
கவிதைகளில் எனக்கு பெரிதாக ஆழ்ந்த ஈடுபாடு இல்லை.ஆனால், கையில் கிடைத்ததை கவனமாகப் பார்ப்பவன்.அப்படிப் பார்த்தபோது“வசந்தம் வராத காட்டில் பறவைகளின் அழைப்பு”என்ற கவிதைத் தொகுப்பு என் கவனத்தை அதில் உறைய வைத்தது.
ஜெர்மனியிலிருந்து பிரசாந்தி சேகரத்தின் மொழிபெயர்ப்பு மிகவும் அழகாகவும், இயல்பாகவும் இருந்தது.அதில் இடம்பெற்ற ஒரு கவிதை என்னை உண்மையிலேயே அதிர வைத்தது.அந்தக் கவிதையின் பின்னணி ஒரு கிரேக்கப் புராணக் கதை.கிரேக்கத் தெய்வமான சூயஸ் (Zeus), ஸ்பார்டாவின் அரசன் டைண்டரியஸ் (Tyndareus) அவர்களின்அழகிய, திருமணமான மனைவி லீடா (Leda)வைப் பார்த்து மயங்குகிறான்.
லீடா ஓடையருகே இருந்தபோது, சூயஸ் ஒரு அன்னமாக அவளருகே வருகிறான்.அந்த அன்னத்தை ஒரு கழுகு துரத்துகிறது. தன் உயிர் காக்க அன்னம் லீடாவின் மடியில் விழுகிறது.கருணையுடன் லீடா அந்த அன்னத்தை அணைக்கிறாள்.அந்த அணைப்பிலேயே இருவரும் ஒன்றாகிறார்கள்.அன்றிரவு,தன் கணவனான அரசனுடன் லீடா உறவு கொள்கிறாள். பின்னர் அவள் இரண்டு முட்டைகள் இடுகிறாள்.அந்த இரண்டு முட்டைகளிலிருந்து இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர்.ஒன்று சூயஸின் விதை, மற்றொன்று மன்னனின் விதை.அந்தக் குழந்தைகளில் ஒருத்தி ஹெலன்.அவளை டிராய் நாட்டின் இளவரசன் கடத்திச் சென்றதால்தான்புகழ் பெற்ற ட்ரோஜன் போர் மூண்டது.
இந்தக் கிரேக்கப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைஇந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .இன்னும் ஒரு விடயம்—இந்தக் கவிதையை வாசிக்கும் போது இது மொழி பெயர்ப்பு என்று எங்கும் உணர முடியவில்லை. அது முழுவதும் பிரசாந்தியின் மாயக் கரம் கொண்டு எழுதிய மொழியாகும் .


பின்னூட்டமொன்றை இடுக