாச்சி பறவைகள் வாழ்கின்றன. இந்த அதில் இரண்டு வகையானவையே என்னால் பார்க்க முடிந்தது. ஒன்றை மட்டும் என்னால் படம் பிடிக்கமுடிந்தது.பறவைகளைப் படம் பிடிக்கும் திறமை என்னிடம் குறைவு .மேலும் பலரோடு செல்லும்போது பொறுமையாகப் படம் எடுக்க முடியாது. ரைனோசரஸ் இருவாச்சியே(Rhinoceros Hornbill) மலேசியன் ஐந்து ரிங்கெட்ரில் உள்ளது இவைகளது…
-
பண்ணையில் ஒரு மிருகம்
நடேசன் வேலை– முதல் அத்தியாயம் 1985, மாசி மாதம் 18 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை பத்துமணி “டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வேலை போனது பெரிய விடயமல்ல. ஆனால், அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதன் பின்னர்…
-
பறக்கும் டச்சு மனிதன்.
மேற்கு நாட்டினர், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றி அவர்களை அடிமைகளாக 500 வருடங்களுக்கும் மேலாக நடத்திய காலனி ஆதிக்கம் என்பது நமக்குத் தெரிந்தவையே. இலங்கை , இந்தியாவில் பிரித்தானியர் செய்ததுபோல்,ஒல்லாந்தார்கள் இந்தோனிசியாவை தங்கள் காலனியாக பல நூறுவருடங்கள் வைத்திருந்தார்கள். ஆங்கிலேயர் மலேசியாவையும் வைத்திருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் போர்னியோத் தீவின் முக்கால் ஓல்லாந்தர், இந்தோனிசியாவிற்க்கும் ஆங்கிலேயர் தங்கள் வசமிருந்த சபா , சரவாக் பகுதிகளை மலேசியாவிற்கும் கொடுத்தார்கள். போர்னியோத்தீவில் வாழ்ந்த உள்ளுர்வாசிகள் தங்கள் கோபத்தைக்…
-
உன்னத சங்கீதம்: பானு பாரதி, நோர்வே.
நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானு பாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஒரு ஆணாக சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்த கவிதைகள் பேசுகின்றன. மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே…
-
A Living Legacy: A Tribute to Mallikai – Dominic Jeeva
By L. Murugapoopathy – Australia Translated by Mahroof Noor Mohamed The Sri Lankan government should release a commemorative stamp in honour of Dominic Jeeva, the editor of Mallikai, who remains a living legacy. L. Murugapoopathy, Australia. Dominic Jeeva, born to Joseph and Maryamma on June 27, 1927, in Jaffna, launched the arts and literary monthly…
-
வாசகர் மடல்: 3 நாவல்கள்.
உங்கள் கதைகள் “வண்ணாத்தி குளம்””உன்ன்னையே மையல் கொண்டு”மற்றும் “அசோகனின் வைத்தியசாலை”,தொடர்ச்சியாக மூன்று கதைகளையும் படித்து முடித்தேன். மூன்று கதைகளையும் ஒரு அனுபவமாகவே உணர முடிந்தது. கதைகளில் உள்ள உண்மைத்தன்மை யே காரணம். இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் “வண்ணாத்தி குளம்” வந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நான் தமிழ் நாட்டில் சென்னையில் இருக்கிறேன். இலங்கை பிரச்சனையை நாங்கள் எல்லாம் எவ்வளவு மேலோட்டமாக தெரிந்து வைத்திருநதிருக்கிறோம் என்பது உங்கள் கதைகள் படித்தபின் உணர்ந்து குற்றவுணர்வு கொண்டேன். வ.கு எதார்த்தமான மனதில்…