பகுப்பு: Uncategorized
-
அப்புஹாமியும் அப்புக்குட்டியும்
“”””””””””””””””””””””””””””””””””””””””” ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது. அப்புக்குட்டியை அந்தக் காபெற் வீதியில் காணமுடியவில்லை அப்புஹாமிக்கு. அவருக்குக் கடமைநேரம் இரவு – பகலென ஒழுங்கமைக்கப்பட்டதினால், அவரால் அப்புக்குட்டியைக் காண முடியாமல் போய் விட்டது. இன்று அப்புஹாமிக்குப் பகல் கடமை. காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு மணிவரைக்கும் அந்த முகாம் வாசலில் வாயிற்காப்பாளராக கடமை புரிய வேண்டும். ‘ இன்றைய பொழுதில் எப்படியும் அப்புக்குட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவார்.…
-
புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை
டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை மேற்படி, அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த 15-09-2024 இல் நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு: 1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வாவின் ஆகியோரின் அயராத பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 2. சியாமளா நடேசன் புற்றுநோய்…
-
“கரையில் மோதும் நினைவலைகள்”.
புஷ்பராணி. படித்துக்கொண்டிருக்கின்றேன். நிறுத்தி நிறுத்தியே வாசிக்கின்றேன். இந்நூலில் வரும் கதா பாத்திரங்கள் அநேகமாக எனக்குத் தெரிந்தவர்களாயும், நெருங்கிப் பழகியவர்களாகவும் இருந்ததால் என் நினைவலைகள் பின்னோக்கிச் சிதறுகின்றன . அந்த ஞாபகங்களில் கிளர்ந்து மூழ்கும்போது என்னையறியாமல் பலவித உணர்வுகள் மனதுக்குள்.அழுத்துகின்றன. தமிழ் ஈழ ஆரம்ப போராளிகள் பலருடன் இவருக்கிருந்த நெருக்கம்பல இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது. எனக்குள்ளும் ஏதேதோ நினை வலைகள்…. புதிய யுக்தியென்று நினைத்தாரோ என்னவோ தெரியாது சம்பவ ங்களை கோர்வைப்படுத்தி எழுதாமல் அங்கொன்றும் இங்கொன் றுமாக மாறி மாறி…
-
முடிவு
அலெக்ஸ்பரந்தாமன் ” என்ன மச்சாள் இனித்தானே சமையல்…?” மதிய உணவுக்காக சுளகினில் அரிசியைப் போட்டுப் புடைத்துக் கொண்டிருந்த இராசம்மா, கேள்வி கேட்டவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பவும் அரிசியைப் புடைக்கத் தொடங்கினாள். அங்கு வந்த வள்ளிப்பிள்ளைக்கு மச்சாள் தன்னோடு முகம் கொடுத்துக் கதைக்காதது மனதை ஏதோ குடைவதுபோல் இருந்தது. ‘ம்… ஆர் கண்டது…? இந்தக்குடும்பம் இப்படி முன்னுக்கு வருமெண்டு. ‘அ’ னாக்கு அடிவளம் தெரியாததுகள் எல்லாம் அந்நிய…
-
அவன் வந்தபோது…
– அலெக்ஸ்பரந்தாமன்.””””””””””””””””””””””””””””””””””””” வைகாசிமாத சோளகக்காற்று தெருவிலே கிடந்த குப்பை கூழங்களை மட்டுமல்லாது, கூடவே மண்ணின் புழுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு, வடதிசைநோக்கி வீசிச் செல்கையில், ஐயனார் கோவிலின் பெருங்கோபுர மணியோசை நேரம் பகல் பன்னிரெண்டு மணியென்பதை காற்றோடு காற்றாய் பறைசாற்றிக் கொண்டிருந்தது. உச்சிவானத்திலிருந்து வரும் பகலவனின் கதிர்கள் பெரும் உஷ்ணமாய்… அதைப் பூமியெங்கும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க, கூட்டுறவுச் சங்கக்கடையில் உலர்உணவு அட்டைக்குக் கொடுக்கப்பட்ட அரிசி, சாமான்களை வாங்கிக்கொண்டு, அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் நல்லம்மா.…
-
எனது முன்னுரை.
எமது அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் கவிதா நிகழ்வு ஆதியில் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாகிய இலக்கிய வடிவம் கவிதை. அது மனித மனமகிழ்விற்காகவே தோன்றிய து .12 மனிதர்களில் ஒருவன் ஒரு நாள் வழக்கமான வேட்டைக்குப் போகாது தனது குகையில் தங்கிவிடுகிறான். மாலையில் வேட்டையிலிருந்து மீண்டவர்கள் உண்ணும்போது வேட்டைக்குப்போகாது தங்கியவன் அவனது கவிதையால் களைத்திருந்தவர்கள் உணவருந்தியபோது மகிழ்வித்தான் என்கிறார் ஐரிஸ் கவிஞர் ஓஸ்கார் வைல்ட்.இப்படி சாதாரண மனிதர்கள் மத்தில் உலாவிய கவிதை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பாக…
-
காலமாற்றம்.
– அலெக்ஸ்பரந்தாமன். நீண்டநாள்களாக மனதினுள் கிடந்து துருத்திக்கொண்டிருந்த விருப்பொன்று இன்று நிறைவேற இருப்பதையிட்டு, பரமலிங்கத்துக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் அவர் அந்தக் கிராமத்தைவிட்டு வெளிக்கிடும் வரைக்கும் அந்தக்கிராமமே அவருக்கு உயிர்நாடியாக இருந்தது என்னவோ உண்மைதான். சிறுவயது தொடக்கம் வாலிபவயதுவரை அந்தக்கிராமத்தில் வாழ்ந்தவருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, பின்பு எண்பத்துமூன்று ஆடிக்கலவரத்தோடு வன்னிக்கு அழைத்து வந்து விட்டன. அவர் இப்போது வன்னிவாசி. வன்னிமண்ணிலே தனக்கென ஓர் இணையைத் தேடிக்கொண்டவர்,…
-
பெளத்த காருண்யம்
அலெக்ஸ்பரந்தாமன். நிலமெங்கும் பரவியிருந்தது கார்த்திகை மாதத்துக்குரிய கடுங்குளிர். மண்ணின் வரட்சியைப் போக்கிவிட்டதில், இன்னும் திருப்தி கொள்ளாத மனோபாவமாக வானமும் கொட்டித் தீர்த்திருந்தது மழைத்துளிகளை. நீண்ட நாள்களாக முழுக்கற்று இருந்த வான்பயிர்களும் அகம் குளிர்ந்தனவாய் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தவண்ணம் இருந்தன. வருடத்தின் இறுதியில் மலரும் பூக்களும் தம் இதழ்களைவிரித்து புன்னகை பூத்தன. தொடர்ந்து நான்கு நாள்கள் இடைவிடாது தன் திமிர்த்தனத்தைக்காட்டிய கனமழை மனந்திருந்தியதுபோன்று, தனது ஆங்காரத்தனத்தைக் குறைத்துக் கொண்டதும் வானம் மெல்ல மெல்ல தன்…