பகுப்பு: Uncategorized
-
போர்த்தழும்புகள்
– அலெக்ஸ்பரந்தாமன். “”””””””””””””””””””””””””””””””” பரமன் சோற்றை உண்டு கொண்டிருந்தான். சோற்றின் அரைப்பகுதி இலையில் கிடந்தது. பசி உணர்வைவிட, தண்ணீர்த் தாகமே அவனுள் மேலோங்கியிருந்தது. தண்ணீரைக் குடித்தால், சோறு சாப்பிட முடியாது… என்ற சிந்தனை மேலிட , குவளையில் இருந்து நீரையெடுத்து ஒருமிடறு குடித்துவிட்டு, குவளையை மீண்டும் மேசையில் வைத்தான். பசி அவதியில் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டதில், களைப்பு ஏற்பட்டிருந்தது அவனில். ” வாங்கோ… வாங்கோ… உள்ள வாங்கோ…” உணவகப் பணியாளரின் குரல்…
-
‘கரையில் மோதும் நினைவலைகள்’
தர்மினி- பிரான்ஸ் தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். ‘நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?’ என்று கேட்டு அடுத்துக் கேட்பது ‘நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?’ உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர்…
-
எழுத்தாளர் லெ. முருகபூபதி – ஜேகே
எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை திரு லெ. முருகபூபதிக்கு வழங்குவதன்மூலம் பெருமைகொள்கிறது. இளவேனில் சஞ்சிகை இச்செய்தி…
-
சிறுகதை:இராயனுடையது இராயனுக்கே!
நோயல் நடேசன் இயேசு,” இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்றார் – மத்தேயு 22 : 21 அழுக்கில்லாத புதிய பிரித்தானியப் பவுண்டு நோட்டுகளைத் தனது தோல் பையிலிருந்து எடுத்து உண்டியலுக்குள் அவசரமாகத் திணித்தான் ரவிக்குமார். உண்டியலின் சிறிய வாய் திணறிற்று. ரவிக்குமாரின் அவசரம் திணிப்பதை மேலும் சிக்கலாக்கியது. பிரான்சின் லூர்து மாதா தேவாலயத்தை ஒட்டி நதி ஒன்று ஓடுகிறது. அந்த நதியின் அருகில் சில உண்டியல்களை வைத்திருப்பார்கள். அப்படியாக அமைந்திருக்கும் ஒரு உண்டியலுக்குள் தான்,…
-
நிலக்கிளி: நாவல்.
அ. பால மனோகரனின் நிலக்கிளி. ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம். ஒரு பெண் நடந்து போனாள் என்பதைவிட அவளது கறுப்பு நிறமான காலணிகளின் ஓசை என்னை விட்டு விலகிச் சென்றது என்போம் – இங்கே ஒலி , காட்சி என்பவற்றின் மூலம் வாசிப்பவரின் மனதில் ஒரு குறித்தசம்பவத்தை…
-
தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்போம்
இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்களின் பின்பு, நமக்கு இன- மதவாத சக்திகளை, தெற்கு -வடக்கு-கிழக்கு மற்றும் மலையகம் எங்கும் புறக்கணிப்பதற்கு அரிதான ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களில் தங்கி உள்ளது. மெய்நிகர் கலந்துரையாடல்.. 02 November 2024 https://us06web.zoom.us/j/83001458947?pwd=ispiuebNEZne0a8JHE4sFiHiiKnGLf.1 Meeting ID: 830 0145 8947 Passcode: 343222