இலக்கியம் என்பதற்கான நேரடியான ஆங்கில வார்த்தைக்கு லிற்றரிசர் எனவும் கதை சொல்லுவது((Narrative)) என்று விளக்கப்படுகிறது. இங்கு புனைவு, அபுனைவு என்று மேலும் பிரிகிறது. ஆங்கிலத்தில் சரித்திரம் விஞ்ஞானம் எல்லாம் லிற்ரறிசர் என கொள்ளப்படுகிறகு. இங்கே விவிலியநூல் மூல இலக்கியமாக கருதப்படுகிறது அது மட்டுமல்ல ஏராளான இலக்கியத்தின் பிறப்பு விவிலியத்தில் தொடங்குகிறது உதாரணம் மில்டனினின் பரடைஸ் லொஸ்ட்.
தமிழில் இந்தமாதிரியான வார்த்தைச் சிக்கல் கிடையாது. புனைவே அதிகமாக இலக்கியம் என்ற பெயரில் வெளிப்படுகிறது. அதற்காக கட்டுரைகள் சுயசரிதைகள் இலக்கியமாகாது என்பது அல்ல
பெரும்பாலான உலக இலக்கியங்களின் தொடக்கம் இரும்புக்காலமாகும் BC 1300 – 700AD மகாபாரதம், இராமாயணம் வேதங்கள் இக்காலத்தில் வந்தவையாக கணிக்கப்படகிறது.
மகாபரதத்தில் அருமையான தருணம் வருகிறது போரை முடித்து, கௌரவர்களைக் கொன்றவிட்டு , பாண்டவர்கள் தீருதராஸ்ரனைச் சந்திக்கவரும் போது பாண்டவர்களை பெரியப்பா கட்டியணைத்துக் கொள்கிறார். வீமனை கட்டியணத்து கொள்ளும் தருணத்தில் வீமனுக்கு பதிலாக இரும்பு பொம்மையை கிருஸ்ணர் வைக்கிறார். காரணம் புத்திரசோகத்தில் அந்த கட்டியணைப்பில் வீமன் கொலை செய்யப்படலாம் என எதிர்பார்கிறார். அப்படியே இரும்பு பொம்மை நொருங்குகிறது. இதை மறுவாசிப்பாக ஜெயமோகன் அருமையான சிறுகதையொன்றை எழுதியுள்ளார். இரும்பு, தாமரகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் காபனுடன் சேர்த்தால்த்தான் ஆயுதங்கள் மற்றும் கடினப்பொருட்களை செய்யக்கூடிய உறுதியாகிறது அந்த தொழில் நுட்பம் பிற்கால்த்தில்தான் ஏற்படுகிறது.
போர்கள் இலக்கியமாகி அரசர்கள் கதைமாந்தர்கள் ஆக உருவாகுவதற்கு இரும்பை உருக்கிய கொல்லர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.
எகிப்தில் பிரமிட்டுகள் கட்டப்பட்ட அல்லது அந்த பிரமிட்டுகளின் உள்ளே குறியீட்டு மொழிகளில் எழுதப்பட்ட காலத்தில் இரும்பு இருக்கவில்லை
பபிலோனிய இதிகாசம் எபிக் ஒவ் கில்கமிஸ்( Epic Of Gilgamesh ) BC 2800-2600 வாழ்ந்த அரசனின் கதை 600BC காலத்தில் உள்ள நூலகத்தில் இருந்ததால் இது தாமிரகாலத்து (Bronze Age ) (3300-1300) எண்ணமுடியும்
புனைவுகளான வடிவம் கவிதை நாடகம் நாவல் என வரும்போது முக்கியமான இலக்கிய உத்திகள் பாவிக்கப்படுகிறது. அவை படிமம் ((Allegory)) முரண்ணகை ((Ironic) பொருள்மயக்கம் (Ambiguity) என்பவை உத்திகளாக அழகாக்கின்றன.
படிமம்
ஜோர்ஜ் ஓர்வெல் விலங்குப்பண்ணை அரசியலுக்கு படிமமாக்கிறார். தமிழில் பல சிறுகதைகள் பாவிக்கப்படுகிறது. மு தழயசிங்கத்தின் புகழ்பெற்ற தொழுகை எனும் சிறுகதையும் அப்படியானதே. அகதி அந்தஸ்த்து கேட்கிற பெருநண்டு என்ற எனது புனைவுக்கட்டுரையில் நண்டு இலங்கை அகதி மனிதரின் படிமமாகவும் நெப்பொலியன் பிரண்டி அதிகாரமாகவும் வருகிறது.
முரண்ணகை
வண்ணாத்திக்குளத்தில் சித்திரா எனும் சிங்களப்பெண் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வழியில் உள்ள போட்டில் எழுதப்பட்டிருக்கும் ‘யாழ்ப்பாணம் வரவேற்றிருக்கிறது’ என்பதை பார்த்துவிட்டு ‘என்னையும் வரவேற்கிறதா? என அவள் கேட்பது முரண்ணகைக்கு உதாரணம்
(பொருள்மயக்கம்)
‘உனையே மயல்கொண்டு’ நாவலில் சந்திரன் மெல்போனுக்கு போகும்படி ஷோபாவால் சொல்லப்பட்டதால் சந்திரன் மன்னிக்கப்பட்டானா? ஷோபா சேர்ந்து வாழ்வாளா? என்பது பொருள் மயக்கமாக வாசகர் ஊகத்திற்கு விடப்படுகிறது.
இப்படியான உத்திகளே அபுனைவில் இருந்து புனைவை வேறுபடுத்துகிறது.
இலக்கியம் என்பது மனித மனங்களில் உள்ள அழகுணர்வை வெளிப்படுத்தும் ஓவியம் ,சங்கீதம் போன்றது. இதனாலே இலக்கியம் , சங்கீதம் போன்று மனிதர்களின் மூளையில் உள்ள நான்கு பகுதிகளில் ஒன்றான ரெப்பறல் (Temporal Lobe) பகுதியை தூண்டுகிறது. இங்குதான் மனிதர்களின் உணர்சிகளான கோபம், காதல், வெட்கம் , குரோதம் என்ற உணர்வுகள் உருவாகின்றன.
இப்பொழுது தெரிகிறதா? இலக்கியங்களில் காதல் குரோதம் ஏன் பிரதானமாகிறது என்பது?
புனைவு இலக்கிய வடிவங்கள் கவிதை , நாடகம், சிறுகதை, நாவல் எனபன இலக்கிய வடிவங்களில் கவிதை ஆரம்பத்தில் உருவாகியது. இங்கே வார்த்தைகள் அழகுணர்வொடு சந்தங்களுக்காக அடுக்கப்பட்டு உபயோகிக்கப்படகிறது. இதனால் மனத்தில் படிகிறது.
அவுஸ்திரேலிய கலை இலக்கியசங்கத்தில் பேசியது

பின்னூட்டமொன்றை இடுக