பகுப்பு: Uncategorized
-
தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா
எக்சைல் 1984 நடேசன் மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்…? என் முன்னால் நிற்கும் கேள்வி. இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள். நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்லமுடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது…
-
அந்தரங்கங்கள் (சிறுகதை)
நடேசன் தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. பழையனவாக நினைத்து புதைத்தது, துளிர்த்து மீண்டும் செடியாகியதுபோல், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களின் கோர்வைதானே இந்த மனித வாழ்க்கை. சிட்னியில் ஜுலை மாதம்…
-
தமிழ்த்திரையுலகில் ஒரு பொம்பிளை சிவாஜி மனோரமா ஆச்சி.
நாடக உலகிலிருந்து திரையுலகம் வந்து 65 ஆண்டுகளுக்குமேல் நிலைத்து நின்ற கின்னஸ் சாதனையாளர். நடிப்பு, ஆடல், பாடல், பேச்சாற்றல் யாவற்றிலும் தனது முத்திரைகளை பதித்தவர் நிரந்தரமாக மௌனமானர் – முருகபூபதி – அவுஸ்திரேலியா திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர். இறுதியாக கடந்த…
-
Let My People Go In Peace
“Today we are facing the biggest humiliation in our history. We are on the verge of being defeated in a war that has brought no benefit to our people. Our people are forced to sacrifice their lives for what? Our people are far safer and much better off if we do not have a war.…
-
போர் குற்றங்களும் விசாரணைகளும்
நாமெல்லாம் செம்மறியளாக இருப்பது எமது தவறல்ல குறைந்த பட்சம் நல்ல இடையர்களையாவது எப்பொழுது தேடுவது? நடேசன் பதினாறு வயது சிறுவனாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் இரவுநேர கடைசி பஸ்ஸ_க்காக காத்திருந்தேன். அக்காலத்தில் படபஸ் எனப்படும் அந்தபஸ் காங்கேசன்துறை வீதிவழியாகப் போகும். அதில் இறங்கி விடுதிக்கு செல்லவேண்டும். அந்த இரவில் தனித்து நிற்பதால் பயம்வேறு வாட்டியது. அப்பொழுது சாறமணிந்த இருவர் அதனை உயர்த்தி கட்டியவாறு ஒருவரோடு ஒருவர் தர்க்கமிட்டனர். இருவரது வாரத்தைகளிலும் அதிகம் தூசணம் மற்ற தமிழ்…
-
இலங்கையில் இலக்கிய நடை முறைகளை எப்படி ஊக்குவிப்பது?
நடேசன் இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மட்டுமே அதை ஏற்படுத்தமுடியும் என்பதும் மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதிவளமும் தேவை என்பதும் புரிந்தது. ஆங்காங்கு நடத்தப்படும் மாநாடுகளையும் இலக்கிய…
-
உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை உண்மையே
நடேசன் அவுஸ்திரேலியர்கள் நிறவாத தென்னாபிரிக்க கிரிக்கட் ஆட்டக்காரர்களை முன்பு பகிஷ்கரித்தார்கள். அதில் ஒரு நியாயம் இருந்தது. நிறவாத அரசு அகன்ற பின்னர் தலைவர் நெல்சன் மண்டேலாவை வரவேற்றார்கள். முன்னர் இங்கிருந்த சிங்கள தேசிவாதிகள் அமர்தலிங்கத்தை பகிஷ்கரித்து அட்டைகளை சுமந்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரேமதாச வந்தபொழுதும் லலித் அத்துலத் முதலி வந்தபொழுதும் இங்குள்ள தமிழ்த்தேசியவாதிகள் பகிஷ்கரித்து அதேபாணியில் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது இலங்கை கம்பன் கழகத்தையும் அதன் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜையும்…
-
மீண்டும் ஒரு ஆதாம்.
(சிறுகதை) நடேசன் இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்த சீனத்து இளம் பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம்தான்…
-
நடேசனின் ‘வாழும் சுவடுகள்.’
ஆசிரியர்: டாகடர் என்.எஸ்.நடேசன். பதிப்பகம்: மித்ர; டாக்டர் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். ‘நாலுகால் சுவடுகளே’ ‘வாழும் சுவடுகளான’ தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் ‘வாயில்லாச் சீவன்ளுடனான’ மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் ‘வாழும் சுவடுகள்’ இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக ஒவ்வொரு அனுபவங்களும் ஈசாப் கதைகளைப் போல்…