மெல்பனில் கலை இலக்கிய விழா 2014

Atlas Logo

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain Highway , BORONIA , Victoria) தொடங்கும் கலை – இலக்கிய விழா இரவு 10 மணிவரையில் நடைபெறும்.
பகல் அமர்வில் இலக்கிய கருத்தரங்கு மற்றும் நூல்களின் விமர்சன அரங்கும் மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியநாடகம் முதலான பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இவ்விழாவில் மெல்பன் – சிட்னி – பேர்த் – பிரிஸ்பேர்ண் ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பகல் பொழுதில் நடைபெறவுள்ள இலக்கிய கருத்தரங்கில் பார்வையாளர்களும் கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இங்கு முன்பு வெளியான தற்பொழுது வெளியாகும் இதழ்களின் கண்காட்சியும் இடம்பெறும்.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்பர்கள் – கலைஞர்கள் – கவிஞர்கள் – படைப்பாளிகள் – ஊடகவியலாளர்கள் – தமிழ் ஆசிரியர்கள் – உயர்தர வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாகப்பயிலும் தமிழ் மாணவர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு: திரு. ஸ்ரீநந்தகுமார் – செயலாளர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.
தொலைபேசி: 04 15 40 5361
மின்னஞ்சல்: atlas2001@live.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.