வெளிகள் ஆயிரம்.

நல்லையா அமிர்தநாதன்.

வெளிகள் ஆயிரம்(ஈழத்து இலக்கிய பிரதிகள் மீதான விசாரணை) என்ற நூல் படிக்க கிடைத்தது.

ஈழத்தில் பிறந்து அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் விலங்கு வைத்தியரான நொயல் நடேசன் விசாரணை என்ற பெயரில் அறுவை (சிகிட்சை) செய்கின்றார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் படைப்பாற்றல் கொண்ட நடேசன் சிறந்த கதை சொல்லியாகவும் எனக்கு புலப்படுகின்றார்.

17 நாவல்கள் கொஞ்சம் சிறுகதைகள் சில கவிதைகளை குறுக்கு விசாரணை செய்துள்ளார்.

என்னவொன்று
எங்கே முடியுமோ அங்கேயெல்லாம் தன் புலி எதிர்ப்பை பதிவிட்டு போகிறார் நொயல் நடேசன்.
அதனை நீக்கி விட்டு கதையை வாசித்தால்
வெளிகள் ஆயிரம்
முதல் தரம்.

(தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’
எஸ்.பொ.வின் ‘தீ’, ‘சடங்கு’
விமல் குழந்தைவேலின் ‘கசகரணம்’
ஆர்.எம்.நெளஸாத்தின் ‘கொல்வதெழுதல் 90’
அ.பாலமணோகரனின் ‘நிலக்கிளி’
மு.பொ.வின் ‘சங்கிலியன் தரை’
எஸ்.ஏ.உதயனின் UP 83
அருந்ததியின் ‘ஆண்பால் உலகு’
சோபாசக்தியின் ‘இச்சா’
ஜீவ முரளியின் “லெனின் சின்னத்தம்பி’
தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’
சிவ ஆருரனின் “யாவரும் கேளீர்’
ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்’
பத்திநாதன் பர்னாந்து ‘திசையறியாப் பயணங்கள்’
அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்பு’
ஜெ.கே.ஜெயக்குமாரனின் ‘கந்தசாமியும் கலச்சியும்’)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.