மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்

Kavaloor Rajadurai

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான காவலூர் ராஜதுரை நேற்று (14-10-2014) மாலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரையின் கதை வசனத்தில் வெளியான பொன்மணி திரைப்படம் இலங்கை தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது.
கொழும்பில் வசீகரா விளம்பர நிறுவனத்தின் இயக்குநராகவும் இயங்கிய காவலூர் ராஜதுரை பல வருடங்களாக அவுஸ்திரேலியா சிட்னியில் தமது குடும்பத்தினருடன் வசித்தார்.

இங்கு இயங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பினரான காவலூர் ராஜதுரை சிறுகதை, விமர்சனம், கட்டுரை, விளம்பரம் முதலான துறைகளிலும் எழுதியிருப்பவர். சில நூல்களின் ஆசிரியருமாவார்.
—–0—-

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.