பகுப்பு: Uncategorized
-
வாழும்சுவடுகள்.
– எஸ். ராமகிருஷ்ணன் இந்த நூலில் நடேசன் தனது கால்நடை மருத்துவ அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். கால்நடைகள், குறிப்பாக வளர்ப்புப் பிராணிகள் குறித்துத் தமிழில் யாரும் அதிகமாகப் பதிவு செய்ததில்லை. வளர்ப்புப் பிராணிகள் பற்றிய ஒன்றிரண்டு புத்தகங்களே உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கியப் பதிவுகள் மிகக் குறைவே. நடேசன் காட்டும் உலகம் முற்றிலும் மாறுபட்டது. நாய்கள், பூனைகள், நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன, அதற்கான நோய்மையை எப்படி நாம்…
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்.
அனோஜன் பாலகிருஷ்ணன், எழுத்தாளர், விமர்சகர் மற்றும் அகழ் மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவர். சதைகள் , பச்சை நரம்பு, பேரீட்சை ஆகிய சிறுகதை தொகுப்புகளும், தீகுடுக்கை என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார். தற்சமயம் பணி நிமித்தம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார்.
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் நாவல்கள் .
பிரான்சில் வதியும் இளம் எழுத்தாளர் அகரன், ஓய்வு பெற்ற ஒற்றன் , அதர் இருள் (2022)துரோகன்(2024) என்ற மூன்று நூல்களை எழுதியவர் . இவர் அ.முத்துலிங்ககத்தின் எழுத்துகளில் ஈர்க்கப்படடவர்.
-
நதியில் நகரும் பயணம்- 4 :மெல்க் .(Melk) , ஆஸ்த்திரியா.
மெல்போர்னில் வீடு கட்டுவதற்கு நகரசபையில் அனுமதி வாங்கும்போது, வீடு கட்டி மிகுந்த நிலத்தில் எப்படி பூந்தோட்டம் அமைப்பீர்கள்? வீட்டின் முன்பகுதியில் எப்படி வேலி அமையும்? எனப் பல கேள்விகள் கேட்பார்கள். இப்படிப் சில கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியே அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமான நாங்கள் அதற்காக, பதிலைக் கூறாது கட்டிக் கலைஞரையும் ( Architect) லாண்ண்ட்ஸ் ஸ்கேப்( Landscapist) கலைஞரிடமும் விட்டு விடுவோம். இவற்றின் வழமை எப்படி மேற்கு நாடுகளில் உருவாகியது? 15 ஆம் நூற்றாண்டுகள் வரையில் மனிதர்கள்…
-
நோயல் நடேசனின் “கரையில் மோதும் நினைவுகள் “
by Arafath Sahwi கடந்த ஆண்டின் துவக்கத்தில் மட்டக்களப்பு செல்லும் வழியில் தோழர் கருணாகரன் நோயல் நடேசனின் கரையில் மோதும் நினைவலைகள் நூலை தந்து விட்டுப் போன ஞாபகம். இதனை வாசிக்காமல் ஓராண்டு கடத்தியிருக்கிறேன் . மூன்று தினங்களுக்கு முன் ஓய்வாக வீட்டிலிருந்த தருணம் நோயல் நடேசனின் நூலின் ஒரு ஓரிரு பக்கங்களை வாசித்தவுடன் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அது கிளறி விட்டது. மிகுந்த பணிகளுக்கிடையில் தொடராக வாசித்து விட்டு மனதில் பட்டதை எழுதுகின்றேன். நோயல் நடேசனின்…
-
பரிசு பெற்ற நூல்கள்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க…
-
உண்மை சம்பவம் 2 .
இன்றய இரவு கண்ட கனவு என்னைத் திடுக்கிட வைத்தது. அமரிக்காவில் எங்கோ நடந்து சென்று மார்க்கட்டிற்க்கு சென்றேன். மீண்டும் திரும்ப எனக்கு தங்கியிருந்த ஹோட்டல் நினைவு வரவில்லை. அப்பொழுது ஒருவன் வழிகாட்டுவதாக அழைத்தான் அவனில் சந்தேகத்துடன் போக மறுத்து கடைக்காரர் ஒருவரிடம் எனது ஹோட்டல் தொலைபேசியை அழைக்கும்படி சொன்னேன் அப்பொழுது அவர் ஹோட்டல் பெயரைக் கேட்டபோது பெயர் சொல்லமுடியவில்லை.. எனது மூளை சில கம்பியூட்ர் மாதிரி செயல்பட மறுத்துவிட்டதே எனப் பயத்துடன் திடுக்கிட்டு எழுந்து மனைவியுடன் கனவைச்…
-
தமிழ் நாவல்கள் .
தமிழ் நாவல்கள்.தமிழ் நாவல்களின்மீது மட்டுமல்ல எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மீதான எனது விமர்சனத்தை இங்கே பொதுவில் வைக்கிறேன். எனக்குத் தெரிந்த,நான் படித்த இலக்கிய அறிவின் பிரகாரம் ஒரு சமூகத்தை அறிய நாம் கற்பனை அற்ற எழுத்துக்களை வாசிக்க வேண்டும். உதாரணமாக இலங்கைப் போரை அறியப் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ், இக்பால் அத்தாஸ் போன்றவர்களை வாசித்தோம்.அவர்கள் முடிந்தவரை உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள். யாழ்ப்பாணம் அல்லது இந்தியச் சாதி அமைப்பை அறிய நாம் பத்திரிகைகள் மற்றும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை அணுகுவோம்…
-
உண்மைச் சம்பவம்- 1
இது வரையில் பலர் என்னைத் தங்கள் மதங்கள் பால் ஈர்க்க முனைந்திருக்கிறார்கள். எனது 70 வயதில் ஒரு யூத ராவ்பியும்( rabbi) முயன்றார். நாங்கள் இருக்கும் பகுதி யூதர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி அவர்கள் கோயில், பாடசாலை இங்குள்ளது. எனது ஜிம் கோச் ஒரு யூதர் – அவருக்கும் நெத்தனியாகுவை பிடிக்காது நான் மதியத்தில் ஜிம் போய்விட்டு அந்த கட்டிடத்தின் முன்னால் மனைவியின் வாகனத்துக்கு காத்திருந்தபோது, அங்கு அங்கு ஒரு யூத ராவ்பி வயதானவர் என்னை அணுகி ‘ இங்கு யாராவது யூதர்களை தெரியுமா?? ‘ என்றார் நான் சொன்னேன் ‘ ‘அப்படி ஆட்களை நான் பார்ப்பதில்லை. தெரியாது.…