பகுப்பு: Uncategorized
-
அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015
ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015 நூல்களின் கண்காட்சி அரங்கு இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு முருகபூபதி அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. படைப்பு இலக்கியம் – நடனம் – ஓவியம் – ஊடகம் – சமூகம் – பண்பாடு…
-
பொன் விளையும் பூமி.
பிற்க்காலத்தில் மண்டேலா வாழ்ந்த வீடு சுவற்றோக் குழந்தை எங்கள் தமிழ் வழக்கத்தில் பொன் விளையும் பூமி என்ற நாங்கள் கேள்விப்பட்டது நெல் விளையும் வயலைத்தான். ஆனால் உண்மையாக பொன் விளைந்தது மட்டுமல்ல பாதையோரத்தில் குவிக்கப்பட்ட மண்குவியல் தங்கத்துகளை தன்னகத்தே கொண்டு தங்க நிறத்தில் காட்சியளிக்கும் ஒரே நகரம் ஜோகன்ஸ்பேக். அந்த மண்ணில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் அங்காங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருக்கிறது. பொன் மண் நாங்கள் போய் இறங்கிய விமான நிலயம் ஆபிரிக்கா காங்கிரஸ்…
-
ரோபின் ஐலண்ட்- தென்ஆபிரிக்கா
சிறைப்பறவையின் விசாலமான மனப்பான்மை. நடேசன் தொடர்ச்சியாக முழங்கியபடி கரையை மோதும் நீல நிறமான அத்திலாந்திக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கி கேப்ரவுணில் இருந்து ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தால் நெல்சன் மண்டேலாவை 18 வருடங்கள் சிறைவைத்த ரொபின் ஐலன்ட் என்ற தீவை அடையலாம். பிரயாணசீட்டை பெற்றுக்கொண்டு கேப்ரவுண் துறைமுகத்தில் இருந்து சிறிய படகு, ஆனால் பாதுகாப்பான வசதிகள் கொண்டதில் புறப்பட்டோம். அன்று மழையும் காற்றுமாக பருவகாலம் சோதித்தது. காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்பட்டு மீண்டும் அதே படகில் வந்து…
-
தமிழினி
தமிழினி என்ற சிவகாமி போரின் பின்னர் கைதாகி விடுதலையாகும் வரையில் அவர் ஒரு பெண்போராளி என்றே பரவலாக அறியப்பட்டிருந்தார். வெளியே வந்த பின்னர் பதிவுகளில் அவர் எழுதிய சிறுகதையின் மூலம் அவருடைய இலக்கிய முகம் தெரிந்தது. அவரைப்போன்ற பல பெண்கள் போரில் தமது இலக்கிய– குறிப்பாக கவிதை முகத்தை தொலைத்திருந்தமையும் அறியக்கூடியது. எனினும் அவர்களின் கவிதைகள் போர்க்காலத்தில் பதிவான வெளிச்சம் போன்ற இதழ்கள் பரவலாக புகலிட நாடுகளில் கிடைக்கவில்லை. தமிழினியின் இலக்கிய முகத்தை அழுத்தமாக பதிவுசெய்துள்ள இந்த…
-
தமிழினியின் பன்முகம்.
நடேசன். ‘இயல்பான மென் உணர்வு கொண்ட மனிதர்கள் வாழ்வின் கடினமான தருணங்களை எப்படிக்கடந்து போகிறார்கள் என்பதை அருமையாக சித்தரிக்கும் இந்தக் கதையுடன் எனது கதையை ஒப்பீடு செய்தமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்களது வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.’ ‘Thamilini Jayakumaran தமிழினினி முகநூல் நண்பராகியது அவரது சிறுகதையை வாசித்துவிட்டு நான் படித்த ஆங்கிலக்கதைபோல் இருப்பதாக பாராட்டி எழுதியதற்கு உடனே நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்தப் போர்க்காலக் கதையை நான் ஏன் இரசித்தேன்…
-
வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி
பேராசிரியர் கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூலுக்கு ” மாக்ஸீயக்கல்லறையிலிருந்து குரல் ” – என்று எதிர்வினையாற்றியவரும் விடைபெற்றார். இலக்கிய முகாம்களில் பேசுபொருளான அந்த ஆளுமையின் மதிப்பீடுகள் காலத்தையும் வென்றுவாழும் முருகபூபதி – அவுஸ்திரேலியா நேற்று 21 ஆம் திகதி மெல்பனில் சிறிய பயணத்தில் இருந்தேன். நண்பர் நடேசன் தொடர்புகொண்டு, ” இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் மறைந்துவிட்டார் ” என்ற அதிர்ச்சியான தகவலைத்தந்தார். இதில் கவனிக்கவேண்டியது, ” வெங்கட்சாமிநாதனும் ” என்ற பதம்தான். வெ.சா. மறைந்தார்…
-
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்
அரிதாரம் பூசியவர்கள் ஆடி முடித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் திரையுலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடிகர்கள் கூட்டம் செய்தது என்ன…? பதுக்கும் பணத்தை உரியமுறையில் பயன்படுத்தியிருந்தால் நான்கு கோடி ரூபா கடன் வந்திருக்காதே….!!!! முருகபூபதி – அவுஸ்திரேலியா தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ஒருவாறு நடந்து முடிந்திருக்கிறது. என்றைக்கும் இல்லாதவாறு இந்தத் தேர்தல் செய்திகள், தமிழக ஊடகங்களில் ஊதிப்பெருகியமைக்கு களத்தில் இறங்கிய சரத்குமார் அணியும் பாண்டவர் அணியென்று வர்ணிக்கப்பட்ட விஷால் அணியும்தான் காரணம். ஊர் இரண்டுபட்டால்…
-
சிட்னியில் பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி ” வெளியீடு
படித்தோம் சொல்கின்றோம் சர்வதேசம் எங்கும் ஒலிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் முடிவுறாத முகாரி ஈழத்து புங்குடுதீவிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிவரையில் தொடர்ந்து வரும் ஒரு கவிஞனின் ஆத்மக்குரல் முருகபூபதி மாறிவிட்ட நம்தேசத்தில் இன்னம் எவ்வளவு காலம்தான் இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி நெஞ்சில் உருண்ட கேள்வியோடு என் பிஞ்சுக்குழந்தையைப் பார்க்கிறேன். முகாரி அறியாத மகிழ்வோடு நீலாம்பரி இசைத்துக்கொண்டிருக்கிறது. இலங்கையில் கடலை அண்டிய புங்குடுதீவிலிருந்து கடல் சூழ்ந்த கண்டம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து, கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் செ. பாஸ்கரனின் முதலாவது…
-
டேவிட் அய்யா
டேவிட் அய்யாவைத் தெரிந்த பலர், அவர் வாழ்வையும் பணிகளையும் தெரிந்த பலர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள தமிழ் வானொலிகளில் எத்தனை அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன….? தமிழ் அமைப்புகள் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினாலும் எத்தனைபேர் வருவார்கள்….? அவர் வாழ்வை விமர்சனத்துடன் பார்த்தாலும் அவர் மேற்கொண்ட பணிகளை மறந்துவிட முடியாது. முருகபூபதி