நாவல்: உறுபசி.

எஸ். இராமகிருஸ்ணனின் உறுபசியை இரண்டாவது தடவையாக வாசித்தேன்.இறந்த நண்பனை நினைத்து நான்கு நாட்களில் அவனைப்பற்றி அசைபோடும் நண்பர்கள், மனைவி, மற்றும் காதலி என்பவர்களது எண்ணங்களின் தொகுப்பு இங்கு நாவலாகிறது

தங்கை இறப்புக்கு காரணமாகிய குற்ற உணர்வால் தொடர்ச்சியாக சமூகத்தில் தன்னை சமப்படுத்திக்கொள்ள முடியாமல் இளவயதில் இறக்கும் ஒருவனது கதை.

எனக்குப் பிடித்தது சம்பத்தின் பிரேதத்தை சுற்றியும், அதே வேளையில் பின்பாக மலையேறும்போது நண்பர்கள் மன ஓட்டங்கள் மூலமாக இரண்டு தளங்களில் ஒரே நேரத்தில் கதையை நகர்த்துவது.

உறுபசிக்கு முன்பாக நான் வாசித்து முடித்தது தாஸ்தவஸ்கியின நோட்ஸ் புரம் அண்டகிரவுண். அதுவும் கசப்பான ஒரு மனிதனது கதை. அதில் வரும் கதாநாயகனது மனமும், பனியும் குளிருமாக உறைந்த நிலையில் இருந்ததை வாசித்தபோது என்னால் உணரமுடிந்தது.

உறுபசி – படித்தபோது வெம்மையான, எதுவித பச்சையற்ற பாலைவனத்தூடாக கோடைகாலத்தில் நடப்பதுபோல் உணரமுடிந்தது. வெவ்வேறு இடங்களில் வேறுபட்டவர்களால் எழுதப்பட்டாலும் மனிதர்களில் கசப்புகளை வெளிக்கொண்டு வருவதே இருவரது நோக்கமாகும்.

தாஸ்தவஸ்கியின் கதாநாயகன் சந்தித்த பாலியல் தொழிலாளியின் மேன்மையை வெளிகொண்டு கொண்டு வந்ததுபோல் எஸ் இராமகிருஸ்ணன் சம்பத்தைப்போன்ற ஒருவனுடன் குப்பைகொட்டியதை(தமிழ்நாட்டு மொழியில்) ஜெயந்தியின் மேன்மையான( சுயநலக்காரியான யாழினியோடு ஒப்பிடுகையில்) மனத்துக்குள் மேலும் ஊடுருவியிருக்கலாம் என படித்து முடித்தபோது நினைக்கத்தோன்றியது

“நாவல்: உறுபசி.” மீது ஒரு மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.