பகுப்பு: Uncategorized
-
வீயன்னா : ஆஸ்த்திரியா. 3
ஆஸ்திரியாவின் தலைநகரான வீயன்னா, ஐரோப்பாவின் முக்கியமான மனிதர்கள் பலர் பிறந்து வளர்ந்த நகரமாகும். புதிய சங்கீதம், கட்டிடக்கலை, மருத்துவம் என பல விடயங்கள் உருவாகிய நகரம் என நான் கேள்விப்பட்டிருந்தாலும், நமக்கு யார் முதல் நினைவுக்கு வருவார்கள்? நல்லவற்றை விட கெட்டவைகள் நமது உள்ளங்களில் அதிக காலம் நீடிப்பது உண்மையே! மொர்சாட்,பீத்தோவன், சிக்மண்ட் பிரைட் போன்றவர்கள் வசித்த நகரமான போதிலும், வரலாற்றில் ஈடுபாடான எனக்கு முதல் வருவது ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுகளே. அடால்ஃப் ஹிட்லர்…
-
செருக்கு
அலெக்ஸ் பரந்தாமன். ” ஐயோ… என்ர அண்ணற்ர பிள்ளையள் எங்கையெண்டு ஒருக்காச் சொல்லுங்கோவன். நான் அதுகளோடையெண்டாலும்போய் இருக்கப்போறன்…” ஊர்மத்தியிலுள்ள ஒழுங்கை ஒன்றிலிருந்து ஒலிக்கிறதுது அக்குரல்! அதுவொரு பெண்ணின் குரல்! ஆறுமாத காலத்திற்கும்மேலாக ஊரின் ஒழுங்கைகள் எங்கும் அந்தப்பெண் புலம்பியபடி… திரிகிறாள். காலம் கடந்த ஞானோதயத்தின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள்… ஒழுங்கைகளில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தன. ஆயினும், அந்த வார்த்தைகளில் உள்ள வேண்டுதல்கள் குறித்து ஊர்ச்சனங்கள் எவரும் தங்கள் தங்கள் கவனத்தில்…
-
மீண்டும் கானல்தேசம்.
அரசியலும் இலக்கியமும் கலந்த நேர்மையான கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள். 2023யில் பிரித்தானியா சென்றபோது ரஜித்தா சாம் உடன் நடந்த சந்திப்பு.
-
நதியில் நகரும் பயணம்:பிரட்ரிஸ்லாவா.
புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி ( main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை…
-
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் படைப்புலகம்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமை கனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம் தொடர்பான கருத்தரங்கு . தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம். ) அறிமுகவுரை – லெ முருகபூபதி. – அவுஸ்திரேலியா…
-
நதியில் நகரும் பயணம் -2
ஜெர்மனில் வசிக்கும் எனது தம்பியின் வீட்டுக்கு பல வருடங்களுக்கு முன்பதாக சென்றிருந்த போது, அவன் தனது ஊரான வுட்ஸ்பேர்க் அருகே ஓடும் மெயின் நதிக்கரைக்கு கூட்டிச் சென்றான். அப்பொழுது ஓடும் நதியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பயணக் கப்பல் பலரோடு , நிறைகுடம் ஏந்திய கர்ப்பிணிப் பெண்ணாகத் தண்ணீரில் அசைந்து கொண்டிருந்தது. நதியில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக ஓடக்கூடாது என்ற கட்டுப்பாடுள்ளது. ‘அது ஒரு உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்,…
-
புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் !
பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !! முருகபூபதி “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால், எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில் நான் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும். “…
-
நதியில் நகரும் பயணம்-1
அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றது. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் அந்த நகர்ப்பகுதி மின்சார வெளிச்சத்தில் அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின்…
-
தேவதைகளின் பாதணிகள்.
‘தேவதைகளின் பாதணிகள் படித்தேன். உன் சோகம் என்னைத் தொற்றிக்கொண்டது.’ இது நான் சஞ்சயன் செல்வமாணிக்கத்திற்கு எழுதிய குறிப்பு. எழுத்தாளராக எழுதும்போது வாசிப்பவர் மனதில் கோபம் , மகிழ்வு, ஏன் வெறுப்பு என ஏதாவது ஒரு விதத்தில் அவர்களது மனநிலை பாதிக்கவேண்டும் . அப்படி இல்லாதபோது எழுதுவது வீண் விரயம் என நினைப்பவன் நான். சஞ்சயன், தனது பெண் குழந்தைகளை வளர்த்த விதம், பின்பு மணவிலக்கு ஏற்பட்டதால் அவர்களாகிப் பிரிந்தது, ஒரு பெண்ணின் தந்தையான என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. பல விதங்களில் எந்த குறையும் ஏற்படாது வளர்ந்தவன் நான் என்பதால் இந்த…
-
சுடலை ஞானம்
“அலெக்ஸ்பரந்தாமன் தம்பிராசா இப்போது மிகவும் வயதாளியாக இருந்தார். கிட்டத்தட்ட எண்பது வயதை அவர் தாண்டியிருந்தார். அவரைப்போலவே அவரது மனைவியும் உடல் ரீதியாக மிகவும் தளர்ந்திருந்தாள். இருப்பினும், அவர்கள் இருவரும் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஏ.சி. பொருத்தப்பட்ட வீட்டுக்குள் மின்னியல் சாதனங்கள் ஒவ்வொரு தேவைகளுக்குமாக நிறைந்திருந்தன. அவர்கள் இருவரது தேவைகளைக் கவனிக்கும் பொருட்டு, கணவனை இழந்த ஒரு விதவைப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாள். தம்பிராசாவின் பிள்ளைகள் ஐவரும் லண்டன், கனடா, அவுஸ்திரேலியா…