பகுப்பு: Uncategorized
-
மயிர்கொட்டிகள் பட்டாம்பூச்சிகள் ஆகியகதை
நடேசன் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள கல்வியங்காட்டில் அரிசிக்கார ஆறுமுகம் தெருவில் சிறுவயதில் எங்கள் குடும்பம் வசித்தது. சிறியதெரு என்று சொல்ல இயலாது. யாழ்ப்பாணம் மொழியில் ஒழுங்கை எனலாம். பத்து வீடுகள் மட்டும்தான் அந்த ஒழுங்கையில் இருக்கும். ஒழுங்கையின் இரண்டு பக்கமும் உள்ள கிடுகு வேலிக்கு உட்புறமாக பூவரசமரங்கள் மிகவும் தழைத்து கிளைவிட்டு ஒழுங்கைக்கு பந்தல் போட்டு நிழல் கொடுக்கும். கோடை வெயில் ஒழுங்கையில் ஊடுருவ முடியாது. ஆனாலும் குறிப்பிட்டகாலத்தில் அந்த ஒழுங்கையில் சைக்கிளில்…
-
சொல்ல மறந்த கதை 3
வீணாகிப்போன வேண்டுகோள் முருகபூபதி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் கோயில்களில் அவ்வப்போது ஒரு காட்சியை காணலாம். கோயில் வீதிகளில் நசுங்குண்ட எலுமிச்சைகள் சிதறிக்கிடக்கும். எம்மவர்கள் புதிதாக வாகனம் வாங்கினால் தம்முடன் தமது வாகனத்தையும் கோயிலுக்கு அழைத்துச்சென்று ஐயரிடம் தமது காருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து ஐயர் தரும் அர்ச்சனைத்தட்டில் இருக்கும் எலுமிச்சம்பழங்களை வாகனத்தின் நான்கு சில்லுகளுக்கும் கீழே வைத்து அதன்மீது வாகனத்தை செலுத்தி அதற்கு சாந்தி செய்வார்கள். தனிநபர்களுக்கு அர்ச்சனை செய்யும்போது ராசி, நட்சத்திரம் கேட்பதுபோன்று வாகனங்களுக்கு அர்ச்சனை…
-
புத்தனுக்கு போதி மரம்……….
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ முறை சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள சகலருக்கும் மருத்துவ வசதி எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்கும். இதை விட மேலதிகமாக வசதி தேவைப்படுபவர்கள் பிரத்தியேகமாக தங்களுக்கு காப்புறுதி செய்துகொள்ள முடியும். இப்படியான நடைமுறைகள் இங்குள்ளவர்கள் வாழ்க்கை காலத்தை அதிகப்படுத்துகிறது.எண்பது வருடத்துக்கு மேல் வாழ்கிறார்கள். உடலை இயங்க வைக்கும் மருந்துகள் பல மூளை நரம்பு மண்டலத்தை நலமாக வைத்திருப்பதில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தபோதும் வீட்டில் பராமரிக்கப்படாது முதியோர் விடுதிகளுக்கு செல்லுவது தவிர்க்கமுடியாது.…
-
சொல்லமறந்த கதை: 2
தமிழ் மூவேந்தர்களும் ருஷ்ய மன்னர்களும் முருகபூபதி – அவுஸ்திரேலியா ஓன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் அதிபராக கொர்பச்சேவ் பதவியிலிருந்த காலத்தில் அங்கு அவர் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களை உருவாக்கினார். அதனால் சர்வதேச அரங்கில் இடதுசாரிகளிடத்தில் விமர்சனத்துக்கும் உள்ளானார். எனினும் அவர் அறிமுகப்படுத்திய மாற்றங்களை வலதுசாரிகள் விவாதத்துடன் ஏற்றுக்கொண்டனர். 1985 இல் நாம் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் விழாவில் கலந்துகொள்ளச்சென்றபோது, அங்கு மக்களிடமிருந்த மாற்றங்களையும் அவதானிக்க முடிந்தது. கம்யூனிச நாடான சோவியத்தில் கொர்பச்சேவின் வருகைக்குப்பின்பு தோன்றிய…
-
சொல்ல மறந்த கதை
அநாமதேய தொலைபேசி அழைப்பு முருகபூபதி அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் (தற்போது தினக்குரலின் பிரதம ஆசிரியர்) வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம். எனக்கு நீர்கொழும்புக்குச்செல்வதற்கு இரவு 12.30 மணிக்குத்தான் கடைசி பஸ். அதனை தவறவிட்டால் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் மறுநாளுக்கான முதல் பஸ். இரவுக்கடமையின்போது கடைசிபஸ் தவறவிடப்படுமானால் அலுவலகத்திலேயே தங்கிவிடுவது எனது வழக்கம். 1977 கலவரத்திற்குப்பின்னர், தனபாலசிங்கம் வேலைமுடிந்து நடந்துபோகும் தூரத்திலிருக்கும் கொட்டாஞ்சேனைக்கு…
-
Dear Mr Jeyaraj:
http://dbsjeyaraj.com/dbsj/archives/8439 Thank you for wonderful articles you write and your blog. You are one of the few objective journalists who report events with a heart but also with a logical mind. I wanted to share some of my experiences. I am not sure if you ever wrote about the heinous crimes in India in…
-
நினைவுத் தடத்தில்; ….
இரவு பன்னிரண்டை காட்டியது தொலைக்காட்சிப் பெட்டியின்மேலே இருக்கும் கடிகாரம். இங்கிலாந்தில் தயாரித்த துப்பறியும் நாடகம் தொலைபேசியில் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. இதற்கு முன்பு காண்பிக்கப்பட்ட போலிஸ் நாடகமும் இங்கிலாந்தைச் சேர்ந்தது. என்னால் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடகங்களை பெரிதாக ரசிக்கமுடிவதில்லை. தமிழ்நாட்டு மெகா சீரியல்களில் வருவதுபோல் கட்டிலில் படுக்கும்போதும் விலையுயர்ந்த பட்டுச்சீலை, காலையில் எழும்போது முக அலங்காரங்கள் என்று இல்லாவிடினும், அமெரிக்க ஆஸ்திரேலிய தயாரிப்புகளில் நாடகத்தன்மை தெரியும். மேல் மாடியில் மனைவி தூங்குகிறாள். மகனும் மாடியில் இன்ரநெட்டோ, ரிவி நாடகமோ…
-
அன்புள்ள விலங்குகள் :நடேசனின் “வாழும் சுவடுகள்.
பாவண்ணன் கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது என்பது இன்னொரு விதம். இப்படிப்பட்டவர்களே அறிவியலாளர்களைப்போல ஆய்வுமனப்பான்மையோடு தனது துறையில் ஈடுபடுகிறார்கள். தொழிலிடங்களில் தமக்கு நேரும் அனுபவங்களை முன்வைத்து தம் கேள்விகளுக்கான…
-
‘வானவில்’ திட்டத்திற்காக கிளிநொச்சி அனுபவம்
நடேசன் மல்லிகா நாற்பத்தைந்து வயது. பார்ப்பதற்கு அழகாக இந்திய பிராமணப் பெண் போல் சிவப்பு நிறத்தில் இருந்தார். இவரது ஒரு மகள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளோடு போராளியாக இறந்தவர். மற்றுமொரு மகள் திருமணமாகி கணவனுடனும் பிள்ளையுடனும் வேறு இடத்தில் வசிக்கிறார். நான் சந்தித்த அந்தப் பெண் போர்க்காலத்தில் கணவனை இழந்தவர். எனது ‘வானவில்’ திட்டத்தின் மூலம் கனடிய நண்பர் ஒருவாரால் இந்தப் பெண்ணுக்கு உதவி வழங்கப்படுகிறது. இவரை முதலாவது முறையாக நண்பர் கருணாகரனின் வீட்டில் அழைத்து உரையாடியபோது…
-
கலவியில் காயம் – நடேசன்
ஒருநாள் இரவு மெல்பேண் சிவா-விஷ்ணு கோயிலின் நிர்வாகிகள் ,அடியார்கள் என்று நான்கு பேர் தொலைபேசியில் சொன்னார்கள். “கோயில் மயிலுக்கு சுகம் இல்லை. ஒருக்கா பார்க்கவும்.” “என்ன வருத்தம்?” “காலை நொண்டுவதாக ரங்கையா கூறினார” ‘முருகனை மட்டுமல்ல அவரது இரண்டு மனைவிகளையும் ஏற்றிக்கொண்டு உலகை வலம்வரும் மயிலுக்கு கால் நொண்டியாகிவிட்டது.’ என யோசித்தேன். எனது மகள் “ஏன் மயிலை கோயிலில் வைத்து இருக்கிறார்கள்?” “முருகனின் வாகனம்” – இது என் மனைவி ‘பாம்பு, எருதுமாடு, நாய், எலி எல்லாம்…