பகுப்பு: Uncategorized
-
வாழும் இலக்கியங்கள்:சிலப்பதிகாரம்.
நடேசன். நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலைசீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான். ‘கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது…
-
நதியில் நகரும் பயணம் 8 :பாம்பேர்க்
இதுவரையும் பார்த்த நகரங்களில் எது அழகானது என்று கேட்டால் பாம்பேர்க்(Bamberg) என்பேன். இது பவேரியா மாநிலத்தில் உள்ள ஜெர்மனியின் புராதன நகர். இந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் அமைந்திருக்கிறது. இரண்டு ஆறுகள், அழகான தேவாலயம் , கோட்டை , பெரிய மாளிகையும் அதனருகே தோட்டம் புகையூட்டப்பட்ட பியர், பல உணவகங்கள் எல்லாம் பொடி நடையில் சென்று பார்க்கும் தொலைவில் அமைந்துள்ளது. பல காலமாக முழு நகரமும் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மரத்தால் அமைக்கப்பட்ட…
-
Mr V.Selvadurai of Melbourne passed away in Melbourne.
V.Selvadurai of Melbourne, Australia formerly of Amman Road, Kantharmadam, Jaffna sadly passed away on 07.02.2025. He is the son of Kasipillai Velauther and Vallipillai Velauther, sibling of Kanmani Nadarajah & Nadarajah, of the late Kandiah Velauther & Vigneswary Kandiah and Sinnamma Ganesharajah & Ganesharajah. Uncle to Tamilchelvan & Premila and Vasuki & Kandeepan Great Uncle…
-
நதியில் நகரும் பயணம் :7 -நூரம்பேக்
எங்களது படகின் அடுத்த தரிப்பு, பவேரியா மாநிலத்தில் நூரம்பேக் நகரமாக இருந்தது. ஆனால், படகின் வழிகாட்டும் பொறுப்பாளர்கள் . “இலவசமாக நகரத்தின் மத்திய பகுதிகளை நாங்கள் சுற்றிக் காட்டுவோம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பணம் கொடுத்தால், ஹிட்லரது நாஜி கட்சியினது முக்கிய தலைவர்கள் , அதிகாரிகளுக்கு எதிராக, நேசநாடுகளால் நடத்தப்பட்ட வழக்கு நடந்த இராணுவ நீதிமன்றத்திற்கும் , ஹிட்லரது கட்சி பிரசாரத்திற்கும், கூட்டங்கள், அணிவகுப்புகளுக்கு எனக் கட்டப்பட்ட ஸ்ரேடியம், அணிவகுப்பு மைதானம் போன்ற பகுதிகளுக்கு உங்களை பஸ்சில்…
-
மரங்கொத்தி புத்தகங்கள்.
நடேசன் The Girl with the Dragon Tattoo The Girl who played with fire The Girl who kicked the hornets’ nest BY STIEG LARSSON அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age ) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக…
-
நவீன இந்திய நாவல்கள்_ ஓர் பார்வை.
கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்ட இந்த நான்கு நாவல்களும் அந்தந்த மொழிகளில் சிறந்தவை என்பதுடன் அழகான மொழிபெயர்ப்பைக் கொண்டவை. இவைகளை வாசிப்பது மிகவும் சுகமான அனுபவம்.இந்த நான்கு கதைகளும் எடுத்துக்கொண்ட கருக்கள் இந்தியாவின் கலாச்சாரத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்தை புரியாத ஒருவரால் நீலகண்டப்பறவையைத்தேடியில் வரும் மாலதியின் அவலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.செம்மீனில் கற்புடன் பெண்கள் இருந்தால்தான் மீன்பிடிக்கச் சென்ற மீனவக் கணவன்கள் உயிருடன் திரும்புவார்கள் என்பது அர்த்தமில்லாத விடயமாகத் தெரியும்.யு . ஆர்.…
-
புலி ஒவ்வாமையில் பிறந்த
நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ நாவல். இன்பமகன் . 2023 ஜீவநதியின் நாவல் சிறப்பிதழ். ‘அசோகனின் வைத்தியசாலை’ என்ற நாவல் மூலமே நொயல் நடேசன் என்கிற படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். ஒஸ்ரேலியா மெல்போனில் இயங்கும் ஒரு மிருக வைத்தியசாலையை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை அது. ஆசிரியரும் ஒரு மிருக வைத்தியர் என்பதால் அவரால் சிறப்பாக எழுத முடிந்துள்ளது. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் மேம்பட்டு நின்ற அந்நாவல் என்னைக் கவர்ந்திருந்தது. ஆகையால் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரின் ‘கானல் தேசம்’…
-
நதியில் நகரும் பயணம்-6: ரீஜன்பேர்க், ஜேர்மனி.
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள். டானியுப் நதியில் நாங்கள் சென்ற அடுத்த நகரம் மிகவும் முக்கியமானது . பவேரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பழைய…
-
தமிழ் நாவல்கள்- விமர்சனம் .
ஈழத்துப் போரை புரிந்துகொள்ள விமர்சகர்கள், முக்கியமாகத் தமிழ்நாட்டு விமர்சகர்கள் நமது போர் நாவல்கள் வாசிப்பதாக சொல்கிறார்கள். எனது கேள்வி : .உதாரணமாக இந்திய அமைதிப்படையின் நடத்தைகளை அறியத் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் படிப்பதா? அல்லது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் எழுதிய “முறிந்த பனை” படிப்பது நல்லது என்ற கேள்வியை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.
-
நதியில் நகரும் பயணம் -5 சல்ஸ்பேர்க் (Salzburg)
நதிப் பயணத்தில் அடுத்த நகரமானது ஜெர்மனி -ஆஸ்திரியா எல்லையில் உள்ள சிறிய நகரம் பாஸ்சு (Passau). அங்கு நிறுத்தப்பட்டால் புனித ஸ்ரிபன் தேவாலயத்தையும் அத்துடன் வேறு சிறிய ஆற்றின் கழிமுகம் உள்ள நகரம். ஆனால், அங்கிருந்து இரு மணி நேரப் பஸ் பயணத்தில் ஆஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் நகரம் உள்ளது. அங்கு போக விசேடமாகப் பணம் கொடுக்க வேண்டும் . ஏன் அங்கு போகவேண்டும் ? அந்த நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? என்னைப் பொறுத்தவரை சல்ஸ்பேர்க்…