இன்றய இரவு கண்ட கனவு என்னைத் திடுக்கிட வைத்தது. அமரிக்காவில் எங்கோ நடந்து சென்று மார்க்கட்டிற்க்கு சென்றேன். மீண்டும் திரும்ப எனக்கு தங்கியிருந்த ஹோட்டல் நினைவு வரவில்லை. அப்பொழுது ஒருவன் வழிகாட்டுவதாக அழைத்தான் அவனில் சந்தேகத்துடன் போக மறுத்து கடைக்காரர் ஒருவரிடம் எனது ஹோட்டல் தொலைபேசியை அழைக்கும்படி சொன்னேன் அப்பொழுது அவர் ஹோட்டல் பெயரைக் கேட்டபோது பெயர் சொல்லமுடியவில்லை..
எனது மூளை சில கம்பியூட்ர் மாதிரி செயல்பட மறுத்துவிட்டதே எனப் பயத்துடன் திடுக்கிட்டு எழுந்து மனைவியுடன் கனவைச் சொன்னேன்.
‘”இவ்வளவு புத்தகம் படித்து எழுதும்போது அப்படி மறதி வராது” என்றபோது சந்தோசமாக இருந்தது . மனைவி மட்டுமல்ல வைத்தியரின் வார்த்தை என்பதால் .
இந்தக்கதையின் கருத்தது. புத்தகம் படிப்பது எழுதுவது உங்கள் மூளையை தொடர்ந்து பயிற்சியில் வைக்க உதவும்.
அறிவைப் பெருக்க விரும்பாதவர்களுக்கு குறைந்த பட்சமாக மெயின்ரனஸ் நிலையில் வைத்திருக்க வாசிப்பு உதவும்.
பின்னூட்டமொன்றை இடுக