அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்
நூல்கள் பரிசளிப்புத் திட்டம்
(2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)




அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் எமது பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு தலா. 50, 000 இலங்கை ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்களை இப்பொது வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்களையும் இப்போது பார்ப்போம்.
நாவல்: ஒரு நாள் பாவம் ( 168 பக்கங்கள்)
நூலாசிரியர்: சீமான பத்திநாதர் பரணாந்து .
ஜீவநதியின் வெளியீடு
நாவலுக்குரிய பாத்திரங்களை நமக்கு காட்டுவதுடன் கதை நடந்த பின்னணியையும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு நாவலுக்கு தேவையான குணங்களோடு முழுமையாக நிற்கிறது .
சிறுகதைத்தொகுதி: தைலாப்பெட்டி ( 68 பக்கங்கள்).
நூலாசிரியர்: ஏ பீர் முகம்மது
கஸல் பதிப்பகம் ஏறாவூர்
இந்த நூல் சிறிதானபோதிலும் கதைகளில் நவீன பாணியில் சொல்லப்பட்ட 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
கட்டுரை: நாட்டார் வழக்காறுகள் (172 பக்கங்கள்)
நூலாசிரியர்: நாராயணபிள்ளை நாகேந்திரன்
இந்த நூல் கிராமியப் பாடல்களின் தொகுப்பாகவும், அவை பாடப்பட்ட சந்தர்ப்பங்கள், மற்றும் பாரம்பரிய கிரியை முறைகள், மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட சாஸ்திர முறைகள் என்பவைப் பற்றிய ஓர் ஆழமான ஆராய்ச்சியில் பிறந்த படைப்பாகவும் உள்ளது.
கவிதை
மோகனம் – மருதூர்க்கொத்தன் கவிதைகள் (200 பக்கங்கள்)
நூலாசிரியர்: மருதூர்க்கொத்தன்.
கவிஞர், மருதூர்க்கொத்தன் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. மருதூர்க்கொத்தன் அவர்கள் கவிதை நூல்கள் எதனையும் வெளியிடவில்லை.. இதுவே அவரது முதலாவது கவிதை நூலாகும்.
“மருதூர்க்கொத்தன் அறக்கட்டளை”யின் சார்பில், மருதூர்க்கொத்தன் அவர்களது மகன், ஆரிஃப் இஸ்மாயில் வெளியிட்டுள்ளார்.
போட்டிக்குக் கிடைத்திருக்கும் கவிதை நூல்களில், தகுதியின் அடிப்படையில், ” மோகனம்” – “மருதூர்க்கொத்தன் கவிதைகள்” என்ற நூலுக்கு 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கவிதை நூலுக்கான விருது வழங்கப்படுகிறது.
பின்னூட்டமொன்றை இடுக