கனடாவில் வாழும் எல்லாளனின் போராடக் குறிப்புகள் என்ற சிறிய நூலில் புதிய விடயங்கள் அறிய முடிந்தது. Telo புலிகள் அழிக்கும் போது பிரபாகரன் திருகோணமலையில் உள்ள Telo இயக்க போராளிகளை கொல்ல இட்ட கட்டளையை காதால் Eprlf வயர்ல்ஸ் மூலம் கேட்டேன். அப்போது ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பலகாலம் விட்டிருந்தத புகைப் பழக்கம் விட்டு மீண்டும் புகைத்தேன். ஆனால் அதற்கு முன்பே மனோ மாஸ்டர் கொலை ,மற்றவர்கள் கொலைகள் எந்த முக்கிய காரணமும் இல்லாது செய்யப்படுகிறது என்ற தகவல் இங்கே ஆதாரத்துடன் தரப்படுகிறது.
ஆரம்பத்தில் பெண் போராளிகள் இல்லாமல் இருந்த LTTE இயக்கத்தில் பிற்காலத்தில் Telo வில் இருந்து பிரிந்த பெண் போராளிகள் LTTE முதல் பெண் போராளிகள் ஆகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் பிற்காலத்தில் சோதியா என்பவர். இதைவிட இவர்களை LTTE பேசி கொண்டு வந்தவர் நிர்மலா நித்தியானந்தன் என்ற தகவல் இங்கே உள்ளது. அத்துடன் பாதர் சின்ராஜா போன்றவர்கள் இந்த நாடகத்தில் பாத்திரமாக இருந்திருக்கிறார். புலி இயக்கம் போன்ற ஒரு கொள்ளிவாய் பிசாசை பலப்படுத்தி சமூகத்தை வேரறுத்ததில் இப்படியான அறிவுஜீவிகள் பங்கு உள்ளது என்பது மறுக்க முடியாது. இவர்கள் தங்கள் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இதை வெளியில் சொல்லி உயிரை பறிகொடுத்த ரஜனி திருநானகம போன்றவர்கள் நமது உண்மையான மாவீரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எல்லாளன் போராட்ட குறிப்புகள் படித்தபோது புலிகள் மட்டும் அல்ல மற்றைய இயக்கங்கள் எவ்வளவு பொறுப்பு அற்ற தன்மையாக நடந்துள்ளார் என்பது தெரிகிறது.
ஆனால் புலிகள் அவர்களை தடை செய்து விட்டு ,மொத்த கொலை வியாபாரத்தின் சொந்தக்காரர்கள் ஆகிறார்கள்.
தமிழ் மக்கள் தேர்தலில் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டும் அல்ல ,அவர்களின் போராளிகள் தேறாதவர் என்பதே 75 கால வரலாறு நமக்குத் தரும் பாடமாகவும்.
பின்னூட்டமொன்றை இடுக