
இது வரையில் பலர் என்னைத் தங்கள் மதங்கள் பால் ஈர்க்க முனைந்திருக்கிறார்கள். எனது 70 வயதில் ஒரு யூத ராவ்பியும்( rabbi) முயன்றார். நாங்கள் இருக்கும் பகுதி யூதர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி அவர்கள் கோயில், பாடசாலை இங்குள்ளது. எனது ஜிம் கோச் ஒரு யூதர் – அவருக்கும் நெத்தனியாகுவை பிடிக்காது
நான் மதியத்தில் ஜிம் போய்விட்டு அந்த கட்டிடத்தின் முன்னால் மனைவியின் வாகனத்துக்கு காத்திருந்தபோது, அங்கு அங்கு ஒரு யூத ராவ்பி வயதானவர் என்னை அணுகி ‘ இங்கு யாராவது யூதர்களை தெரியுமா?? ‘ என்றார்
நான் சொன்னேன் ‘ ‘அப்படி ஆட்களை நான் பார்ப்பதில்லை. தெரியாது. ‘ என்றேன்.
ஏமாற்றத்துடன் சிறிது விலகிச் சென்றார்.
5 நிமிடங்கள் பின் அவர் என்னிடம் வந்து ‘நீ யூதனா?’ என்றார்
நான் சிரித்தபடி. ‘ இல்லை’ என்றேன்.
எனது தாடியை பார்த்து எத்தியோப்பியா யூதனாக நினைத்திருக்கலாம்.
மீண்டும் ‘கடவுள் நம்பிக்கை இருக்கா?’ என்றார்
‘இல்லை’ எனச் சிரித்தேன் .
அப்பொழுது ‘இதோ இந்த மரங்கள் எல்லாம் எப்படி வந்தது கடவுள் இல்லாது ? ‘என்றார்.
நான் சொன்னேன் ‘இது கவுன்சில் நட்டது, பாருங்கள் ஒரே அளவில் வளர்ந்திருக்கும் ‘என்றது அவரது முகத்தில் , தாடியை மீறி ஏமாற்றம் தெரிந்தது.
பாவம் ஒரு வயதானவருடன் இன்னமும் கண்ணியமாகப் பேசியிருக்கலாம் என நினைத்தாலும் மதம் என்பது போதை, அதைக் காவுவதும் கடத்துபவர்கள் இவர்களே என்று சமாதானம் கொண்டேன்.
பின்னூட்டமொன்றை இடுக