பகுப்பு: Uncategorized
-
மெல்பனில் நான்கு நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு
முருகபூபதி கல்லிலிருந்து கணினி வரையில் அனைத்துமொழிகளும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இனிவரும் யுகத்தில் மொழிகள் எதில் பதிவாகும் எனக்கூறமுடியாது. ஆனால் மொழிகள் வாழும். மறையும். வாசகர்களிடத்திலதான்; மொழியின் வாழ்க்கை தங்கியிருக்கிறது. அதனால்தான் வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த நூற்றாண்டில் மக்கள் வாசிப்பதற்காக தேர்ந்தெடுத்துள்ள சாதனங்கள் இலகுவாகிவிட்டது. அவற்றில் படிக்கலாம். பார்க்கலாம். ரசிக்கலாம். சிரிக்கலாம், கோபிக்கலாம். உடனுக்குடன் பதில்களையும் பதிவேற்றலாம். ஆயினும் அச்சில் வெளியாகும் படைப்புகளுக்கும் பத்திரிகை இதழ்களுக்கும் மதிப்பு இன்னமும் குறையவில்லை. இணையத்தளங்கள்…
-
ஆழியாள் – மதுபாஷினி
திரும்பிப்பார்க்கின்றேன் திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன் பயணித்த ஆழியாள் மதுபாஷினி அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளின் துயர்மிகு வாழ்வின் பக்கங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழர் வாழ் நிலங்களில் புதிய பரிணாமமாக ஆறாம் திணையை ஆய்வுக்குட்படுத்தும் ஆளுமை முருகபூபதி பால்ய காலத்தில் அவுஸ்திரேலியாவை அப்பிள் பழங்களின் ஊடாகத்தான் அறிந்துகொண்டேன். வெளியே வர்த்தகத்திற்கு செல்லும் அப்பா, திரும்பிவரும்பொழுது வாங்கிவரும் அப்பிள் பழங்களை அவுஸ்திரேலியா அப்பிள் என்றுதான் அறிமுகப்படுத்துவார். எனது மகனுடன் அவனது பதினோரு வயதில் இலங்கை சென்றபொழுது, கொழும்பு புறக்கோட்டையில் நடைபாதை வர்த்தகர்கள், ”…
-
வரவிருக்கும் எனது புத்தகத்திற்கான முன்னுரை
தமிழ் இலக்கியத் தோட்டத்தில் எஸ்.பொ. என்ற பொன்னுத்துரை நீண்டு பருத்து அறுபது வருடங்கள் ஓங்கிவளர்ந்து கிளைவிட்ட வேப்பமரம். அவரால் வெளிவந்த பிராணவாயுவைச் சுவாசித்து எழுதத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். படிப்பறிவற்ற மத்துயுவை ஒரு தேவதை கைகளைப் பிடித்து விவிலியத்தை எழுதுவதாக இத்தாலியில் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று உண்டு. அதேபோல என் போன்றவர்களின் கையைப் பிடித்து இலக்கியத்தின் ஏடு தொடக்கியவர் அத்துடன் பல வருடங்கள் துரோணராய் இருந்தார் அவர். அவுஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகை நடத்திய காலத்தில் நான் எழுதிய…
-
அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதம்
எக்ஸைல் 1984 நடேசன் இராசா ஒருவர் தமது ஊரில் தான் பார்த்திராத பழத்தை கொண்டு வந்து காண்பித்தால் இளவரசியை திருமணம் செய்துவைக்கவிருப்பதாகவும், ஆனால் அந்தப்பழம் பற்றி நான் அறிந்திருந்தால் அதையே கொண்டு வந்தவனின் வாயில் திணித்து அனுப்புவதாகவும் அறிவித்தார். பலர் திராட்சை, வாழை என பலதரப்பட்ட பழங்களைக் கொண்டுவந்து காண்பித்தபோது, அவைகளை தான் அறிந்திருந்திருப்பதாக சொன்ன இராசா அவர்களது வாய்களில் அவற்றைத்திணித்து அனுப்பினார் . அவர்கள் சிரித்தபடியே சென்றார்கள். ஒருவன் அன்னாசிப்பழத்தை கொண்டுவந்தான் அப்பொழுதும் இராசா இதை…
-
வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் – வாசிப்பு அனுபவப்பகிர்வு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 – 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neghbourhood House ( 36 – 42 Mackie Road, Mulgrave – Vic – 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள…
-
எஸ். பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் – நடேசன்.
27-11-2015 ல் மறைந்த இலங்கை தலைமை இலக்கியவாதி எஸ் பொவின் மறைவை நினைவு கூர்ந்து அவரது ‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற சுயசரிதை நூலை முன்வைத்து வெளிவரும் கட்டுரை இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட எஸ் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல். இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட இரண்டு பாகங்களையும் நான் ஏன் படிக்கவேண்டும்? படித்தால் என்னிடத்தே வைத்திராமல் அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சொல்லவேணடுமென்பது என்ற முக்கியமான கேள்விக்கு நான் பதில் தரவேண்டும். பதிலை எனது கூற்றாகச் சொன்னால் அது…
-
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா…?
” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்த ஈழநாடு குகநாதன். அவதூறுப் பசளையிலும் துளிர்த்தெழுந்த ஊடகச்செடியின் நிழலில் சில நினைவுகள் திரும்பிப்பார்க்கின்றேன். முருகபூபதி பாடசாலையில் உயிரியல் படித்தபொழுது ஒரு தாவரம் உயிர்வாழ்வதற்கு என்னவேண்டும்…? என்று ஆசிரியர் சொன்னபோது, மண், நீர், காற்று, சூரியவெளிச்சம் என்று விளக்கினார். எங்கள் வீட்டில் ரோஜாச் செடிகளையும் கத்தரி, தக்காளிச் செடிகளையும் பாட்டியும் அம்மா, அக்காவும் வளர்த்தார்கள். தாத்தா ஒரு மல்லிகைச் செடியை வளர்த்து அதற்கென பந்தலும் போட்டார். அத்துடன்…
-
டொக்டர் பிரமோத் கரன் சேத்தி நினைவுகள்
எக்ஸைல் 1984 நடேசன் தமிழர் மருத்துவ நிதியத்திற்கு சிறிது சிறிதாக பணம் சேர்ந்தபோது எமது நடவடிக்கைகளை அகலப்படுத்த முயற்சித்தோம். அப்போது எனது மனைவி சியாமளா மட்டும் மருத்துவ நடவடிக்கைகளை கவனித்தவண்ணமிருந்தார். அதிகமாக மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தியவர்கள் எமக்கு அருகில் இருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணியினர். அதைவிட அந்தப் பகுதியில் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த இலங்கைத் தமிழர்களும் சிகிச்சைக்காக வந்தார்கள். அயலில் இருந்த சென்னை வாழ் தமிழர்களும் வரும்போது எமக்கு வேலைப்பளு கூடியது. மருத்துவ அறிவை…
-
பயங்கரவாதம் .
> பாரிசில் இறந்த அப்பாவி மக்களின் இறப்பை நினைவு கூருகிறேன். அதேவேளையில் எதிர்காலத்தையும் எண்ணி அஞ்சவேண்டியுள்ளது. காரணம் நமக்கு பல பாடங்கள் தெரிந்திருக்கிறது. இடதுசாரிகளின் வர்க்கப்போராட்டத்தில் நூறு வருடங்களுக்கு முன்பாகவே பயங்கரவாதத்தை எதிர்த்தவர் லியோன் ரோக்ஸி (Leon Trotsky)) இவர் மூன்று காரணங்களைக் கூறினார். 1. ஏற்கனவே துன்பப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுக்கும். 2. வன்முறையையும் அடக்குமுறையையும் ஆளும் வர்க்கத்திடம் மேலும் மேலும் எதிர்பார்க்கவேண்டிவரும். 3. எல்லாவற்றிலும் முக்கியமாக மக்கள் மத்தியில் தனிமனிதர்களின் செயல்கள் வரவேற்புபெற்று…
-
சாத்திரியின் ஆயுத எழுத்து
படித்தோம் சொல்கிறோம் முருகபூபதி தாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார். கிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது: ” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா,…