
டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் செயற்பாட்டு அறிக்கை
மேற்படி, அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த 15-09-2024 இல் நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:
1. டாக்டர் நெவில் டி சில்வா மற்றும் டாக்டர் நிரஞ்சலா டி சில்வாவின் ஆகியோரின் அயராத பணிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2. சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளையின் ஆரம்பக்கூட்டம் 2023 பெப்ரவரி 28 அன்று கண்டி, ஏர்ல்ஸ் றீஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 30 அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்கலைக்கழக மாண்புமிகு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், புற்றுநோயியல் ஆலோசக நிபுணர்கள், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், சுகாதார ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உட்பட 30 அழைப்பாளர்கள் சமுகமளித்திருந்தனர்.
3. அன்றையதினமே, இவ்வறக்கட்டளைக்கென (https://www.cancerwelfarelanka.com/) என்ற இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
4.டாக்டர் சியாமளா நடேசன் புற்றுநோய் நலன்புரி அறக்கட்டளை ஒரு தொண்டு நிறுவனமாகும். அதன் நோக்கங்கள் பின்வருமாறு:
(1) புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பணம் கொடுத்து, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கையில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
(2) புற்றுநோயாளிகளின் நோயறிதல், சிகிச்சை மற்றும் முகாமைத்துவ மருத்துவ மையங்களுக்கு நிதியளித்தல்.
(3) புற்றுநோயாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்குதலுக்கான நடமாடும் சேவைகளைப் போன்ற சமூகத்தின் தேவைகளை நோக்கமாகக் கொண்ட சமூக சுகாதார சேவைகளை வழங்குதல்.
(4) நோயாளிகள் சுகாதார சேவைகளைப் பெறக்கூடிய பொது மருத்துவ நிலையங்களுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளை வழங்குதல்
(5) புற்றுநோய்க்கான காரணங்களைக் கண்டறிதல், நோயைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் அத்துடன், அல்லது மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதும், ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிடுதலும்.
(6) நோயைக் கண்டறிதல், சிகிச்சை செய்தல் மற்றும் முகாமைத்துவம் மிகச் சிறந்த நடைமுறைகளில் மிகச் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்தல்
(7) நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை வாங்கி வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களுக்கு வழங்குதல்.
5. அறக்கட்டளையின் வங்கிக்கணக்கு, பேராதனை DFCC வங்கியில் 27 பெப்ரவரி 2023 இல் திறக்கப்பட்டது. டாக்டர் நோயல் நடேசன் அவர்கள் ஆரம்பத்தில் ரூபா: 1,500,000.00 வை கணக்கின் வைப்பில் இட்டார். அதன் பின்னர், நலம் விரும்பிகள் 684,655.92 ரூபாவை வைப்புச் செய்தனர்.
6. இந்த அறக்கட்டளையின் மூலம் இன்றுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு (வாய்வழி, கருப்பை, மார்பகம், கணையம், கர்ப்பப்பை, கழுத்து, தொண்டை முதலிய புற்றுநோய்கள் மற்றும் சர்கோமாக்கள் முதலிய புற்று நோய்களுக்கு) உதவி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தாதிகள், பிற அமைப்புகள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோரின் கோரிக்கைகளின் அடிப்படையில், மருத்து அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உதவி பெறும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பயனாளிகளின் விவரம் பின்வருமாறு:
வாய் புற்றுநோயாளிகள் – 7
கருப்பை புற்றுநோயாளிகள் – 4
மார்பகப் புற்றுநோயாளிகள் – 2
சார்க்கோமா நோயாளிகள் – 2
உணவுக் குழாய் புற்றுநோயாளி — 1
கணைய புற்றுநோயாளி – 1 (Pancreatic cancer patient-1)
கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளி – 1
மொத்தம் ரூ.290,112/= அவசியத் தேவைப்பட்ட நோயாளிகளுக்காக, மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வாங்குவதற்கும், பயணம் மற்றும் பரிசோதனைகளுக்காகவும் இந்தப் பணம் அளிக்கப்பட்டுள்ளது,
———– ———- ————
பின்னூட்டமொன்றை இடுக