எமது அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் கவிதா நிகழ்வு
ஆதியில் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாகிய இலக்கிய வடிவம் கவிதை. அது மனித மனமகிழ்விற்காகவே தோன்றிய து .
12 மனிதர்களில் ஒருவன் ஒரு நாள் வழக்கமான வேட்டைக்குப் போகாது தனது குகையில் தங்கிவிடுகிறான். மாலையில் வேட்டையிலிருந்து மீண்டவர்கள் உண்ணும்போது வேட்டைக்குப்போகாது தங்கியவன் அவனது கவிதையால் களைத்திருந்தவர்கள் உணவருந்தியபோது மகிழ்வித்தான் என்கிறார் ஐரிஸ் கவிஞர் ஓஸ்கார் வைல்ட்.
இப்படி சாதாரண மனிதர்கள் மத்தில் உலாவிய கவிதை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பாக பாபிலோனில் Sin -Liqeuninni என்பவரால் அதற்கு முன்பு 800 வருடங்கள் முன்பாக வாழ்ந்த சுமேரியன் Uruk city மன்னனான Gilgamish பற்றி பாடியதே முதலாவது பாடல்களைக் கொண்ட இதிகாசமாகிறது.. நமது இதிகாசங்களுக்குத் தாத்தா போன்றது.
கிறிஸ்துவுக்கு முன்பு 3ம் நூற்றாண்டில் லெஸ்போ தீவில் தோன்றி பெண் புலவர் சாப்போ. அவரது பல கவிதைகள் பிற்காலத்தில் அவரது கவிதைகள் கத்தோலிக்க திருச்சபையால் தடைசெய்யப்பட்டன தற்பொழுது ஒரு கவிதையும் பல துண்டுகளும் மட்டுமே மிகுந்துள்ளது.
பின்னூட்டமொன்றை இடுக