பகுப்பு: Uncategorized
-
கியூபாவின் வழி தனி வழி
நடேசன்.கியூபா என்றதும் பலருக்கும் சேகுவேராவும் காஸ்ட்ரோவும்தான் நினைவுக்கு வருவார்கள். இன்னும் சிலருக்கு அழகான பெண்களும் (ஆண்களும்) நைட்கிளப்புகளும் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும். இதைவிட கியூபா சுருட்டும் ஹவானா ரம்மும் மறக்க முடியாதவை. பிடல் காஸ்ட்ரோ உயிர் வாழும் போதே கியூபா செல்லவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற கடந்த தை மாதம் அங்கு சென்றேன். எனக்கு ஹவானா விமானநிலையத்தைப் பார்த்த போது ஒரு மூன்றாம் உலக நாட்டின் விமான நிலையம் போல்தான் காட்சியளித்தது. அரை குறையான ஆங்கிலமும்…
-
New possibilities in post-LTTE Sri Lanka
G. PARTHASARATHY India should focus on development of Trincomalee Port. Visiting Colombo barely three years ago was a traumatic experience. With the country torn apart in a seemingly endless civil war, one could sense a nation on edge, even while disembarking at Colombo’s International Airport. The airport itself then looked like an armed citadel. The…
-
ROLE OF EDUCATION IN BUILDING A HARMONIOUS SOCIETY.
ROLE OF EDUCATION IN BUILDING A HARMONIOUS SOCIETY : CHALLENGES AND OPPORTUNITIES By: Dr.Rajasingham Narendran “RECONCILIATION, WORD over all, beautiful as the sky! Beautiful that war, and all its deeds of carnage, must in time be utterly lost; That the hands of the sisters Death and Night, incessantly softly wash again, and ever again, this…
-
தென்னையும் பனையும்
போர் நிறுத்த காலத்தில் சொந்த ஊருக்கு போகவிரும்பினேன். கொழும்புக்கு அப்பால் போக முடியவில்லை. மன ஓடையில் செய்த பயணம் இந்த சிறுகதையாக உதயத்தில் பிரசுரமானது நடேசன் சிறுகதை அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து இரண்டு பிள்ளைகளின் வாயிலும் அவுஸ்திரேலியா பற்றிய விடயங்களே வந்தன. மெல்பேன், சிட்னி, அடிலைட் என்ற சொற்கள் தெறித்து விழுந்தன. தொலைக்காட்சியில்…
-
இது அரிசியியல்.
சில வருடங்களுக்கு முன்பு எனது இரத்தத்தில் சர்க்கரை சிறிது அதிகமாக உள்ளது என்று அறிந்த போது எழுதியது பலருக்கு உதவும் என மீண்டும் பிரசுரிக்கிறேன் நடேசன் சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவருடன் பேசும்போது ‘எனது கலாச்சார கூறுகளில் அரிசி சோற்றைத் தவிர எதையும் நிராகரிக்க முடியும்’ என கூறினேன். சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண்(ரொட்டி) சாப்பிடுவது இழுக்காக கருதப்படும். அரிசி வேண்டுவதற்கு பணம் இல்லாதவர்கள் மட்டும் தான் பாண் சாப்பிடுவது என்ற கருத்து எங்கள் தீவு பகுதி…
-
காதலைத் தேடும் பெண்.
நடேசன் செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து வீடு திரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை தொழில் செய்வார்கள். சனிகிழமைகளிலும் கிளினிக்கை திறந்து வைத்திருப்பார்கள். இதற்கு நானும் விதி விலக்கல்ல. ஊரொடு ஒத்து ஓடவேண்டும. ஏழு நாட்கள் வேலை செய்யும் உணவு விடுதிப் பணியாளர்கள் மற்றும் இலங்கை இந்திய மளிகைக் கடைக்காரர்களை ஒப்பிட்டு ஆறுதல் கொள்ள முடியும். ஆஸ்த்திரேலிய அரசாங்கத்தின் லேபர் விதிகள் செல்லாத இடங்கள்…
-
சாந்தி தேடும் ஆவி: சிறுகதை
நடேசன் யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம். இரவு எட்டு மணிக்குப்பின்னர் கொழும்புத்துறையில் இருந்து குண்டும் குழியுமான A9…
-
யுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று–3
– யாரின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத காலமொன்று எங்களின் வாழ்வில் வந்திருந்தது. அப்பொழுது நண்பர்கள் சந்தேகிக்கப்பட்டனர். அல்லது நம்புவதற்கு கடினமான ஒரு நிலையில் தெரிந்தனர். நண்பர்களிடம் நான் சந்தேகத்துக்குரியவனாக இருந்தேன். நானும் நண்பர்களைச் சந்தேகித்தேன். அயலவர்கள் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். அண்ணன் தம்பியைச் சந்தேகித்தான். தம்பி அண்ணனைச் சந்தேகித்தான். அக்காவைச் சந்தேகித்தாள் தங்கை. பெற்றோரைப் பிள்ளைகளும் பிள்ளைகளைப் பெற்றோரும் சந்தேகித்தார்கள். இந்த நிலை வளர்ந்து சனங்கள் இயக்கத்தைச் சந்தேகித்தனர்.…
-
யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்ற–2
– கருணாகரன் ஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இடம், பொருள்,…
-
யுத்தத்தில் காணாமற் போன ஒன்று —-1
கருணாகரன் நேற்று எங்களின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்திருந்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள் என்றால், வன்னியின்யுத்த காலத்திற் சந்தித்ததற்குப் பிறகு இப்போதே அவரைச் சந்திக்கிறேன்.ஏறக்குறைய மூன்று ஆண்டுகள். யுத்தத்தின் இடைக்காலப்பகுதியில் -உடையார்கட்டுப் பகுதிக்கு இராணுவம் வந்த பிறகு – அவருடைய தொடர்புகளில்லாமல் போய் விட்டது. ஆனாலும் வலைஞர்மடத்திலிருந்து நாங்கள் வெளியேறும் வரையில் அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்தோம். பின்னர், அதுவும் இல்லாமற் போய்விட்டது. நேரடியாகப் பேசுவதற்கும் தகவல்களைச் சரியாக உரியவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கும் அங்கே தொலைபேசி போன்ற தொடர்பு வசதிகள் இல்லை. எல்லாமே வாய்வழித் தகவற்…