புஷ்பராணி.
படித்துக்கொண்டிருக்கின்றேன். நிறுத்தி நிறுத்தியே வாசிக்கின்றேன். இந்நூலில் வரும் கதா பாத்திரங்கள் அநேகமாக எனக்குத் தெரிந்தவர்களாயும், நெருங்கிப் பழகியவர்களாகவும் இருந்ததால் என் நினைவலைகள் பின்னோக்கிச் சிதறுகின்றன .
அந்த ஞாபகங்களில் கிளர்ந்து மூழ்கும்போது என்னையறியாமல் பலவித உணர்வுகள் மனதுக்குள்
.அழுத்துகின்றன.
தமிழ் ஈழ ஆரம்ப போராளிகள் பலருடன் இவருக்கிருந்த நெருக்கம்
பல இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது.
எனக்குள்ளும் ஏதேதோ நினை வலைகள்….
புதிய யுக்தியென்று நினைத்தாரோ என்னவோ தெரியாது சம்பவ ங்களை கோர்வைப்படுத்தி எழுதாமல் அங்கொன்றும் இங்கொன் றுமாக மாறி மாறி எழுதியிருக்கும் விதம் எனக்கு உவப்பாகத் தெரியவில்லை.
வரிசைக்கிரமமாக எழுதியிரு ந்தால் படிக்கநல்லாயிருந்திருக்கும்.
நீங்கள் உங்கள் ஞாபகத்தில் உள்ளவற்றை எழுதினீர்கள் சரி. வெவ்வேறு இடங்களுக்குத் திடீரென்று நீங்கள் பாயும்போது, எங்கள் ஞாபக சக்தியைத் தொலைக்க வழி பண்ணுகின் றீர்கள் தோழர்.

கருத்துக்களைச் சொல்வதில் பின்வாங்காது, யாருக்கும் அஞ்சாது நூலைக்கட்டமைத்திருப்பது எனக்குப் பிடித்திருக்கு.
ஆயுதப் போராளிகளுடன் பழகிய போதிலும், ஆரம்பத்தில் தனக்கு
ஆயுதங்கள் மீது கவர்ச்சியின்றி இருந்ததை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.
இப்படி நாம் எல்லோரும் இருந்திருந்தால் இவ்வளவு அழிவுகளைச் சந்தித்து எல்லாவற்றையும் இழந்து நாடுநாடாக நிலை கொண்டிருக்கமாட்டோம்.
ஆரம்பப் போராளிகளிகளில் ஒருத்தியான நான் ஆயுதப்போராட்டம் மட்டுமே எம் உரிமைகளைப் பெற்றுத்தரும் என்று, மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் ஆணித்தரமாக ,நம்பிக்கையுடன் முழங்கியிருக்கின்றேன். இப்போது நினைத்தால் துக்கமும், ஆயாசமும் மட்டுமே எஞ்சுகின்றன.
உலகத்தில் இடம்பெறும் அழிவுகளுக்கு இந்த ஆயுதங்கள்தான் மூலமாகின்றன என்பதுதான் உண்மை.
எமக்குப் பின்னால் வந்த இயக்கங்களும் அரசியல் புகட்டாது வெறும் ஆயுதக்க லாச்சாரத்தையே பரப்பியதால் கண்ட பலன்தான் என்ன… இருந்தவற்றையும் பறிகொடுத்ததுதான் மிச்சம்.
தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது அங்கு சந்தித்த நல்ல மனிதர்களை அவர் விபரிக்கும் விதம் உண்மை சார்ந்தது . முக்கியமாக நாபாவின் நல்ல குணாதிசயத்தைப் பல இடங்களில் பகிர்ந்திருக்கின்றார்.
தான் படித்த பட்டங்களையெல்லாம் கைவிட்டு, சுகபோகங்களைத் துறந்து திருமணம் செய்யாமலே காந்தீயம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இயங்கி, அதன் பின் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கடைசிக்காலத்தில் வாழ்ந்து மறைந்த டேவிட் அய்யா அவர்கள் பற்றி நூலாசிரியர் எழுதியது மனத்தைத் தொட்டதால் அதை அப்படியே தருகின்றேன்….
“ஐம்பதுகளில் சிறந்த பல்கலைக் கழகமெனக் கருதப்பட்ட மெல்பேர்ன் பல்கலைக் கழகத்தில்
கட்டிடக்கலை பயின்றவர்.பின் இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர். அதன்பின் கென்யாவில் தொழில் புரிந்தவர். ” இதைப் படிக்கும்போது மனம் கசந்தது, இன்றைய தமிழரசியல் பேசுவோரை யெண்ணி ….தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக எப்படியெல்லாம் நாடகமாடுகின்றார்கள்.
எழுத்தறிவில்லாத ஏழ்மையான இளைஞர்களை
இலகுவாக எல்லா இயக்கங்களும் பயன்படுத்தியது உண்மை. அதையும் நடேசன் குறிப்பிடத் தவறவில்லை. அவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தபோதிலும் அதில் இன்று எத்தனை பேர் உயிரோடு வாழ்கின்றார்கள் என்பது தெரியாத சோகம் .
இப்புத்தகத்தைப் படிக்கும்போது என் நினைவுகளும் நீளுவதைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கு.
எம்மவரிடையே கனன்றெழுந்த ஒற்றுமையீனத்தாலும், சரியான அரசியல் தெளிவின்மையாலும் தமிழ் ஈழத்துக்கான எமது போராட்டம் தோற்றுவிட்ட போதிலும் அதன் சாட்சிகளும் ,பிம்பங்களும் ஒருநாளும் அழியப்போவதில்லை.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் வித்தியாசமான ஞாபகங்கள் நிறைய உண்டு. தோழர் நடேசனும தன் நினைவுகளை எம் முன்னே படைத்திருக்கின்றார்.
எழுதக் கூடியவர்கள் கட்டாயம் தம் மனதில் பதிந்தவற்றை வெளிக் கொணருவது அவசியம்.இல்லையேல் எமது சந்ததியினருக்கு பொய்யான வரலாறுகள்தான் மிஞ்சும்.
இவர் படித்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆசிரியர்களின் குணாதிசயங்களை வர்ணிக்கும் விதம் அந்த நாட்களைக் கண்முன்னே குவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது அங்கு சந்தித்த நல்ல மனிதர்களை அவர் விபரிக்கும் விதம் உண்மை சார்ந்தது . முக்கியமாக நாபாவின் நல்ல குணாதிசயத்தைப் பல இடங்களில் பகிர்ந்திருக்கின்றார்.
தான் படித்த பட்டங்களையெல்லாம் கைவிட்டு, சுகபோகங்களைத் துறந்து திருமணம் செய்யாமலே காந்தீயம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இயங்கி, அதன் பின் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கடைசிக்காலத்தில் வாழ்ந்து மறைந்த டேவிட் அய்யா அவர்கள் பற்றி நூலாசிரியர் எழுதியது மனத்தைத் தொட்டதால் அதை அப்படியே தருகின்றேன்….
“ஐம்பதுகளில் சிறந்த பல்கலைக் கழகமெனக் கருதப்பட்ட மெல்பேர்ன் பல்கலைக் கழகத்தில்
கட்டிடக்கலை பயின்றவர்.பின் இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர். அதன்பின் கென்யாவில் தொழில் புரிந்தவர். ” இதைப் படிக்கும்போது மனம் கசந்தது, இன்றைய தமிழரசியல் பேசுவோரை யெண்ணி ….தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக எப்படியெல்லாம் நாடகமாடுகின்றார்கள்.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் வித்தியாசமான ஞாபகங்கள் நிறைய உண்டு. தோழர் நடேசனும தன் நினைவுகளை எம் முன்னே படைத்திருக்கின்றார்.
எழுதக் கூடியவர்கள் கட்டாயம் தம் மனதில் பதிந்தவற்றை வெளிக் கொணருவது அவசியம்.இல்லையேல் எமது சந்ததியினருக்கு பொய்யான வரலாறுகள்தான் மிஞ்சும்.
இவர் படித்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆசிரியர்களின் குணாதிசயங்களை வர்ணிக்கும் விதம் அந்த நாட்களைக் கண்முன்னே குவிக்கின்றன.
சின்ன வயது ஊர் ஞாபகங்கள், சென்னையில் வாழ்ந்த காலங்கள் ,போராளிகளுடன் ஏற்பட்ட பிணைப்புகள், பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிலையான ஓரிடத்தைப் பிடிக்க அவர் பட்ட சிரமங்கள் என்று நூல் விரிகின்றது.
.தமிழ் நாட்டில் போராளிகளுடன் பழகிய காலத்தில் மருத்துவ அமைப்பொன்றை உருவாக் கி நண்பர்களோடும், மனைவியோடும் புரிந்த
பணிகள் பாராட்டுக்குரியவை.
வரிசைக்கிரமமாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும். எல்லோரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் சந்தேகமில்லை.
இந்நூலைப் படிக்கத்தந்த தர்மினிக்கு அன்பும், நன்றியும்.. ❤👍😘
பின்னூட்டமொன்றை இடுக