நாள்: ஓகஸ்ட் 3, 2015
-
ஆற்றோர கிராமத்தில் அவளொரு துரோகி
நடேசன் கடல் நுரை நிறத்தின் மேல் கறுப்பு புள்ளிகளை உடலெங்கும் கொண்ட அந்த பெட்டை நாய் லைட்டு கம்பத்தில் வெண்ணிற கையிற்றினால் இடுப்பிலும் நெஞ்சிலும் பல முறை சுற்றி கட்டப்பட்டிருந்த இளம் வயதுப் பெண்ணின் சடலத்தை முகர்ந்து பார்த்தது.பின்பு அவளது பாதங்களையும் கால்விரல்களையும் நக்கியது. சாலையில் போய்வரும் வாகனங்களினால் வாரியடிக்கப்பட்ட புழதி அவளது தேகத்திலும் அணிந்திருந்த ஆடைமேலும் போர்வையாக போர்த்தி இருந்தது. இடது தோளில் சாhய்ந்திருந்த தலையில் இருந்து தொங்கும் ஒற்றைப்பின்னல்லும் புழதி படிந்து இடைக்கு கீழே…