“திருமதி கார்த்திகா கணேசர்.
” பண்ணையில் ஒரு மிருகம்” நாவலை எடுத்தபின் வைக்க முடியவில்லை .அற்புதமாக எழுதி உள்ளீர்கள் . முதல் அத்தியாயம் அவள் உங்களை இழுத்துச் செல்ல உண்மையில் நடப்பதாக உணர வைத்து விட்டீர்கள் . துடித்துப் போய்விட்டேன் . அந்த பாத்திர படைப்பு சமுதாய கொடுமைகளைச் சொல்லவும் , அதே நேரம் கதைக்கும் மெருகு கொடுக்கிறது . ஒரு மிருக வைத்தியர் மாடு சினை படச் செய்யும் உத்தி , வேலையாள் எருதை விட்டு றெஸ்லிங்

ரசிகர் போல எருதுக்கு ஊக்கப்படுத்தும் , எல்லாம் நாம் இதுவரை அறியாத சுவாரசியம் .சாதி என்பது கொடுமை என்பதை உணராது ஏற்று வாழும் கொடுமை , திருமணத்திற்குப் பெண் ஆளாகக் காத்திருப்பவர் ஊர் மேயலாம் . பெண் பெரியவள் ஆனதும் திருமணம் .சமுதாயம் சாதிக் கொடுமை .பால்ய திருமணம் எதையும் தாங்கும் மனோபாவம் . கணவன் தன் குறை என ஏற்காது மீண்டும் ஒரு திருமணம் . உடுக்கச் சேலையும் சாப்பாடும் எண்ணையும் கொடுத்து ஆதரிப்பது பெருந்தன்மை என எண்ணும் சமுதாயத்தை ஆழமாகத் தோண்டி எழுதினீர்கள் . நிறைய ரசித்தேன்.
பின்னூட்டமொன்றை இடுக