மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா

LateMaruthoorghani

இலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும் நூல்கள்: மருதூர்க்கனி கவிதைகள் -சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும் – என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும்.
எழுத்தாளர் திரு. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இவ்விழா ஜனாப் ஷிம்ரி புகாரியின் கிரா அத் ஓதலுடன் ஆரம்பமாகும். வரவேற்புரையை மர்ஹ_ம் மருதூர்க்கனியின் மருமகன் ஜனாப் இப்ரகீம் ரஃபீக் நிகழ்த்துவார்.
நூல் ஆய்வுரைகளை கவிஞர்கள் ஜே.கே. என்ற ஜெயக்குமார், ஆவூரான் சந்திரன், கலாநிதி அலவி ஷரீப்தீன் ஆகியோர் வழங்குவர்.
மருதூர்க்கனியின் வாழ்வும் பணிகளையும் சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சியும் திரையில் காண்பிக்கப்படும்.
மருதூர்க்கனியின் இலக்கிய உலகம் என்ற தலைப்பில் மீலாத்கீரனும், மருதூர்க்கனியின் அரசியல் உலகம் என்ற தலைப்பில் எஸ்.நிஜாமுதீனும் உரையாற்றுவர். நூல்களின் சிறப்புப்பிரதிகளை மருதூர்க்கனியின் துணைவியார் ஜனாபா கமிலா ஹனிபா பிரதம விருந்தினர்களுக்கு வழங்குவார்.
மருதூர்க்கனி அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை மருதூர்க்கனியின் புதல்வி மருத்துவ கலாநிதி வஜ்னா ரஃபீக் நிகழ்த்துவர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மருதூர்க்கனியின் மற்றுமொரு புதல்வி லயானா அஸிஃப் நிம்ரி நன்றியுரை நிகழ்த்துவார். இராப்போசன விருந்தும் இடம்பெறும்.
நூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு: மருதூர்க்கனி குடும்பத்தினர் வஜ்னா – றபீக்
0411 670 943 , 0449 925 659
E.Mail: maruthoorghani@yahoo.com

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.