புஸ்பராணி :நினைவஞ்சலி

Mrs Rajeswary Balasubramanian

தமிழ் இன விடுதலையின் ஆரம்ப பெண் போராளி எழுத்தாளர் சகோதரி புஸ்பராணி சிதம்பரி அவர்களின் நினைவஞ்சலிக்கான எனது சிறு குறிப்பு. 5.7.25

எங்களை விட்டு மறைந்து விட்ட சகோதரி புஸ்பராணி சிதம்பரி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்பான புஸ்பராணி அவர்களுக்காக இன்று நடத்தும் ஞாபகார்த்த அமைவுக்கு என்னை அழைத்த சகோதரர் கிருஷணரராஜா அவர்களுக்கு எனது மனமார்;ந்த நன்றி. புஷ்பராணியைப்; பற்றி நினைவஞ்சலி உரையாற்ற இங்கு வந்திருக்கும் தகமைகளுக்கும்,அதைக் கேட்க வந்திருக்கும் அனைவருக்கும்; எனது அன்பான வணக்கங்கள்.

புஸ்பராணி; எங்களைவிட்டு மறைந்த நாளான 17.4.25 லிருந்து அவரின் ஞாபகார்த்தமாக இன்று வரை நடந்து கொண்டிருக்கும் பல கூட்டங்களிலிருந்து அவர் எங்கள் தமிழ் சமூகத்தில் எத்தனை தாக்கத்தையுண்டாக்கியிருக்கிறார் என்று தெரிகிறது.

நான் அவரை ஒன்றிரண்டு இலக்கிய சந்திப்புக்களிலும் பெண்கள் சந்திப்புக்களிலும் நேரடியாகச் சந்தித்துப் பழகியிருக்கிறேன். ஆனால் அவர் நோயப்;வாய்ப் பட்ட காலத்தில் சித்திரை மாதம் பதினோராம்; திகதிவரை பல தடவைகள் பேசியிருக்கிறேன். அவரின் நலத்தைப் பற்றி விசாரிக்க நான் அழைத்தபோது, அவரின் நலம் பற்றிய ஏக்கங்களும், அதற்கப்பாற் தொடரும் போராட்ட வாழ்க்கையின் பல கோணங்களையும் பேசினார்.

அப்போது தெரிந்தது அவர் ஒரு களங்கமற்ற மனம்படைத்த பெண். வாழ்க்கையில் இளமையிலிருந்து இறக்கும் வரை ஏதோ ஒரு போராட்டத்திற்கு வாழ்நாள் முழுதும் இடையறாத முகம் கொடுத்த இரக்கத்திற்குரிய ஒரு அருமையான பிறவியான அவருக்கு எனது மனமார்ந்த நினைவஞசலிகள்.

ஒவ்வொரு மனிதர்களும் பன்முக அடையாளம் கொண்டவர்கள். பொது வெளியில் தெரியப் பட்ட விடயங்களால் அறிமுகமான முகத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவங்களின் அத்தனை உணர்வுகளையும் யாரும் அளவிடமுடியாது. வாழ்க்கைப் பயணத்தில் நடந்த கட்டகால நிகழ்வுகளால் உண்டான அறிமுகம் அந்த மனிதனின் வாழ்க்கைச் சரித்திரத்தை உலகத்துடன் இணைக்கிறது.

அதுதான் அவரது ‘பரோபைல்’; அதாவது சுயவிபரமாகிறது. ‘தமிழ் இன விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியான ஒரு வீரப் பெண்ணாக’ மட்டும் அந்த சுயவிபரம் பொது தளத்திலிருக்கிறது.

‘’மலரரசி’’ என்ற பெயரில் 1969களில் சுதந்திரன்,லண்டன் முரசு பத்திரிகைகள்,வானொலி நிகழ்வுகள் போன்றவற்றில் எழுத ஆரம்பித்தாகப் பதிவிட்டிருக்கிறார். 1973ல் தமிழர் கூட்டணியுடன் தொடர்பு வருகிறது. பக் 43ல் ‘அண்ணன் தியாகராஜாவுக்குப் பெண்கள் பொதுவெளியில் இயங்குவதை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தது’ என்று பதிவிட்டிருக்கிறார்.

பக் 48ல் ‘வீர வியட்நாமின் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போர்>வங்காளதேசத்தின் விடுதலைப்போர்>

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அதிரடித் தாக்குதல்கள்> நாட்டின் தெற்குப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) நடத்தி முடித்த ஆயதம் ஏந்திய கிளர்ச்சிகள் எல்லாமே தமிழ் இளைஞர்களை ஆயதப் போராட்டத் திசையை நோக்கி உந்தித் தள்ளிய புறக் காரணிகளாகவிருந்தன.வடபகுதியில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப் பட்ட சிறியளவிலான ஆயதப் போராட்டமும் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுத்திருந்தது’ என்கிறார்

1981ல்அரசியலைத் துறந்து 1986 தொடக்கம் பாரிஸில் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.அக்கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப்; போராட்டத்தில்,;; ஒருகாலத்தில் தன்னைப்போல தங்களையும் இணைத்துக் கொண்ட ஸ்ராலின் ஞானம்>விஜி> ஷோபா சக்தி போன்றோரின் தூண்டுதலால்’ தனது ‘அகாலம்’ புத்தகத்தை’ எழுதியதாகச் சொல்கிறார். அதை எழுத மிகவும் சிரமப் பட்டகால கட்டத்தில்>கேரளத்து ‘நக்ஸலைட்’ போராளி அஜீதா எழுதிய ‘’ நினைவுக் குறிப்புகள்’’படித்தாராம்.

இதைப் பற்றி இவர் தனது ‘அகாலம்’நூலின் பக்கம் 31-32ல்ச் சொல்லும்போது’ ‘நாங்கள் இருவருமே இளம் வயதிலேயே காவற்துறையின் சித்திரவதைகளை எதிர்கொண்டு சிறைகளில் அடைபட்டோம். இருவரது குடும்பங்களுமே போராட்டத்தில் தங்களை முழவதுமாக இணைத்துக் கொண்டிருந்தார்கள். அஜிதா தனது பெற்றோர்களுடன் நான் எனது தம்பி தங்கைகளுடன் சிறையில் அடைக்கப் பட்டேன். சமூகத்தில் இருவருக்குமே கொள்ளைக்காரிகள் என்ற பெயருமிருந்தது. நாங்கள் இருவரும் இப்போது எங்களது தீவிர அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விலகியிருக்கிறோம்.’

‘தோழர் அஜீதாவின் போராட்டத்திற்கு சிந்தாந்த வழிகாட்ட. மா சே துங் என்ற மாபெரும் தலைவர் இருந்தார். சாரு மஜூதார் போன்ற அனுபவசாலிகள் அந்தப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார்கள்.ஆனால் எங்கள் போராட்டத்திற்கு அவ்வாறு சிந்தாந்த வழிகாட்டிகளும்

அனுபவசாலிகளுமிருக்கவில்லை.இளையவர்களான நாங்களே எங்களுக்கான தடங்களைப் புதிதாகச் சிருட்டிக்க வேண்டியிருந்தது’’ என்ற சரித்திர உண்மைகளைப் பதிவிட்டிருக்கிறார்.

;எனக்குத் தெரிந்த விதத்தில் புஸ்பராணியின்; வாழ்க்கைச் சரித்திரம் இலங்கைத் தமிழ்ப் பாராளுமன்றவாதிகளைத் தாண்டிய தமிழ் இளம் தலைமுறையினரால் முன்னெடுக்கப் பட்ட அரசியலின் ஆவணமாகும். அதுதான் அவர் எழுதிய ‘அகாலம’; என்ற புத்தகம்.

அவர் ஒரு பெரிய குடும்பத்தின் மூன்று தமயன்களுக்குப் பின் பிறந்த மூத்த பெண்மகள். தமிழர் குடும்பங்களில் மூத்த மகளுக்குள்ள அளப்பரிய அன்பும் ஆதரவும் சொல்லிலடங்காது. அந்தச் சூழ்நிலையில் வளர்ந்து> அவர்கள் மூலம் பன்முக வாசிப்புகளையும் உள்வாங்கிக் கொண்டு> வெளியுலகத் தொடர்பை ஆரம்பித்தவர்.

அதன் நீட்சியால்; தனது தம்பி புஸ்பராஜாவுடன்>பழகிய நண்பர்களால் ஏற்பட்ட உந்துதலால் அரசியல் பாதையில் காலடி எடுத்து வைத்தவர்.

அவரிடமிருந்த நேர்மையான உளவியல் சக்தியுடன் எப்படி அவர்; கடைசிவரை அவரின் வாழ்க்கையின் பன்முகப் போராட்டத்தைத் தொடர்ந்தார் என்பதை உணர்ந்து எனது மனம் பலவேளைகளில் படாதபாடு பட்டது என்பதை இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அவரின் அனுபவங்கள் எப்படி அவரைப் பக்குவப்படுத்தியிருக்கிறது அதன் நீட்சியாக மிகத் துணிவாகப் பல உண்மைகளைப் பதிவிட்டுச் சென்ற புஸ்பாவுக்கு எனது சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

மையிலிட்டி என்ற கிராமத்திற் பிறந்து அரசியற் பக்கம் சார்ந்து> புலோலி வங்கிக் கொள்ளை காரணமாக அகப்பட்டு அதைத் தொடர்ந்து பல கொடுமைகளுக்கு முகம் கொடுத்;தவர்;. முக்கியமாக, யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி காவற்துறையின் மனிதமற்ற சித்திவதைகளால் உடல் பாதிப்பகள் மட்டுமன்றி மனமொடிந்த நிலையையுமடைந்தவா.;

அந்தக் கொடிய வாழ்க்கையின் விரக்கியின் பிரதிபலிப்புகளைத் தாண்டி வெலிக்கடைச் சிறையில் அவர் கண்ட சிறை வாழ்க்கையின் பன்முகத் தன்மையை அவர் விபரித்து எழுதிய விதம் அவர் ஒரு மிகவும் மனதைரியமுள்ள போராளி என்பது மட்டுமல்லாமல் ஆய்வு மனம் படைத்த யதார்ர்த எழுத்தாளர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அதாவது, ஒரு ஓவியனால் தனது சித்திரத்தை வரைய அப்பழுக்கற்ற தளம் தேவை. அதேபோல் ஒரு மனிதன் தனது அனுபவங்களை நேர்மையாகப் பதிய அவனிடம் ஒழிவு மறைற்ற சிந்தனைத் தளமிருக்கவேண்டும்.அதன் பிரதி பலிப்புத்தான் அவரது நூலான ‘அகாலம்’.

சிறை வாழ்க்கையின் விரக்திக்கப்பால் பல தரப்பட்ட பெண் சிறைக்கைதிகளை;ச் சந்திக்கிறார். அதாவது ஜே..வி.பி சிறைப் பெண்>ஒரு பட்டதாரி சந்திரா பெரேரா>ஜே.வி.பியின் ஓரு அணிக்குத் தலைவியாயிருந்த புத்த கோரள (புத்தி அக்கா)> அத்துடன் சுமனா நங்கி போன்ற பலருடன் தொடர்பு வருகிறது மொழிப் பிரச்சினை அவர்களுடனான பெரிய அரசியல் விவாதங்களுக்குத் தடையாகவிருந்தது. ஆனாலும் புஸ்பா தனது பதிவில்

‘’ஓரு போராளிக்குரிய அனைத்தும் ஜே.வி.பி. புத்தி அக்காவிடமிருந்தது. அது என்னிடமில்லை. என்று சொல்ல வெட்கம் எதுவுமில்லை’ என்று நேர்மையாகச் சொல்கிறார்.

.சில வேளைகளில் ஜே.வி.பி பெண்களுடனான மனம் திறந்த அரசியல் விவாதம் போன்றவைற்றைப் படிக்கும்போது எவ்வளவு தூரம் இவர் தனது உயிரோடு பின்னிப் பிணைந்த தமிழ்த் தேசியத்தைத் தாண்டாத அரசியல் அப்பாவியாக இருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.

புஸ்பா தன்னுடன் வெலிக்கடையில் சிறையிலிருந்த பெண்களின் பல தரப்பட்ட பின்னணிக்கப்பால் அவர்களுடனான ஒற்றுமையான கள்ளம் கபடமற்ற உறவுகள் பற்றி எழுதியிருக்கிறாh.

அந்தச் சிறையில் தனது பொல்லாத கணவனைக் கொலை செய்த சித்தி உம்மா> குடித்து விட்டுக் கொடுமை செய்யும் கணவனைக் கொலை செய்த மலையகப் பெண் லூர்து> திருடி விட்டு ஜெயிலுக்கு வந்த மட்டக்களப்பு ரோஸ்மேரி போன்றவர்களைப் பற்றிய இவரது அவதானிப்புக்களும்>சில சிறை அதிகாரிகள் பற்றிய தகவல்களும்; சிறைவாழ்க்கையைத் தாண்டிய பரந்த உலகத்தில் வாழ்ந்த ஒரு கவிஞனை ஞாபகப்படுத்தியது.

ஓரு அரசியல் கைதியாகக் கொள்ளை வழக்கில் வெலிக்கடைக்குச் சென்றவர் பரந்த சிந்தனையுள்ள மனித நேயம் நிறைந்த பெண்ணாக அங்கிருந்து வெளியே வந்தார் என்பது எனது கருத்து.

1981ம் ஆண்டு அவருக்கு விடுதலை கிடைக்கிறது. அவரிருந்த அரசியலமைப்பு சிதைகிறது.அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து விலகிச் செல்கிறார் ‘தமிழ் மக்களுக்கான போராட்டம,அரசியல் தெளிவற்ற வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கொலையும் கொள்ளையுடன் ஆரம்பிப்பதல்ல’ என்பதை உணர்கிறார்.

அப்போது>இவரது அண்ணா அடிக்கடி சொன்னதைப் புஸ்பாவுக்குத் திருப்பச் சொல்கிறார்.

‘’சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது.’’ என்பது இவரின் தமயனின் வார்த்தைகள்.

தனது அகாலம் புத்தகத்தின் 185வது பக்கத்தில் ‘’தமிழின விடுதலை மீதான நேசிப்பு என்னைப் போராட்டத்திற்கு அழைத்து வந்தது.சிறைக் கொடுமைகளோ அல்லது இலங்கை அரசின் கொடுமைகளோ அல்ல>நமது சொந்தப் போராளிகளுக்குள் உருவாகிய சர்வாதிகாரப் போக்குகளும் அராஐகங்களுமே என்னைப் போராட்டத்திலிருந்து துரத்தி விட்டிருந்தன’’ என்று பதிவிட்டிருக்கிறார்.;;

தனது அகாலம் புத்தகத்தின் 191ம் பக்கத்தில்,‘’ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்ற வகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கிறேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம்>மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே.அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறோன்றும் பயன்படாது..’’ என்று பதிவிட்டிருக்கிறார்.;;

அப்படி நேர்மையான கருத்துக்குளுடன் வாழ்ந்து மறைந்த எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சகோதரி புஸ்பராணி அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நினைவஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.